சிறினிசா செயசீலன்
சிறினிசா செயசீலன் (ஆங்கிலம் : Srinisha Jayaseelan) இவர் ஒரு இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார்.[1] 2009 - 2010 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் சூனியர் 2 என்னும் உண்மைநிலை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். மேலும் இவர் 2016 ஆம் ஆண்டு இளையராஜா அவர்களின் இசையமைப்பில் உருவான அம்மா கணக்கு என்னும் திரைப்படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார், மேலும் சூப்பர் சிங்கர் வாகையர்களில் வாகையாளர் என்னும் உண்மைநிலை நிகழ்ச்சிலேயும் பங்கேற்றார்.[2]
சிறினிசா செயசீலன் Srinisha Jayaseelan | |
---|---|
2021 ஆம் ஆண்டில் சிறினிசா செயசீலன் | |
பிறப்பு | 26 செப்டம்பர் 1999 சென்னை தமிழ் நாடு இந்தியா |
கல்வி | எத்திராஜ் மகளிர் கல்லூரி |
பணி | பாடகி |
செயற்பாட்டுக் காலம் | 2016 – தற்சமயம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | கண்ண வீசி • அடி பெண்ணே • கண்ணேரமாய் |
பெற்றோர் | செல்வராச் செயசீலன் சுஜாதா செயசீலன் |
வாழ்க்கைச் சுருக்கம்
தொகுசிறினிசா செயசீலன் தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் 26 செப்டம்பர் 1999 ஆம் ஆண்டு திரு செல்வராச் செயசீலன் மற்றும் சுசாதா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் சென்னையில் அமைந்துள்ள டி.எஸ்.டி ராசா பெண்கள் பதின்மநிலை மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார், பின்னர் எத்திராச் மகளிர் கல்லூரியில் இளங்கலை வணிகவியலில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.[3]
தொழில் வாழ்க்கை
தொகுசிறீனிசா 2009 முதல் 2010 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியரின் பருவம் இரண்டு என்றழைக்கப்படும் உண்மைநிலை நிகழ்ச்சியின் தமிழ் இசைப் போட்டியில் பங்கேற்றார். இதில் இறுதி போட்டிக்கு முன்னேறிய சிறீனிசா அரையிறுதிப் போட்டியில் வெளியேற்றப்பட்டவர். மேலும் விசய் தொலைக்காட்சியின் மற்ற இசைப் போட்டிகளான சூப்பர் சிங்கர் டி20யில் சூப்பர் சிங்கர் சாப்பியன் ஆஃப் சாப்பியன்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றுள்ளார்.[4] மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவான அவன் இவன் என்னும் திரைப்படத்தில், ஒரு மலையோரம் எனத் தொடங்கும் பாடல் மற்றும் இசைஞானி இளையராஜா இசை அமைத்த அம்மா கணக்கு திரைப்படத்தில் மேத்சு ஃடப் எனத் தொடங்கும் பாடல்கள் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகினார். மேலும் ஹிப்ஹாப் தமிழா இசையமைத்த இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் விளம்பர இடைவேளி என்ற பாடலையும் பாடியுள்ளார்.
தொலைக்காட்சி
தொகுஆண்டு | தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பெயர் | பங்கு | பிணையம் |
---|---|---|---|
2024 | சூப்பர் சிங்கர் பருவம் பத்து | சிறப்பு நிகழ்த்துநர் | விசய் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kollywood Singer Srinisha Jayaseelan Biography, News, Photos, Videos". nettv4u (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-25.
- ↑ "Contestants from the previous seasons of Super Singer...Samvishal, Srinisha, Sudhan Kumar... - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/music-reality-show-super-singer-champion-of-champions-to-premiere-soon/articleshow/77505275.cms.
- ↑ Cine Samugam (2021-05-30). Untold Story about Super Singer Srinisha || Biography in Tamil. பார்க்கப்பட்ட நாள் 2024-09-23 – via யூடியூப்.
- ↑ "சறீனிசா செயசீலன்:சூப்பர் சிங்கர் முதல் தமிழ் சினிமா வரை..ஸ்ரீ நிஷா கடந்து வந்த பாதை!" (in தமிழ் மொழியில்). ABP NADU (abp நாடு). மார்ச் 2, 2023. https://tamil.abplive.com/photo-gallery/entertainment/srinisha-jayaseelan-latest-australian-vacation-srinisha-jayaseelan-biography-104562#goog_rewarded. பார்த்த நாள்: நவம்பர் 15, 2024.