மோகன் ராமன்

தமிழ்த் திரைப்பட நடிகர்

மோகன் ராமன் (பிறப்பு மோகன் வெங்கட பட்டாபி ராமன், ஏப்ரல் 3, 1956) இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகராவார். மேலாண்மைப் பயிற்றுனராகவும் பணி புரிந்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களில் துணை மற்றும் எதிர்மறை வேடங்களில் சிறப்பாக நடித்துப் பெயர் பெற்றுள்ளார். குறிப்பாக மர்மதேசம் (விடாது கறுப்பு), சிதம்பர ரகசியம் போன்ற தொலைக்காட்சித் தொடர்களால் பெரிதும் அறியப்பட்டவர். வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான வி. பி. ராமனின் மூத்த மகனாவார். தற்போதைய தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் பி. எஸ். ராமனின் அண்ணன் ஆவார்.

மோகன் ராமன்
பிறப்புமோகன் வெங்கட பட்டாபி ராமன்
ஏப்ரல் 3, 1956 (1956-04-03) (அகவை 68)
பணிதொலைக்காட்சி, திரைப்பட நடிகர், மேலாண்மை பயிற்சியாளர்
செயற்பாட்டுக்
காலம்
1991-இன்றளவும்
வாழ்க்கைத்
துணை
பத்மா
பிள்ளைகள்விக்ரம்
வித்யுலேகா ராமன்

திரைப்படத்துறை

தொகு

தொலைக்காட்சி

தொகு
 
பின்வரிசையில் கண்ணாடி யணிந்துள்ள சிறுவன் மோகன் ராம்
தொலைக்காட்சித் தொடர் ஆண்டு வேடம் இயக்குனர் குறிப்புகள்
மர்மதேசம் 1997–2001 நாகா
காதல் பகடை 1997-98 கே. பாலச்சந்தர்
சிதம்பர ரகசியம் நாகா எதி்ர்மறை வேடம்
சின்ன பாப்பா பெரிய பாப்பா 2000–2005
ஆனந்தம் 2005–2009 சிறீநிவாசன் எதி்ர்மறை வேடம்
வைர நெஞ்சம் 2007–2010
மாமா மாப்பிள்ளே 2010–நடப்பு நகைச்சுவை

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் வேடம் இயக்குனர் குறிப்புகள்
1991 இதயம் கதிர் அறிமுகம்
1994 மகாநதி சந்தான பாரதி
1994 ஆனஸ்ட் ராஜ் கே. எஸ். ரவி
1995 சப்சே படா கில்லாடி இந்தி
1997 ஒன்ஸ் மோர் எஸ். ஏ. சந்திரசேகர்
1997 ஆஹா சுரேஷ் கிருஷ்ணா
1998 அரிச்சந்திரா செய்யாறு ரவி
1999 படையப்பா கே. எஸ். ரவிக்குமார்
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் அப்பாசின் செயலர் ராஜீவ் மேனன்
2002 தேவன் அருண் பாண்டியன்
2003 அன்பே அன்பே மணிபாரதி
2003 மாஜிக் மாஜிக் 3டி ஊர் தலைவர் ஜோஸ் புன்னூஸ்
2007 பெரியார் பி. ஆர். அம்பேத்கர் ஞான ராஜசேகரன்
2007 நான் அவனில்லை செல்வா
2008 குசேலன் பி. வாசு
2009 டிஎன் 07 ஏஎல் 4777 லட்சுமிநாதன்
2009 குரு என் ஆளு செல்வா
2010 இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம் சிம்புத்தேவன்
2011 பயணம் வெங்கட்ராமன் ராதா மோகன்
2011 சபாஷ் சரியானப் போட்டி வேணு அரவிந்த்
2013 ராமானுஜன் ஞான ராஜசேகரன்
2013 சென்னை எக்ஸ்பிரஸ் ஊர் பூசாரி ரோகித் செட்டி இந்தி

உசாத்துணைகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகன்_ராமன்&oldid=3718488" இலிருந்து மீள்விக்கப்பட்டது