மைக்கேல் கெய்ன்

எ.கா: 13 தேதி: 08-11-16 பொட்டாசியத்தின் சுடர் புகைப்படம்-மதிப்பீடு சுடர் ஒளிக்கதிர் என்பது கனி மற்றும

சர் மைக்கேல் கெய்ன் (Sir Michael Caine) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகர் ஆவார். ஒரு தயாரிப்பாளராகவும் எழுத்தாளராகவும் இவர் அறியப்படுகிறார். கெய்ன் தெற்கு இலண்டனில்[2] 1933 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 14 ஆம் நாள் இவர் பிறந்தார். மாரிசு யோசப் மிக்கில்வொய்ட் சூனியர் என்பது இவரது இயற்பெயராகும். 70 ஆண்டுகால வாழ்க்கையில் 130 க்கும் மேற்பட்ட திரைபடங்களில் நடித்துள்ள இவர் பிரித்தானியத் திரைப்பட நடிகர்களில் முக்கியமான நபராக அறியப்படுகிறார்.[3] வசன உச்சரிப்புகள் மூலம் கெய்ன் பரவலாக அறியப்பட்டார்.

சர்
மைக்கேல் கெய்ன்
Michael Caine

CBE
Sir Michael Caine, 28th EFA Awards 2015, Berlin (cropped).jpg
2015, பெர்லினில் கெய்ன்
பிறப்புமவுரிசு யோசப் மிக்கில்வைட் சூனியர்
14 மார்ச்சு 1933 (1933-03-14) (அகவை 88)
ராதர்யித், இலண்டன், இங்கிலாந்து
பணிநடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1953–தற்போது
வாழ்க்கைத்
துணை
பட்ரிசியா யெயின்சு
(தி. 1955; விவாகரத்து 1962)

சகிரா கெய்ன்
(தி. 1973)
பிள்ளைகள்2
உறவினர்கள்சுடான்லி கெய்ன்(அண்ணன்)
மைக்கேல் கெய்ன்
{{{lived}}}
சார்பு  ஐக்கிய இராச்சியம்
பிரிவு  ஐக்கிய இராச்சியம் இராணுவம்
சேவை ஆண்டு(கள்) 1952–1954
அலகு இராயல் புசிலியர்சு
சமர்/போர்கள் கொரியப் போர்
வலைத்தளம்
http://www.michaelcaine.com/

கெய்ன் 1960 ஆம் ஆண்டுகளில் சூலு (1964), தி இப்கிரசு ஃபைல் (1965), ஆல்ஃபி (1966) உள்ளிட்ட பிரித்தானியத் திரைப் படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். 1969 ஆம் ஆண்டில் வெளியான தி இத்தாலியன் ஜாப் மற்றும் பேட்டிள் ஆஃப் பிரிட்டன் ஆகிய திரைப்படங்களுக்காக' இவர் அகாதமி விருதுக்காகப் பரிந்துரை செய்யப்பட்டார். 1970 ஆம் ஆண்டுகளில் கெய்ன் நடித்த பாத்திரங்களில் கெட் கார்ட்டர் (1971), தி லாசுட் வேலி (1971), சுலூத் (1972) ஆகியவை குறிப்பிடத்தகுந்தன ஆகும். மேலும் சுலூத் திரைப்படத்திற்காக அவர் இரண்டாவது முறையாக அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். மேலும் தி மேன் ஊ வுட் பி கிங் (1975) மற்றும் எ பிரிட்ச் டூ ஃபார் ( 1977) ஆகியத் திரைப்படங்களிலும் நடித்தார். 1980 ஆம் ஆண்டுகளில் எசுகேட்டிங் ரீட்டா (1983) திரைப்படம் வணிக ரீதியில் மட்டுமன்றி விமர்சன ரீதியிலும் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக இவர் சிறந்த நடிகருக்கான பாஃப்டா மற்றும் கோல்டன் குளோப் விருதுகளைப் பெற்றார். 1986 ஆம் ஆண்டில், வுடி ஆலனின் அன்னா அண்ட் அர் சிசுடர்சு திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருதைப் பெற்றார்.

கெய்ன் 1992 ஆம் ஆண்டில் வெளியான தி மப்பேட் கிறிசுமசு கரோ'ல் என்ற திரைப்படத்தில் எபினேசர் சுக்ரூசாக நடித்தார். இந்தக் கதாப்பாத்திரத்தில் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடித்தார். 1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் பிரித்தானிய திரைப்படத் துறை புத்துயிர் பெறுவதற்கு இது வழிவகுத்தது. 1998 இல் லிட்டில் வாய்சு என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக இரண்டாவது முறையாக கோல்டன் குளோப் விருதை கெய்ன் பெற்றார். மேலும் தி சைடர் அவுசிற்கான திரைப்படத்தில் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான இரண்டாவது அகாதமி விருதையும் பெற்றார். ஆசுடின் பவர்சு என்ற பகடி நிகழ்ச்சியில் கெய்ன் நைகல் பவர்சு என்ற கதாப்பாத்திரத்திலும் கிறிசுடோபர் நோலனின் தி டார்க் நைட் திரை வரிசையில் ஆல்பிரட் பென்னிவொர்த்தாகவும் நடித்தார் . நோலனின் தி பிரெசுடீச் (2006), இன்செப்சன் (2010), மற்றும் இன்டர்சிடெல்லர் (2014) உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.அல்போன்சோ குயூரானின் சில்ட்ரன் ஆஃப் மென் மற்றும் கிங்சுமேன்: தி சீக்ரெட் சர்வீசு போன்ற திரைப்படங்களிலும் இவர் நடித்தார்.

அவர் தோன்றி நடிக்கும் படங்கள் பிப்ரவரி 2017 நிலவரப்படி உள்நாட்டில் 3.5 பில்லியன் டாலருக்கும், உலகளவில் 8 7.8 பில்லியனுக்கும் அதிகமாக வசூலித்துள்ளன [4]. கெய்ன் பாக்சு ஆபிசில் அதிக வருமானம் ஈட்டிய இருபதாவது நடிகர் என்ற இடத்தில் உள்ளார்[5].

மேற்கோள்கள்தொகு

  1. "Michael Caine". Front Row Interviews. அணுகப்பட்டது 18 January 2014.
  2. Michael Caine, "What's It All About" (Ballantine Books, 1994)
  3. "Michael Caine".
  4. "Michael Caine – Box Office Data Movie Star". The-numbers.com.
  5. "People Index." Box Office Mojo. Retrieved 8 December 2018
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_கெய்ன்&oldid=3189069" இருந்து மீள்விக்கப்பட்டது