டைப்பிஸ்ட் கோபு

இந்திய நடிகர்

கோபாலரத்னம் எனும் இயற்பெயரைக் கொண்ட டைப்பிஸ்ட் கோபு (இறப்பு: மார்ச் 6, 2019) 600 இற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், 400 திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்தவர்.[1][4][5]

கோபாலரத்னம்
பிறப்பு1933/1934[1]
இறப்பு (அகவை 85)[2][3]
செயற்பாட்டுக்
காலம்
1955–2019
அறியப்படுவதுதிரைப்பட, நாடக நடிகர்

நடிப்புத் தொழில்தொகு

திருச்சி மாவட்டம், மணக்கால் கிராமத்தில் பிறந்த கோபாலரத்னம்[1], சென்னை இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்துக் கொண்டிருந்த போது, 1955-இல் சோ மற்றும் ஒய். ஜி. மகேந்திரன் நாடக குழுக்களில் தொடர்ந்து நடித்துள்ள கோபு தனது நண்பரும், நகைச்சுவை நடிகருமான நாகேசுக்கு திரைப்பட வாய்ப்பை வாங்கிக் கொடுத்தவர்.

1959-ல் நெஞ்சே நீ வாழ்க எனும் மேடை நாடகத்தில் டைப்பிஸ்ட் கோபு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததால், கோபாலரத்தினத்திற்கு டைப்பிஸ்ட் கோபு அடைபெயர் நிலைத்து நின்றது.[1]1965ல் கே. பாலசந்தர் இயக்கிய நாணல் எனும் திரைப்படத்தில் முதலில் அறிமுகமானார்.

பின்னர் ஒய். ஜி. மகேந்திரன் நாடகக் குழுவில் இணைந்து பல மேடை நாடகங்களில் நடித்தார். 2002ல் இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. [6]இவர் தொலைக்காட்சித் தொடர்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். [7]

நடித்த சில திரைப்படங்கள்தொகு

தொலைக்காட்சித் தொடர்கள்தொகு

  • வசூல் சக்கரவர்த்தி
  • வீட்டுக்கு வீடு லூட்டி
  • மிஸ்டர். பிரைன்
  • துப்பறியும் சாம்பு[8]

மறைவுதொகு

டைப்பிஸ்ட் கோபு, தமது 82-வயதில் உடல்நலக்குறைவால் 6 மார்ச் 2019 அன்று மறைந்தார். [9]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "வாய்ப்பும், வருமானமும் தேவை!". தினமணி. 2011-07-31. http://dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article633301.ece. பார்த்த நாள்: 2013-11-26. 
  2. "பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு மறைவு: நாடகத்தினர், திரையுலகினர் அஞ்சலி". காமதேனு. 6 March 2019. 6 மார்ச் 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6-03-2019 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |access-date= (உதவி)
  3. https://www.indiaglitz.com/typist-gopu-died-y-gee-mahendra-drama-troupe-tamil-news-230970
  4. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Oscar-worthy-performance-by-Sivaji-Y-Gee-Mahendra/articleshow/45883224.cms
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2016-03-04 அன்று பரணிடப்பட்டது.
  6. "Kalaimamani awards announced". The Hindu. 2003-10-11. Archived from the original on 2003-10-26. https://web.archive.org/web/20031026093219/http://www.hindu.com/2003/10/11/stories/2003101106480400.htm. பார்த்த நாள்: 2013-11-26. 
  7. Malathi Rangarajan (2004-04-30). "The `Typist' is a contented man". Archived from the original on 2004-11-12. https://web.archive.org/web/20041112120552/http://www.hindu.com/fr/2004/04/30/stories/2004043001720500.htm. பார்த்த நாள்: 2013-11-26. 
  8. https://www.youtube.com/watch?v=6R6wQe_GcOc
  9. பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு மறைவு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைப்பிஸ்ட்_கோபு&oldid=3247115" இருந்து மீள்விக்கப்பட்டது