விமல் (நடிகர்)
விமல் (பிறப்பு: 25 செப்டம்பர், 1979)[2] தமிழ்த் திரைப் படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவர். விஜய் நடித்துள்ள கில்லி மற்றும் குருவி மற்றும் அஜித் குமாரின் கிரீடத்திலும் நடித்தார். தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய பசங்க திரைப்பட விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டர். பின்னர், இவர் பல குறைந்த நிதிநிலை (budget) தயாரிப்பில் உருவாகும் படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
விமல் | |
---|---|
![]() | |
பிறப்பு | செப்டம்பர் 25, 1979 பண்ணங்கொம்பு, மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு இந்தியா ![]() |
பணி | |
செயற்பாட்டுக் காலம் |
|
பெற்றோர் |
|
வாழ்க்கைத் துணை |
|
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்தொகு
விமல் தமிழ்நாட்டின், மணப்பாறை அருகில் உள்ள பண்ணங்கொம்பு என்னும் கிராமத்தில் நரசிம்மன் நாயுடுவின்[3]மகனாக பிறந்தார். பின்பு இவர் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். இவர் தனது படிப்பை நிறுத்திவிட்டு, நடனம் கற்பதற்கு சென்னையில் உள்ள கூத்துப்பட்டறை என்னும் நாடகக் குழுவில் சேர்ந்தார். இதைத் தொடர்ந்து இவர் முன்னணி நடிகர்களான அஜித் குமார், விஜய், நடித்த கில்லி (2004), கிரீடம் (2007), மற்றும் குருவி (2008) ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்தார்.[4] ஆனால் இவற்றில் இவர் புகழ்பெறவில்லை என்றாலும், இவர் இதைத்தொடர்ந்து சசிகுமார் தயாரித்து, பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இத் திரைப்படத்தில் இவருடைய கதாப்பாத்திரத்தின் பெயர் மீனாட்சி சுந்தரம் ஆகும். இப்படத்தில் இவர் கைபேசியில்
"இங்கிட்டு மீனாட்சி, அங்கிட்டு யாரு?"
என்று இவர் பேசிய வசனம் மிகவும் பிரபலம் ஆனது.[5][6] இதைத் தொடர்ந்து களவாணி படமும் மிகப் பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. இதன் பின் தொடர்ச்சியாக தூங்கா நகரம், எத்தன், மற்றும் வாகை சூட வா படங்களில் நடித்தார். வாகை சூட வா திரைப்படத்தின் கதைக்களம் 1960-ம் ஆண்டு கிராமத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திரைப்படம் நார்வே சினிமா திரைப்பட விழாவில் சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த நடனமைப்பாளர், சிறந்த இயக்குநர், என ஏழு விருதுகளையும் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதினையும் வென்றுள்ளது. மற்றும் விமல் தற்போது அவரது அடுத்த படம் இஷ்டம், இவர் முதல் முறையாக ஒரு நகர்ப்புற பாத்திரம் ஏற்றுள்ளார்.. இத்திரைப்படம் தெலுங்கில் வெற்றியான ஏமந்தி ஈ வேலாவின், ஒரு மறுகலப்பு (ரீ -மிக்ஸ்). மேலும் இவர் ஒரு நாகரீகமான மட்டையாளராக சென்னை சூப்பர் ஸ்டார் இந்திய கிரிக்கெட் லீக் விளம்பரத்தில் தோன்றினார்.
