கிரீடம் (திரைப்படம்)
கிரீடம் (Kireedam) 2007 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இதை இயக்கியவர் ஏ. எல். விஜய், இது இவரது முதல் படமாகும். இது மலையாளத்தில் சிபி மலயில் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெற்றி பெற்ற கிரீடம் என்ற படத்தின் தழுவலாகும். இதில் அஜித் குமார், திரிஷா, ராஜ்கிரண், விவேக், சந்தானம், சரண்யா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் பூர்ணா மார்க்கட்டு என்ற பெயரில் தெலுங்கில் எடுக்கப்பட்டது.[1]
கிரீடம் | |
---|---|
இயக்கம் | ஏ. எல். விஜய் |
இசை | ஜி. வி. பிரகாஷ்குமார் |
நடிப்பு | அஜித் குமார் திரிஷா ராஜ்கிரண் விவேக் |
ஒளிப்பதிவு | திரு நீரவ் ஷா |
படத்தொகுப்பு | அந்தோனி |
விநியோகம் | ஜங்கரன் இண்டர்நேஷனல் |
வெளியீடு | சூலை 20, 2007 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
திரைக்கதை
தொகுநேர்மையான தலைமைக் காவலரான ராஜ்கிரண், தன் மகன் அஜீத் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்று நினைக்கிறார். அப்பாவின் வாக்கை மதிக்கும் அஜித்தும் அப்படியே அதிகாரித் தேர்வுக்குத் தயாராகிறார். இதற்கிடையே அடாவடி செய்யும் தன் மகன் மீது ராஜ்கிரண் எடுக்கும் நடவடிக்கைகளால் ஆவேசமாகும் அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் தன் செல்வாக்கால் ராஜ்கிரணை கோடியக்கரைக்கு இடமாற்றம் செய்கிறார்.
குடும்பத்துடன் கோடியக்கரைக்குச் செல்லும் ராஜ்கிரண் அங்கு நடக்கும் ரவுடிகளின் அதிகாரத்தைக் கண்டு அதிர்கிறார். ஒரு பிரச்சினையில் ரவுடிகளை ராஜ்கிரண் தட்டிக்கேட்க அவரை அடிக்க வருகிறார்கள் அஜய்குமாரின் அடியாட்கள். இதைப் பார்த்து ஆவேசமாகும் அஜீத் அஜய்குமாரை அடித்து விடுகிறார். அப்பகுதி தாதாவாக அஜித்தை மக்கள் நினைக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அடிதடியில் ஈடுபட்டதன் மூலம் எங்கே தன் மகன் கிடைக்க இருக்கும் காவல்துறை வேலையை கோட்டை விட்டுவிடுவானோ என்று ராஜ்கிரண் பதறுகிறார். அந்தப் பதற்றம் அஜித் மீது கோபமாக மாறுகிறது. இதற்கிடையே அஜய்குமார் அஜித்தை பழி தீர்க்க முயலுகிறான்.
பாடல்கள்
தொகுகிரீடம் | ||||
---|---|---|---|---|
இசை
| ||||
வெளியீடு | சூன் 2007 | |||
இசைப் பாணி | திரையிசைப் பாடல்கள் | |||
இசைத்தட்டு நிறுவனம் | பிக் மியூசிக் | |||
இசைத் தயாரிப்பாளர் | ஜி. வி. பிரகாஷ் குமார் | |||
ஜி. வி. பிரகாஷ் குமார் காலவரிசை | ||||
|
ஐந்து பாடல்கள் மற்றும் ஒரு தீம் இசை கொண்ட இத்திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "அக்கம் பக்கம் " | சாதனா சர்கம் | 5:12 | |
2. | "விழியில் உன் விழியில்" | சோனு நிகாம், சுவேதா மோகன் | 4:38 | |
3. | "கனவெல்லாம்" | பி. ஜெயச்சந்திரன், கார்த்திக் | 5:10 | |
4. | "கண்ணீர் துளியே" | விஜய் யேசுதாஸ் | 5:20 | |
5. | "விளையாடு விளையாடு" | சங்கர் மகாதேவன் | 4:09 | |
6. | "கிரீடம் இசை" | இசை | 4:25 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Poorna Market to release in April end - Tamil Movie News - IndiaGlitz.com". 11 April 2011. Archived from the original on 5 November 2023. பார்க்கப்பட்ட நாள் 20 March 2023.