முனி (திரைப்படம்)
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
முனி (ஆங்கில மொழி: Muni) என்பது 2007ல் வெளியான தமிழ், நகைச்சுவை, திகில் திரைப்படம் ஆகும். இதனை ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கியுள்ளார். இவரே இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரமாகவும் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் வேதிகா குமார், ராஜ்கிரண் ஆகியோரும் நடித்துள்ளனர். முனி திரைப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார். இது 9 மார்ச்சு 2007 அன்று வெளியானது. இத்திரைப்படம் அதே பெயரில் தெலுங்கு மொழியில் டப்பிங் முறையில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. பின்பு இந்தி மொழியில் ப்ரடிஷோத் எக் ரியல் ரிவெஞ் ("Pratisodh-Ek Real Revenge") என்ற பெயரிலும் வெளியிடப்பட்டது.[1] 2011ல், இதன் தொடரான காஞ்சனா திரைப்படம் வெளியானது. இதற்கு அடுத்து 2014ல் முனி 3: கங்கா எனும் திரைப்படமும் வெளியானது. இது முனி திரைப்படத்தொடரின் முதலாவது திரைப்படம் ஆகும்.
முனி | |
---|---|
முனி திரையரங்கு வெளியீடு சுவரொட்டி | |
இயக்கம் | ராகவா லாரன்ஸ் |
தயாரிப்பு | சரண் |
கதை | ரமேஷ் கண்ணா (உரையாடல்கள்) |
திரைக்கதை | ராகவா லாரன்ஸ் |
இசை | பரத்வாஜ் (பாடல்கள்) எஸ். பி. வெங்கடேஷ் (பின்னணி இசை) |
நடிப்பு | ராகவா லாரன்ஸ் வேதிகா குமார் ராஜ்கிரண் பியான்சா தேசை |
ஒளிப்பதிவு | கே. வி. குகன் |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
கலையகம் | ஜெமினி புரொடக்சன் |
விநியோகம் | ஜெமினி புரொடக்சன் |
வெளியீடு | 9 மார்ச்சு 2007 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "'Muni' completes talkie part - Bollywood Movie News". IndiaGlitz. 2006-12-28. Archived from the original on 2012-10-24. பார்க்கப்பட்ட நாள் 2012-08-06.