கல்யாணமாம் கல்யாணம் (தொலைக்காட்சித் தொடர்)

கல்யாணமாம் கல்யாணம் என்பது விஜய் தொலைக்காட்சியில் ஜனவரி 29ஆம் தேதி 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி, ஜூன் 18 ஆம் திகதி முதல் மதியம் 1 மணிக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். [1][2][3]

கல்யாணமாம் கல்யாணம்
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
எழுத்துஜமா
பிராவின் ராஜ்
இயக்கம்பிரம்மா (1-170) &(241-307)
ஆர். கணேஷ் (171-240)
நடிப்பு
முகப்பு இசைகண்ணன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
பருவங்கள்2
அத்தியாயங்கள்307
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்வி.கே.அமீர்த்தராஜ் (1-200)
எஸ்.அனந்த் பாபு (200-307)
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
தொகுப்புபி. அருண்குமார்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்29 சனவரி 2018 (2018-01-29) –
23 பெப்ரவரி 2019 (2019-02-23)
Chronology
தொடர்புடைய தொடர்கள்அஞ்சலி

இந்த தொடரை பிரம்மா இயக்க, ஸ்ரீது, தேஜா, ஸ்ரிதிகா, மௌலி, ஆர். சுந்தர்ராஜன் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[4] இந்த தொடர் பெப்ரவரி 23, 2019 அன்று 307 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்று, இதன் இரண்டாம் பாகம் அஞ்சலி என்ற பெயரில் ஒளிபரப்பானது.

கதைச்சுருக்கம் தொகு

இந்த தொடரின் கதை சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கமலி (ஸ்ரீது) என்ற பெண். திருமண வாழ்க்கையில் மிகவும் நம்பிக்கை கொண்டவள். ஆனால் பணக்கார வீட்டு குடும்பத்தைச் சேர்ந்த சூர்யாவுக்கோ (தேஜா) திருமண கல்யாண வாழ்க்கையில் துளி கூட நம்பிக்கை இல்லாதவன். சூர்யாவின் பெற்றோர்கள் இருபது வருடங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். எனவே, தாத்தாவின் அரவணைப்பில் வளர்கிறான் சூர்யா. கமலியின் எளிமைக் குணத்தைக் கண்டு வியக்கும் சூர்யாவின் தாத்தா, அவனுக்கு கமலியைத் திருமணம் செய்துவைக்க நினைக்கிறார். ஆனால் அந்த திருமணம் தடை பெற்றது.

பல பிரச்சனைகளுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்கின்றனர் அனால் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாதா சூர்யாவின் தாய் அகிலா (ஸ்ரிதிகா) மற்றும் அத்தை நிர்மலா (ஜீவிதா) இருவரையும் பிரிக்க நினைக்கின்றனர். இவர்களின் சதியிலிருந்து இருவரும் ஒன்றாக வாழ்ந்தார்கள். கமலி கர்ப்பம் தரித்து 2 குழந்தைகளை பெற்று எடுக்கின்றார். மகன் பெயர் கார்த்திக் மகள் பெயர் அஞ்சலி, இதிலிருந்து கலயாணமாம் கல்யாணத்தின் தொடரின் 2ஆம் பாகம் ஆரம்பிக்கின்றது.

நடிகர்கள் தொகு

முதன்மை கதாபாத்திரம் தொகு

  • ஸ்ரீது - கமலி (பகுதி: 1-301) (சூர்யாவின் மனைவி)
    • பிராக்யா நாகரா - கமலி (பகுதி: 302-307)
  • தேஜா - சூர்யா (பகுதி: 1-301) (கமலியின் கணவன்)
    • சுப்ரமணியன் கோபாலகிருஷ்ணன் - சூர்யா (பகுதி: 302-307)
  • நிஹாரிகா (பகுதி: 1-68) → ஸ்ரிதிகா (பகுதி: 69-210) → சாய்லதா - அகிலா (பகுதி: 211-307) (சூர்யாவின் தாய்)

