முதன்மை பட்டியைத் திறக்கவும்

மைக்கேல் மதன காமராஜன்

1990 சிங்கீதம் சீனிவாசராவின் படம்

மைக்கேல் மதன காமராஜன் 1991இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஊர்வசி, நாகேஷ், கிரேசி மோகன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். முழுநீள நகைச்சுவைத் திரைப்படமான இதில் கமல்ஹாசன் நான்கு வேடங்களில் (திருடன் மைக்கேல், தொழிலதிபர் மதனகோபால், சமையல்காரன் காமேஷ்வரன் மற்றும் தீயணைப்பு வீரர் ராஜு) நடித்திருப்பது இப்படத்தின் சிறப்பு. சார்லி சாப்ளினின் கோல்ட் ரஸ் என்ற திரைப்படத்தைத் தழுவி படத்தின் இறுதிக் காட்சிகள் படமாக்கப்பட்டன.[1][2]

மைக்கேல் மதன காமராஜன்
இயக்குனர்சிங்கீதம் சீனிவாசராவ்
தயாரிப்பாளர்மீனா பஞ்சு அருணாசலம், P.A.ஆர்ட்ஸ் தயாரிப்பு
மூலக்கதைகாதர் கஷ்மீரி
திரைக்கதைகமல்ஹாசன்
வசனம்கிரேசி மோகன்
இசையமைப்புஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
குஷ்பூ
ஊர்வசி
ரூபிணி
டெல்லி கணேஷ்
கிரேசி மோகன்
மனோரமா
வெண்ணிற ஆடை மூர்த்தி
சந்தான பாரதி
பிரவீன் குமார்
நாகேஷ்
ஒளிப்பதிவுB.C.கௌரிசங்கர்
கலைபெக்கட்டி ரெங்காராவ், அசோக்
நடனம்S. பிரபு,
லலிதா மணி (பேர் வைச்சாலும்)
வெளியீடு17 அக்டோபர் 1990
கால நீளம்162 நிமிடங்கள்
மொழிதமிழ்

பாடல்கள்தொகு

ஐந்து பாடல்கள், இசைஞானி இளையராஜாவால் இசை அமைக்கப்பட்டன. சுந்தரி நீயும்... எனும் பாடல் மலையாள மொழியில் புனையப்பட்டது. இதுவே இந்திய திரைப்பட வரலற்றிலேயே மெதுவாக இயக்கப்பட்ட (slow motion) பாடல் ஆகும்.[3]

Untitled
எண். பாடல்கள் பாடகர்கள் பாடலாசிரியர் குறிப்பு கதாபாத்திரம்
1 கத கேளு கத கேளு... இளையராஜா பஞ்சு அருணாசலம் பயோஸ்கோப் படம் காண்பிப்பவர் (சிங்கீதம் சீனிவாசராவ்)
2 ரம் பம் பம் ஆரம்பம்... எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா வாலி ராஜு, சாலினி
3 சிவராத்திரி... கே. எஸ். சித்ரா, மனோ வாலி மதன், சக்குபாய்
4 சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்... கமல்ஹாசன், எஸ். ஜானகி பஞ்சு அருணாசலம் இப்பாடல் இருமுறை அதன் அசல் வேகத்தில் படப்பிடிப்பு செய்யப்பட்டது காமேஸ்வரன், திரிபுர சுந்தரி
5 பேரு வச்சாலும் வைக்காம போனாலும்... மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி வாலி ராஜூ, சாலினி

வெளி இணைப்புக்கள்தொகு

மேற்கோள்கள்தொகு