பாவனா பாலகிருஷ்ணன்

தொலைக்காட்சி வர்ணனையாளர்

பாவனா பாலகிருஷ்ணன் (Bhavana Balakrishnan) வீ.ஜே. பாவனா (பிறப்பு 22 மே 1982) என்பவர் ஒரு இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியும் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளரும், பின்னணி பாடகரும், நடனக் கலைஞரும் ஆவார்.[1] மாயந்தி லாங்கருக்குப் பிறகு இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டு பத்திரிகையாளர்களில் ஒருவர் ஆவார். அவர் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸின் ஒளிபரப்பாளராக பணிபுரிகிறார் மற்றும் இந்த அலைவரிசைக்காக பல நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.  2019 கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது கருத்து தெரிவித்த பெண்களில் பாவனா பாலகிருஷ்ணனும் ஒருவர்.[2][3][4]

பாவனா பாலகிருஷ்ணன்
பிறப்புபாவனா பாலகிருஷ்ணன்
மே 22, 1982 (1982-05-22) (அகவை 42)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்கிரேட் லேக்ஸ் மேலாண்மைக் கல்வி நிறுவனம்
பணிநிகழ்ச்சித் தொகுப்பாளர், வர்ணனையாளர், பின்னணிப் பாடகர், நடனக் கலைஞர், காணொளி தொகுப்பாளினி, வானொலி தொகுப்பாளினி
அறியப்படுவது2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் வர்ணனையாளர்
வாழ்க்கைத்
துணை
நிகில் இரமேஷ்

தொழில்

தொகு

பாலகிருஷ்ணன் குறுகிய காலத்திற்கு வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் களம் இறங்கினார். அவர் ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக சேர்ந்தார். அவர் தொகுத்து வழங்கிய முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி பீச் கேர்ள்ஸ் ஷோ ஆகும். பின்னர், அவர் ஸ்டார் விஜய் அலைவரிசையில் சேர்ந்தார். பின்னர் 2011ஆம் ஆண்டில் அலைவரிசையின் முழுநேர தொகுப்பாளராக ஆனார். விஜய் தொலைக்காட்சியில் அவரது முதல் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆகும். மேலும், அவர் 2018 வரை ஏர்டெல் சூப்பர் சிங்கரை தொகுத்து வழங்கினார். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் "ஃபன் அன்லிமிடெட்" உட்பட அலைவரிசையின் மற்ற நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கியுள்ளார்.[5]

2017 ஆம் ஆண்டில், அவர் விளையாட்டு பத்திரிகையாளராக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் சேர்ந்தார் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மற்றும் புரோ கபடி லீக் ஆகியவற்றின் ஒளிபரப்புகளை வழங்கினார். அவர் 2018 ஐபிஎல் பருவத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழின் வர்ணனையாளராக பணியாற்றினார் மற்றும் 2018 இந்தியன் பிரீமியர் லீக்கின் போது இரண்டு பெண் வழங்குநர்களில் ஒருவராக இருந்தார்.[6]

பாவனா பாலகிருஷ்ணன் 2018 ஆம் ஆண்டில் பாடகியாக அறிமுகமானார், தனது முதல் தனிப்பாடலான தி மாஷப் தொடரை வெளியிட்டார் .[7] 2020 ஆம் ஆண்டில், இசை இயக்குநர் தரனுக்காக தனது முதல் பின்னணி பாடலைப் பாடினார். "வீராதி வீரா" பாடல் யூடியூபில் ஐந்து இலட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகில் ரமேஷை மணந்து தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. says, Devi J. (2016-03-24). "Bhavana Balakrishnan (Anchor) – Wiki, Biodata, Age, Profile, Biography". Scooptimes (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-09.
  2. "#WomenInFront will present the ICC Cricket World Cup 2019 on Star Sports Network!". Indian Television Dot Com (in ஆங்கிலம்). 2019-06-03. பார்க்கப்பட்ட நாள் 2019-10-09.
  3. "World Cup 2019: Women get an equal say in the commentary box". Forbes India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-09.
  4. Das, Ria (2019-06-04). "Sexism In World Cup No More, Women Commentators Standout". SheThePeople TV (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-09.
  5. "Dance reality show Jodi Fun Unlimited to premiere soon - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-09.
  6. "Bhavna joins Star Sports Tamil for IPL - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-09.
  7. "VJ Bhavna in a new avatar - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-09.
  8. "My husband doesn't watch my shows: Bhavna - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவனா_பாலகிருஷ்ணன்&oldid=4162081" இலிருந்து மீள்விக்கப்பட்டது