ஆயிஷா (நடிகை)

இந்தியத் தொலைக்காட்சி நடிகை

ஆயிஷா என்பவர் தமிழ்நாட்டு தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி தொலைக்காட்சி தொடர்களில் 2017 ஆம் ஆண்டு முதல் நடித்து வருகின்றார். 2வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் என்ற நிகழ்ச்சியில் சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயிஷா
பிறப்பு6 சூன் 1993 (1993-06-06) (அகவை 31)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிதொலைக்காட்சி நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2017-தற்போது வரை
சமயம்இசுலாம்

ஆரம்ப வாழ்க்கை

தொகு

இவர் ஜூன் 06, 1993 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் பிறந்தார். காசர்கோடு அம்பேத்கர் வித்யானிகேதன் ஆங்கில நடுத்தர மேல்நிலைப்பள்ளியில் இடைநிலைக் கல்வியை முடித்தார். சென்னை எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.

நடிப்புத்துறையில்

தொகு

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் தொடரில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் மாயா என்னும் தொடரில் நடித்தார். தற்போது ஜீ தமிழ்தொலைக்காட்சியில் சத்யா 2 என்னும் தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார்.

தொலைக்காட்சி

தொகு
ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
2017 ரெடி ஸ்டெடி போ போட்டியாளர் (1 அத்தியாயம்) விஜய் தொலைக்காட்சி
2018 பொன்மகள் வந்தாள் ரோகினி விஜய் தொலைக்காட்சி
2018 மாயா தர்சினி சன் தொலைக்காட்சி
2019–2021 சத்யா[1] சத்யா ஜீ தமிழ்
2019–2020 சாவித்ரம்மா காரி அப்பாய் நந்தினி ஸ்டார் மா

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

தொகு
ஆண்டு விருது பரிந்துரை பெறுநர் தொடர் முடிவு
2019 2வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் சிறந்த நடிகை ஆயிஷா சத்யா வெற்றி
சிறந்த ஜோடி விஷ்ணு & ஆயிஷா சத்யா வெற்றி

மேற்கோள்கள்

தொகு
  1. "Sathya: TV actress Ayesha to play a tomboy - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயிஷா_(நடிகை)&oldid=3485311" இலிருந்து மீள்விக்கப்பட்டது