தமிழா தமிழா

தமிழா தமிழா என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நவம்பர் 11, 2018 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு விவாத பேச்சு நிகழ்ச்சி ஆகும். விவாதங்களை மட்டறுத்து நிகழ்ச்சியினை தொகுத்து வழக்குபவர் பிரபல இயக்குநர் கரு பழனியப்பன் ஆவார்.[1]

தமிழா தமிழா
வகைபேச்சு நிகழ்ச்சி
வழங்கல்கரு பழனியப்பன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்பாலமுருகன் கி
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 40–45 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்Sunday Productions
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்11 நவம்பர் 2018 (2018-11-11) –
ஒளிபரப்பில்
Chronology
தொடர்புடைய தொடர்கள்நீயா நானா

இந்த நிகழ்ச்சயில் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பை எடுத்து இரு கருத்துணர்வுகளை கொண்ட மக்களை விவாதிக்க வழி வகுக்கிறது. அப்படி விவாதித்த பின் அவர்களுக்கிடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கான வழிகளைக் கூறுகிறது.

விவாதிக்கப்பட்ட தலைப்பு

தொகு
  • விரிவடையும் பெண் சுதந்திரம் மகிழ்ச்சியானதா இல்லை பதற்றமானதா?
  • காதலை விட ஜாதியே முக்கியம் மற்றும் ஜாதியை விட காதலே முக்கியம்.
  • அதிகரித்து கொண்டே இருக்கிறதா திருமண எதிர்பார்ப்புகள்? ஆண்கள் மாறும் பெண்கள்.
  • கண்டிப்பான பெற்றோர்கள் எதிராக பிள்ளைகள்.
  • மாமியார் மருமகள்.
  • தனியார் துறையில் இட ஒதுக்கீடு அவசியம் மற்றும் அவசியமில்லை?
  • சென்னை வந்து மிரட்சி அடைந்த வெளியூர் பெண்கள் மற்றும் சென்னை பெண்கள்
  • ஆங்கில மருத்துவம் விஸ் நாட்டு மருத்துவம்.
  • டிரண்டியாக மாற விரும்பும் தாத்தா பாட்டிகள்
  • அனாவசிய செலவு செய்வது யார் கணவனா அல்லது மனைவியா
  • நாட்டு தலைவனையே சூஸ் பண்றோம்… வீட்டு தலைவனை?[2]
  • எங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்! புள்ளிங்கோ மற்றும் அவர்களை விரும்பாத பெண்கள்.[3]
  • தாடி வச்சிருக்கறவன் காப்பாத்துவானா?..[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Tamizha Tamizha: A comfortably centrist talk show where the personal doesn't get political enough". www.firstpost.com.
  2. "நாட்டு தலைவனையே சூஸ் பண்றோம்… வீட்டு தலைவனை?". tamil.indianexpress.com.
  3. "ஐயையோ.. சுத்தமா பிரீலீங்க... இது என்ன பாஷை?". tamil.oneindia.com.
  4. "தாடி வச்சிருக்கறவன் காப்பாத்துவானா?.. என்னடா உலகமிது!". tamil.oneindia.com.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழா_தமிழா&oldid=4158463" இலிருந்து மீள்விக்கப்பட்டது