கடல் (திரைப்படம்)

மணிரத்னம் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கடல் (ஒலிப்பு) இயக்குனர் மணி ரத்னம் இயக்கி, தயாரித்து ஃபெப்ரவரி 1 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படம். தமிழின் முதன்மையான எழுத்தாளர் ஜெயமோகன் கதை, வசனம் எழுதியுள்ளார். ஏ. ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து படத்தின் பாடல்கள் திசம்பர் 15,2012 வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன[1]. நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக் கதை நாயகனாகவும் நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நாயர் நாயகியாகவும், அர்ஜூன், அரவிந்த் சாமி, லெக்ஷ்மி மஞ்சு, தம்பி ராமையா போன்றோர் முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2013 பிப்ரவரி 1 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது[2]. இந்த திரைப்படம் தெலுங்கிலும் மொழிபெயர்க்கப்பட்டு கடலி எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது[3][4].

கடல்
இயக்கம்மணி ரத்னம்
தயாரிப்புமணி ரத்னம்
மனோகர் பிரசாத்
கதைமணி ரத்னம்
ஜெயமோகன்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்பு
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "'Kadal' audio creates history!". Times of India. December 15, 2012. பார்க்கப்பட்ட நாள் December 15, 2012.
  2. "Kadal - The Film". Kadal - The Film (Official Page) on Facebook. 23 December 2012. பார்க்கப்பட்ட நாள் 23 December 2012.
  3. "Mani Ratnam's Kadal becomes Kadali". Behindwoods. September 18, 2012. பார்க்கப்பட்ட நாள் September 18, 2012.
  4. Reddy, Lohit. "'Kadal' to be dubbed in Telugu as 'Kadali'". RealBollywood.com. பார்க்கப்பட்ட நாள் 4 November 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_(திரைப்படம்)&oldid=4154069" இலிருந்து மீள்விக்கப்பட்டது