அசோகவனம் (2001 திரைப்படம்)
தக்காளி சீனிவாசன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
அசோகவனம் (Asokavanam) 2001ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளிவந்த பரபரப்பூட்டும் திரைப்படமாகும். இதனை தக்காளி சீனிவாசன் எழுதி இயக்கியிருந்தார்.[1] இந்தத் திரைப்படத்தில் சிறீமன், லிவிங்ஸ்டன், ராஜஸ்ரீ, ரியாஸ் கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மாஸ்டர் மகேந்திரன், பேபி ஜெனிபர் ஆகியோர் துணை வேடங்களில் தோன்றியிருந்தனர். தேவா இசையமைத்த இப்படம் 2001 அக்டோபர் 12 அன்று வெளியிடப்பட்டது.[2][3][4]
அசோகவனம் | |
---|---|
இயக்கம் | தக்காளி சீனிவாசன் |
தயாரிப்பு | கபிலன் கண்ணன் பரமேஸ்வரன் அம்பா பரமேஸ்வரன் |
கதை | தக்காளி சீனிவாசன் |
இசை | பாலபாரதி |
நடிப்பு | சிறீமன் லிவிங்ஸ்டன் ரியாஸ் கான் ராஜஸ்ரீ |
ஒளிப்பதிவு | கே. சி. திவாகர் |
கலையகம் | ஹவுஸ்புல் பிக்சர்ஸ் |
வெளியீடு | 12 அக்டோபர் 2001 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- மதுவாக ஸ்ரீமான்
- செல்வமாக லிவிங்ஸ்டன்
- மோகனாக ரியாஸ் கான்
- உமாவாக ராஜஸ்ரீ
- சதாசிவமாக மோகன் ராமன்
- அபிசேக் சங்கர்
- ராகுலாக மகேந்திரன்
- பிரியாவாக நான்சி ஜெனிபர்
வெளியீடு
தொகுதி இந்துவின் விமர்சகர் "முதல் பாதியில் திரைக்கதை நன்றாக இருக்கிறது ஆனால் இரண்டாவது பாதியில் தொய்வு" என்று குறிப்பிட்டார், "பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தக்கவைத்துக்கொள்ளவோ அல்லது யூகிக்க வைக்கவோ இயக்குநர் அதிகம் முயற்சி செய்யவில்லை" என்றும் கூறினார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Asoka Vanam". Cinesouth. Archived from the original on 11 April 2004. பார்க்கப்பட்ட நாள் 21 October 2024.
- ↑ "Archived copy". Archived from the original on 2017-02-19. பார்க்கப்பட்ட நாள் 2017-02-17.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ KUMAR, S. R. ASHOK. "My First Break - Abishek". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 18 February 2017.
- ↑ Raghavan, Nikhil. "Itsy Bitsy". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 18 February 2017.
- ↑ "Film Review: Asokavanam". தி இந்து. 2001-10-19. Archived from the original on 9 November 2017. பார்க்கப்பட்ட நாள் 18 February 2017.