துணை கதாபாத்திரம் தொகு

  • மௌலி - சிவப்பிரகாசம் (அகிலாவின் தந்தை, சூர்யாவின் தாத்தா)
  • ஆர். சுந்தர்ராஜன் (கமலியின் தாத்தா)
  • ஜீவா ரவி → பிரகாஷ் ராஜன்
  • ஷாப்பினம் - பிரியா (டாக்டர். சந்திரசேகர், சூர்யாவின் தந்தையார்)
  • சாய் பிரியங்கா - சந்தியா (சிவபிரகாசத்தின் மகள், அகிலாவின் சகோதரி)
  • ஜீவிதா - நிர்மலா ஜெகதீஷ்
  • ரவிக்குமார்
  • பாக்கியா
  • பாரதி மோகன்
  • மிர்துளா ஸ்ரீ

நடிகர்களின் தேர்வு தொகு

இந்த தொடரில் கமலியாக விஜய் தொலைக்காட்சியில் ‘7சி’ மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மெல்லத் திறந்தது கதவு தொடர்களில் நடித்த ஸ்ரீத்து நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சூர்யா என்ற கதாபாத்திரத்தில் தேஜா என்பவர் நடித்துள்ளார். பிரபல இயக்குநர்கள் ஆர். சுந்தர்ராஜன் மற்றும் மௌலி இருவரும் இந்த சீரியலில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.

முகப்பு பாடல் தொகு

இந்த தொடருக்கான முகப்பு பாடலான துள்ளி துள்ளி என்ற பாடலுக்கு என். கண்ணன் என்பவர் இசை அமைத்துள்ளார்.

பாடல் பட்டியல்
# பாடல்பாடகர் நீளம்
1. "துள்ளி துள்ளி (முகப்பு பாடல்)"    2:16

நேர அட்டவணை தொகு

இந்த தொடர் ஜனவரி 29ஆம் தேதி 2018ஆம் ஆண்டு முதல் தமிழ்க்கடவுள் முருகன் என்ற வரலாற்று தொடருக்கு பதிலாக இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் 2 என்ற நிகழ்ச்சிக்காக இந்த தொடர் ஜூன் 18ஆம் திகதி முதல் மதியம் 1 மணிக்கு மாற்றப்பட்டது. 5 நாட்கள் மட்டும் ஒளிபரப்பான இந்த தொடர் 9 ஜூலை முதல் 6 நாட்களுக்கு ஒளிபரப்பானது.

ஒளிபரப்பான திகதி நாட்கள் நேரம் அத்தியாங்கள்
29 ஜனவரி 2018 - 15 ஜூன் 2018
திங்கள் - வெள்ளி
21:00 1-100
18 ஜூன் 2018 - 23 பிப்ரவரி 2019
திங்கள்-சனிக்கிழமை
13:00 101-307

மேற்கோள்கள் தொகு

  1. "A new family drama 'Kalyanamam Kalyanam' to be aired from January 29" (in ஆங்கிலம்). timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2018-01-24.
  2. "விஜய் டிவியின் புதிய சீரியல் 'கல்யாணமாம் கல்யாணம்'". www.ietamil.com. பார்க்கப்பட்ட நாள் 2018-01-24.
  3. "Vijay Television comes up with a new serial Kalyanamam Kalyanam" (in ஆங்கிலம்). bestmediainfo.com. பார்க்கப்பட்ட நாள் 2018-01-25.
  4. "'கல்யாணமாம் கல்யாணம்' விஜய் டிவியின் புதிய சீரியல்". cinema.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2018-01-30.

வெளி இணைப்புகள் தொகு

விஜய் தொலைக்காட்சி : திங்கள்-சனிக்கிழமை மதியம் 1 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி கல்யாணமாம் கல்யாணம்
(18 ஜூன் 2018 - 23 பிப்ரவரி 2019 )
அடுத்த நிகழ்ச்சி
- அஞ்சலி
(25 பெப்ரவரி 2019 – 20 சூலை 2019)
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி இரவு 9 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி கல்யாணமாம் கல்யாணம்
(29 ஜனவரி 2018 - 15 ஜூன் 2018)
அடுத்த நிகழ்ச்சி
தமிழ்க்கடவுள் முருகன்
(2 அக்டோபர் 2017 - 26 ஜனவரி 2018)
பிக் பாஸ் தமிழ் 2
17 ஜூன் 2018 - 30 செப்டம்பர் 2018)