ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்

ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் என்பது 2018 முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில், அவற்றில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்படும் ஒரு விருது நிகழ்ச்சி ஆகும்.[1] இந்த நிகழ்ச்சியில் யார் சிறந்த நடிகை மற்றும் நடிகர் என்று மக்களின் வாக்குகள் மூலமாகவும் மற்றும் ஜீ தமிழாலும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.[2]

ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்
Locationசென்னை
நாடுஇந்தியா
வழங்குபவர்ஜீ தமிழ்
முதலில் வழங்கப்பட்டது2018

இதில் விருப்பமான - நடிகை, நடிகர், வில்லி, ஜோடி மற்றும் சிறந்த - நடிகை, நடிகர், துணை நடிகர், துணை நடிகை, வில்லி, அப்பா, அம்மா, மாமியார், தொடர் போன்ற பல பிரிவுகளுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.[3]

கண்ணோட்டம் தொகு

ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதன் 10-வது ஆண்டுவிழாவை கொண்டாடும் விதமாக, முதன்முறையாக ‘ஜீ தமிழ் குடும்ப விருதுகள்’ என்ற விழா நடத்தப்பட்டது. இந்த விழா சென்னை மைதானத்தில் மலையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும். இந்த அனைத்து ஆண்டு விழாவில் நடிகர்கள் சத்யராஜ், விஷால், விஜய் சேதுபதி, ஹரீஷ் கல்யாண், ஜீவா இயக்குநர் அட்லீ, நடிகைகள் அமலா பால், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்துக்கொள்வார்கள்.[4]

வாக்கு பதிவு தொகு

நடிகர் மற்றும் நடிகைகளுக்கு பல்வேறு பிரிவுகளுக்கான தேர்வில் தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்குச் சம்மந்தப்பட்ட எண்களுக்கு தொடர்வு கொள்வதன் மூலம் அல்லது ஜீ5 செயலி / வலைதளத்திலுள்ள ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் மைக்ரோசைட்டில் வாக்களித்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். கூடுதலாக சேலம், திண்டுக்கல், கடலூர், தேனி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், கோவை, திருச்சி, திருநெல்வேலி, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, பாண்டிச்சேரி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய ஊர்களுக்குப் பயணிக்கும் ஜீ தமிழ் டிரங்கர் வாகனங்களிலும் நேரடியாக வாக்களித்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.[5]


மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு