இந்திய கிரிக்கெட் லீக்

2007 மற்றும் 2009 ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற தனியார் துடுப்பாட்ட தொடர்

இந்தியன் துடுப்பாட்டத் தொடர் அல்லது இந்தியன் கிரிக்கெட் லீக் (Indian Cricket League சுருக்கமாக ஐசிஎல்) என்பது 2007 மற்றும் 2009 ஆண்டுகளில் ஜீ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தால் இந்தியாவில் நடைபெற்ற தனியார் துடுப்பாட்டத் தொடர் ஆகும். இது இரு பருவங்களாக நடைபெற்றது. இதில் உலக லெவன், இந்தியா, பாக்கித்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய நான்கு சர்வதேச அணிகள் விளையாடின. மேலும், ஒன்பது உள்ளூர் அணிகளுக்குத் தனியாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதற்கான போட்டிகள் இந்தியாவின் பல நகரங்களிலும், பாக்கித்தானின் லாகூர் மற்றும் வங்காளதேசத்தில் நடைபெற்றன.

இந்திய கிரிக்கெட் லீக்
விளையாட்டுதுடுப்பாட்டம்
நிறுவல்2007
அணிகளின் எண்ணிக்கை9 நகர அணிகள், 4 சர்வதேச அணிகள்
நாடுஇந்தியா இந்தியா
பாக்கித்தான் பாக்கித்தான்
வங்காளதேசம் வங்காளதேசம்
உலக லெவன்
நிறுத்தப்பட்டது2009
கடைசி வாகையாளர்(கள்)லாகூர் பாத்சாஸ் (2008/09)

வரலாறு

தொகு

இருபது20 வடிவத்தில் இந்தத் தொடர் நடைபெற்றது. இதன் முதல் பருவம் இந்தியாவில் நடைபெற்றது. 50 நிறைவுகள் கொண்ட போட்டியாக நடத்தத் திட்டமிட்டிருந்த போதிலும் நடைபெறவில்லை. இந்தத் தொடருக்கு இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை ஆகியவற்றின் போதுமான ஆதரவு கிடைக்காததும் இந்தத் தொடரின் தோல்விக்கு காரணமாகியது.

2008இல் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம் இந்தியன் பிரீமியர் லீக்கினை அறிமுகப்படுத்தியது. இந்த வாரியத்துடன் ஏற்பட்ட மோதலால் ஐசிஎல்லை "கலகத் தொடர்" என இந்திய ஊடக்கங்கள் கூறியது.[1]

இந்தத் தொடரில் விளையாடிவர்களுக்கு இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்ததனால் 2009இல் இந்தத் தொடர் முடிவிற்கு வந்தது.

முதலாவது ஐசிஎல் தொடர் 2007 ஆம் ஆண்டு நடைபெற்றது. முதல் தொடரில் சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் வாகை சூடினர். இரண்டாவது பருவம் லாகூரில் 2008இன் இறுதியில் நடைபெற்றது. இதில் பாக்கித்தானின் லாகூர் பாத்சாஸ் வெற்றி பெற்றனர். அந்த அணியில் இம்ரான் நசீர், அப்துர் ரசாக், ஷேன் பாண்ட், இன்சமாம் உல் ஹக் போன்ற சர்வதேச வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். அணியின் பயிற்சியாளராக மோயின் கான் இருந்தார்.

அணிகள்

தொகு
  • மும்பை சாம்ப்ஸ்
  • சென்னை சூப்பர்ஸ்டார்ஸ்
  • சண்டிகர் லயன்ஸ்
  • ஐதராபாத் ஹீரோஸ்
  • ராயல் பெங்கால் டைகர்ஸ் (கொல்கத்தா)
  • தில்லி ஜெயண்ட்ஸ்
  • அகமதாபாத் ராக்கெட்ஸ்
  • லாகூர் பாத்சாஸ்
  • டாக்கா வாரியர்ஸ்

சான்றுகள்

தொகு
  1. "கலகத் துடுப்பாட்டம்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_கிரிக்கெட்_லீக்&oldid=3693544" இலிருந்து மீள்விக்கப்பட்டது