ஆவணம்
ஆவணம் (ⓘ) என்பது எண்ணங்களை எழுதியோ, வரைந்தோ காட்சிப்படுத்தும் கோப்பு ஆகும். ஆவணங்கள் காகிதத்தாளில் வெளிவந்தன. ஆவணங்களை கணினிக் கோப்புகளாக உருவாக்குவதும் உண்டு. இதற்கு எண்ணிம ஆவணத்தை எடுத்துக்காட்டாக கூறலாம். எண்ணங்களை சேமித்து வைத்தலை ஆவணப்படுத்தல் என்று குறிப்பிடுவர்.
வகைகள்
தொகு- கல்வித்துறை : ஆய்விதழ்
- வியாபாரம்: விலைச்சிட்டை, செயல்திட்ட வேண்டுகோள், ஒப்பந்தம், விரிதாள், பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள், நிதிக்கூற்றுக்கள்
- சட்டம்: நீதிமன்ற அழைப்பாணை, உரிமம்
- அரசு: வெள்ளை அறிக்கை
- ஊடகம்: திரைக்கதை