பெரியார் (திரைப்படம்)
ஞான ராஜசேகரன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழத் திரைப்படம் பெரியார் ஆகும். இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் பெரியார் ராமசாமி நாயக்கர் எனும் பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.[1] இத்திரைபடத்தில் பெரியாராக சத்தியராஜ் நடித்தார். ஞான ராஜசேகரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை உருவாக்குவதற்கு 95 இலட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது. இப்படத்தை லிபர்டி கிரியேஷன்ஸ் சார்பில் கோ.சாமிதுரை தயாரித்தார்.
பெரியார் | |
---|---|
இயக்கம் | ஞான ராஜசேகரன் |
தயாரிப்பு | லிபர்டி கிரியேஷன்ஸ் |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | சத்யராஜ் குஷ்பு ஜோதிமயி மனோரமா |
பாடலாசிரியர் | வைரமுத்து |
ஒளிப்பதிவு | தங்கர் பச்சான் |
படத்தொகுப்பு | பி. லெனின் |
கலை | ஜெ.கே |
வெளியீடு | 2007 |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ரூபாய் |
நடிகர்கள்
தொகு- சத்யராஜ் - ஈ. வெ. இராமசாமி
- சந்திரசேகர் - பெரியாரின் தோழன் ராமநாதன்
- ஜோதிமயி - நாகம்மாள்
- குஷ்பூ - மணியம்மை
- நிழல்கள் ரவி
- எஸ். எஸ். ஸ்டான்லே - கா. ந. அண்ணாதுரை
- மோகன் ராமன் - அம்பேத்கர்
- சொர்ணமால்யா (நடிகை)
- டைப்பிஸ்ட் கோபு - நிருபர்
பாடல்கள்
தொகுபாடலாசிரியர் - வைரமுத்து, இசையமைப்பு - வித்யாசாகர்
- பகவான் ஒரு நாள், ஆகாயம் படைச்சார் - மதுபாலகிருஷ்ணன் குருசரண், சூர்யபிரகாஷ், முரளிதரன்
- இடை தழுவிக்கொள்ள, ஜடை தடவிக்கொள்ள - பிரியா சுப்பிரமணியன்
- கடவுளா நீ கல்லா - மதுபாலகிருஷ்ணன் குருசரண், மானிக்கா வினாயகன், சந்திரன், ரோசினி
- தை தை தை பெண்ணுரிமை செய் செய் - மாணிக்க விநாயகம், விஜயலட்சுமி சுப்பிரமணியன்
- தாயும் யாரோ, தந்தை யாரோ, நானும் யாரோ யார் யாரோ? - மது பாலகிருஷ்ணன்
இவற்றையும் பார்க்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- நான் 'கண்ட' பெரியார் !
- "பெரியார்"
- ஒரு சகாப்தத்தின் வரலாறு" - பெரியார் திரைப்பட விமர்சனம்
- பெரியார் ஒரு உணர்ச்சி காவியப் பதிவு....
- பெரியார் திரைப்படம் -ஓர் அனுபவம்
- 6 மொழிகளில் பெரியார் - தட்ஸ் தமிழ் கட்டுரை[தொடர்பிழந்த இணைப்பு]
- பெரியார் படப் பாடல்கள் பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம்
- பெரியார் திரைப்படம் - கள்ளுக்கடையோடு நின்றுபோன மறியல்
- Periyar Review - by Settu Shankar[தொடர்பிழந்த இணைப்பு] - (ஆங்கில மொழியில்)
- Periyar is path-breaking - (ஆங்கில மொழியில்)
- http://www.periyarmovie.com/ பரணிடப்பட்டது 2007-05-10 at the வந்தவழி இயந்திரம் - (ஆங்கில மொழியில்)