பாரதி (திரைப்படம்)
சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கையின் ஒரு பகுதி, 'பாரதி' என்று, தமிழில் திரைப்படமாக்கப்பட்டது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பாரதி திரைப்படம் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஞான ராஜசேகரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பாரதியாராக சாயாஜி ஷிண்டேயும், செல்லம்மாவாக தேவயானியும் நடித்துள்ள இத்திரைப்படம் 2000 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
பாரதி | |
---|---|
![]() | |
இயக்கம் | ஞான ராஜசேகரன் |
தயாரிப்பு | சுஜாதா ரங்கநாதன், எம். வரதராஜன், கே. மணிபிரசாத் |
கதை | ஞான ராஜசேகரன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சாயாஜி ஷிண்டே, தேவயானி, நிழல்கள் ரவி |
ஒளிப்பதிவு | தங்கர் பச்சான் |
படத்தொகுப்பு | பி. லெனின்,வி. டி. விஜயன் |
விநியோகம் | மீடியா ட்ரீம்ஸ் தனியார் நிறுவனம் |
வெளியீடு | 2000 |
ஓட்டம் | 150 நிமிடங்கள். |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்தொகு
இத்திரைப்படம் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும். இந்திய விடுதலைப் பேராட்டத்தில் பாரதியின் பங்கையும், பாரதியின் உயர்வான சிந்தனைகளும் இப்படத்தின் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம்.
நடிகர்கள்தொகு
நடிகர் | கதாப்பாத்திரம் |
---|---|
சாயாஜி ஷிண்டே | சுப்பிரமணிய பாரதி |
தேவயானி | செல்லம்மாள் |
புஷ்பாக் ரமேஷ் | சிறு வயது பாரதியாக |
ரமேஷ் குமார் | பாரதியின் நண்பராக |
நிழல்கள் ரவி | எஸ். பி. ஒய். சுரேந்திரநாத் ஆர்யா |
டி. பி. கஜேந்திரன் | குவளை |
வகைதொகு
பாடல்கள்தொகு
இத்திரைப்படம் இளையராஜா இசையமைத்த திரைப்படமாகும்
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
1 | அக்கினி குஞ்சொன்று | கே. ஜே. யேசுதாஸ் | சுப்பிரமணிய பாரதி | |
2 | பாரத சமுதாயம் | கே. ஜே. யேசுதாஸ் | சுப்பிரமணிய பாரதி | |
3 | எதிலும் இங்கு | மது பாலகிருஷ்ணன் | புலமைப்பித்தன் | |
4 | பிரெஞ்ச் இசை | இளையராஜா | - | |
5 | கேளடா மானிடவா | ராஜ்குமார் பாரதி | சுப்பிரமணிய பாரதி | |
6 | மயில்போல பொண்ணு | பவதாரிணி | மு. மேத்தா | |
7 | நல்லதோர் வீணை | மனோ, இளையராஜா | சுப்பிரமணிய பாரதி | |
8 | நின்னைச் சரணடைந்தேன் | பாம்பே ஜெயஸ்ரீ | சுப்பிரமணிய பாரதி | |
9 | நின்னைச் சரணடைந்தேன் | இளையராஜா | சுப்பிரமணிய பாரதி | |
10 | நிற்பதுவே நடப்பதுவே | ஹரிஷ் ராகவேந்திரா | சுப்பிரமணிய பாரதி | |
11 | வந்தேமாதரம் | மது பாலகிருஷ்ணன் | சுப்பிரமணிய பாரதி |