ராஜாமகள் என்பது 2019 முதல் 2021 வரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பான இரு குடும்ப வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் குடும்பம் மற்றும் பாச பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இது ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'ரக்த சம்பந்தம்' என்ற தெலுங்கு மொழி தொடரின் கதையை தழுவி எடுக்கப்பட்டது.[2]

ராஜாமகள்
வகை
இயக்கம்விஜய பாஸ்கர் (1-123)
சிவா (124-538)
நடிப்பு
  • ஐரா அகர்வால்
  • ரியாஸ்
  • விமல் வெங்கடேசன்
இசைசேகர் சாயி பரத்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
அத்தியாயங்கள்538
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஆர்.கே மனோகர்
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்ராஜம்மாள் படைப்புகள்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்28 அக்டோபர் 2019 (2019-10-28) –
27 நவம்பர் 2021 (2021-11-27)
Chronology
பின்னர்சித்திரம் பேசுதடி (14:30)
தொடர்புடைய தொடர்கள்ரக்த சம்பந்தம்
வெளியிணைப்புகள்
இணையதளம்

இந்த தொடர் விஜய பாஸ்கர் மற்றும் சிவா ஆகியோர் இயக்கத்தில் ஐரா அகர்வால், ரியாஸ், விமல் வெங்கடேசன், சத்திய சாயி போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[3] இந்த தொடர் 28 அக்டோபர் 2019 முதல் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி, 27 நவம்பர் 2021 அன்று 538 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

கதைச்சுருக்கம்

தொகு

அண்ணன் தங்கையான சிவகாமிக்கு ஆண் குழந்தையும் அண்ணன் ராஜனின் மனைவிக்கு பெண் குழந்தையும். பிறக்கின்றது. பெண்குழந்தையை வெறுக்கும் அண்ணி இதனால் தனது குழந்தையை யாருக்கும் தெரியாமல் மாத்தி வைக்கின்றார் சிவகாமி. குழந்தைகள் வளந்து பெரியவர்கள் ஆனதும் அவர்களின் குடும்பத்தில் ஏற்படும் முரண் காரணமாக உருவாகும் பிரச்னைகளை மையமாக வைத்து காதல், பொறாமை, தியாகம் என இந்தத் தொடர் நகர்கிறது.

நடிகர்கள்

தொகு

முதன்மை கதாபாத்திரம்

தொகு
  • ஐரா அகர்வால் - துளசி[4]
    • விஷ்வாவின் முன்னாள் மனைவி, சிவகாமி மற்றும் பார்த்திபனின் வளர்ப்பு மகள், பைரவி மற்றும் ராஜராஜனின் உண்மையான மகள்.
  • ரியாஸ் (2019-2021) → விமல் வெங்கடேசன் (2021) - விஷ்வா
    • துளசியின் முன்னாள் கணவர், பைரவி மற்றும் ராஜராஜனின் வளர்ப்பு மகன், சிவகாமி மற்றும் பார்த்திபனின் உண்மையான மகன்.
  • சத்திய சாயி - கனகா, (விஷ்வாவின் வருங்கால மனைவி)
    • விஷ்வாவின் முன்னாள் வருங்கால மனைவி, விஷ்வாவை திருமணம் செய்ய விரும்புகின்றார்.

துணை கதாபாத்திரம்

தொகு
  • வனஜா - பைரவி, (விஷ்வாவின் வளர்ப்பு தாய் மற்றும் துளசியின் உண்மையான தாய்)
  • காயத்ரி பிரியா - சிவகாமி, (துளசியின் வளர்ப்பு தாய் மற்றும் விஷ்வாவின் உண்மையான தாய்)
  • பரத் கல்யாண் - ராஜ ராஜன் (ராஜா), (பைரவியின் கணவர் மற்றும் சிவகாமியின் சகோதரர்)
  • பரதன் சிவா (2019-2020) → யுவன்ராஜ் நேத்ரன் (2020-2021) - பார்த்திபன், (சிவகாமியின் கணவர்)
  • சாந்தி வில்லியம்ஸ் (2019-2020) → பாலாம்பிகா (2020-2021) - காஞ்சனா, (கனகா லட்சுமியின் பாட்டி)
  • மீனாட்சி (2019-2020) → விசாலாட்சி மணிகண்டன் (2020) → மீண்டும் மீனாட்சி (2020-2021) - சத்தியவதி, (பைரவியின் வீட்டு வேலைக்காரி)
  • ஸ்ரிதிக் ஸ்ரீராம் - ஸ்ரீராம், (விஷ்வாவின் நண்பர்)
  • ரேகா நாயர் - ரேணுகா தேவி, (மாவட்ட அமைச்சர்)

சிறப்புத் தோற்றம்

தொகு

நடிகர்களின் தேர்வு

தொகு

இந்த தொடரில் துளசியாக ஐரா நடிக்கின்றார்[5] இவர் கண்மணி, கடைக்குட்டி சிங்கம் போன்ற தொடர்களில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் கன்னட நடிகர் ரியாஸ் விஷ்வா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார், பின்னர் 2021 இல் இவருக்கு பதிலாக நடிகர் விமல் வெங்கடேசன் என்பவர் இவரின் கதாபாத்திரத்தில் நடித்தார். இவர்களுடன் வனஜா, பரத் கல்யாண், காயத்ரி பிரியா, யுவன்ராஜ் நேத்ரன் ஆகியோரும் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

நேர அட்டவணை

தொகு

இந்த தொடர் 28 அக்டோபர் 2019 முதல் 27 மார்ச் 2020 ஆம் ஆண்டு வரை வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் 19 ஏப்ரல் 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 3:00 மணிக்கு புதிய நேரத்தில் ஒளிபரப்பானது.

ஒளிபரப்பான தேதி நாட்கள் நேரம் அத்தியாங்கள்
19 ஏப்ரல் 2021 - 27 நவம்பர் 2021
திங்கள் - சனி
15:00 328 - 538
28 அக்டோபர் 2019 - 17 ஏப்ரல் 2021
திங்கள் - சனி
14:30 1- 327

மதிப்பீடுகள்

தொகு

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2019 2.6% 3.3%
2020 1.9% 2.6%
1.5% 2.9%
2021 1.3% 3.1%
1.6% 3.2%

சர்வதேச ஒளிபரப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Rajamagal completes 100 episodes; Iraa Agarwal thanks fans for love and support". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2020-03-20.
  2. "Zee Tamil strengthens afternoon band with new fiction show – Raja Magal". zeenews.india.com.
  3. "மாஜி, 'மிஸ் தமிழ்நாடு'... இப்போ, 'ராஜா மகள்'". tamil.indianexpress.com.
  4. "Rajaa Magal Serial: ராஜா மகள்.. ரோஜா மலர்...நான் ராஜா மகள்..!". tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2019-08-31.
  5. "Iraa Agarwal all excited about her new show Raja Magal; read post". timesofindia.indiatimes.com.

வெளி இணைப்புகள்

தொகு
ஜீ தமிழ் : திங்கள் - சனி பிற்பகல் 3 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி ராஜாமகள் அடுத்த நிகழ்ச்சி
செம்பருத்தி
மறு ஒளிபரப்பு
சித்திரம் பேசுதடி
ஜீ தமிழ் : திங்கள் - சனி பிற்பகல் 2:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி ராஜாமகள் அடுத்த நிகழ்ச்சி
செம்பருத்தி
மறு ஒளிபரப்பு
சித்திரம் பேசுதடி


"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜாமகள்&oldid=3325808" இலிருந்து மீள்விக்கப்பட்டது