தனிப்பட்ட வாழ்க்கைதொகு
விமல் அவரது பால்ய நண்பரும் உறவினருமான அட்சயா என்ற பிரியதர்சினியை காதலித்து வந்தார். பின்பு தன் காதலை உறவினர்களிடம் கூறினார். அதற்கு அட்சயாவின் பெற்றோர்கள் அந்த காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால், இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன் பிறகு டிசம்பர் 12, 2010 அன்று, கும்பகோணத்தில் உள்ள சுவாமிமலை முருகன் கோவிலில், ஒரு எளிய முறையில் விமல்-பிரியதர்சினி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார் மற்றும் விமல் நாயுடு சமுதாயத்தை சேர்ந்தவர்.[7]
திரைப்படங்கள்தொகு
ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2004 | கில்லி | சரவணவேலுவின் தோழர் | பெயர் அறியப்படாதப் பாத்திரம் |
2007 | கிரீடம் | சக்தி வேலின் தோழர் | பெயர் அறியப்படாதப் பாத்திரம் |
2008 | குருவி | கடப்பா அகதி | பெயர் அறியப்படாதப் பாத்திரம் |
பந்தயம் | பெயர் அறிப்படாதப் பாத்திரம் | ||
காஞ்சிவரம் | ரங்கன் | ||
2009 | பசங்க | மீனாட்சி சுந்தரம் | சிறந்த அறிமுக நடிகருக்கான விஜய் விருதுகள் |
மாட்டுத்தாவனி | |||
2010 | களவாணி | அறிவழகன் (அறிகை) | |
2011 | தூங்கா நகரம் | கண்ணன் | |
எத்தன் | சத்தியமூர்த்தி | ||
வாகை சூட வா | வேலுத்தம்பி | ||
2012 | மெரினா | அவராகவே | மேம்பாட்டுப் பாடலில் சிறப்புத் தோற்றம் |
இஷ்டம் | சரவணன் | ||
கலகலப்பு | சீனு | ||
2013 | சில்லுனு ஒரு சந்திப்பு | அசோக் | |
கேடி பில்லா கில்லாடி ரங்கா | தேனீ கேசவன் | ||
மூன்று பேர் மூன்று காதல் | குணசேகர் | ||
தேசிங்கு ராஜா | இதயக்கனி | ||
ரெண்டாவது படம் | |||
ஜன்னல் ஓரம் | சுப்பையா | ||
2014 | புலிவால் | காசி | |
காவல் | படப்பிடிப்பு | ||
அஞ்சல | படப்பிடிப்பு | ||
மஞ்சப்பை | தமிழ் | ||
வெயிலோடு விளையாடு | படப்பிடிப்பு | ||
நேற்று இன்று | படப்பிடிப்பு | ||
கதை திரைக்கதை வசனம் இயக்கம் | |||
ஒரு ஊருல ரெண்டு ராசா | அழகு | ||
2015 | மாப்ள சிங்கம் |
மேற்கோள்கள்தொகு
- ↑ "Vimal". Filmi Street. 2 February 2015. https://www.filmistreet.com/celebrity/vimal/.
- ↑ http://www.goprofile.in/2017/07/Vimal-Profile-family-wiki-Age-Affairs-Biodata-Height-Movie-list-Weight-Wife-Biography-movies-list.html?m=1
- ↑ "Vimal". Filmi Street. 2 February 2015. https://www.filmistreet.com/celebrity/vimal/.
- ↑ Rao, Subha J. "விமல் மட்டும்!". தி இந்து (சென்னை, இந்தியா). Archived from the original on 2012-09-12. https://archive.ph/20120912002008/http://www.thehindu.com/arts/cinema/article2621557.ece. பார்த்த நாள்: 4 பிப்ரவரி 2015.
- ↑ "களவானி - ஸ்பெஷல் ஹைலைட்ஸ்" (தமிழ் மொழி). சென்னை. தமிழ் நாடு: தினமலர். 23 சூன் 2010. 4 பிப்ரவரி 2015 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
- ↑ "ரகசிய திருமணம் செய்து கொண்டார் விமல்!" (தமிழ் மொழியில்). தமிழ் நாடு, இந்தியா: கூடல். 2000-2008. 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. பிப்ரவரி 4, 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|accessdate=
(உதவி)CS1 maint: Unrecognized language (link) - ↑ "மருத்துவ மாணவியுடன் விமல் ரகசிய திருமணம்!" (தமிழ் மொழி). சென்னை. தமிழ் நாடு: தினமலர். 28 டிசம்பர் 2010. 4 பிப்ரவரி 2015 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)