வெள்ளை அறிக்கை

வெள்ளை அறிக்கை என்பது ஒரு அரசாங்கமோ அல்லது ஒரு அமைப்போ ஒரு பிரச்சனைக்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகும். வெள்ளை அறிக்கை மூலம் வெளியிட்ட அமைப்பின் தெளிவான குறிக்கோளை மக்கள் அறிந்துகொண்டு, விவாதிக்கவோ, ஆலோசிக்கவோ முடியும். வெள்ளை அறிக்கை, ஒரு பிரச்சனைக்குத் தீர்வாக அல்லது புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய வெளியிடப்படுகிறது.

நாடளுமன்றத்தில் முடிவெடுக்கப்பட்ட அரசின் கொள்கையை சட்டவடிவம் ஆக்குவதற்கு முன் மக்களுக்குத் தெரிவிக்கும் விதமாக கனடாவில் இவ்வறிக்கை வெளியிடப்படுகிறது.[1]

தற்காலத்தில், புதிய பொருள் ஒன்றை சந்தையில் அறிமுகம் செய்யும் முன் அதன் அம்சங்கள் பற்றி விளம்பரம் செய்ய அந்நிறுவனங்கள் வெள்ளை அறிக்கையை வெளியிடுகின்றன. வணிக வெள்ளை அறிக்கைகள் தகவல் தொடர்பாக பயன்படுகிறது.


பச்சை அறிக்கை என்பது விவாதிப்பதற்காக அடிக்கடி வெளியிடப்படும் திறந்தநிலை அறிக்கையாகும். பல பச்சை அறிக்கைகள் மூலம் விவாதிக்கப்பட்டு முடிவான கொள்கை, சட்டம் ஆவதற்கு முன் வெள்ளை அறிக்கையாக வெளிவரும்.

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
White papers
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


  1. Doerr, Audrey D. The Role of White Papers in the Policy-making Process: the Experience of the Government of Canada. 1973. Thesis (Ph.D) - Carleton University. 1. 56
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளை_அறிக்கை&oldid=3734140" இலிருந்து மீள்விக்கப்பட்டது