அனந்து (திரைக்கதை எழுத்தாளர்)

தமிழ் திரைக்கதை எழுத்தாளர்

அனந்து என்பவர் ஒரு இந்திய திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் பெரும்பாலும் கே. பாலசந்தருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மேலும் இவர் நடிகர் கமல்ஹாசனின் வழிகாட்டியாக இருந்தவர். [1] [2]

அனந்து
இறப்பு1998
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1970–1997

தொழில்தொகு

அனந்து திரைக்கதை எழுத்தாளராகவும், இயக்குனர் கே. பாலசந்தரின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தார். இவர் இயக்குநர் சி. ருத்ரைய்யாவுடன் இரண்டு படங்களில் பணியாற்றினார். படத்தின் தலைப்புப் பட்டியில் (டைட்டில் கார்டு), ருத்ரய்யா அவள் அப்படித்தான் படத்தை அனந்துவுக்கு அர்ப்பணித்திருந்தார். சி. வி. இராசேந்திரன் இயக்கிய அனுபவம் புதுமை மற்றும் கலாட்டா கல்யாணம் ஆகிய படங்களில் சித்ராலயா கோபுவுடன் துணை உரையாடல் எழுத்தாளராக பணியாற்றினார். கலாட்டா கல்யாணம் படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதாவுடன் இடைவேளைக்குப் பிறகான காட்சிகளில் நடித்தார்.[3]

1991 இல், அனந்து எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஆனந்த் பாபு, ராதா, ரம்யா கிருஷ்ணன் போன்றோரின் நடிப்பில் உருவான சிகரம் என்ற படத்தை இயக்கினார். [4] ஒரு விமர்சகர் "யதார்த்தத்தின் மீது ஒரு கண்ணும், ஆழமான உரையாடலுக்கான திறமையும் கொண்ட, அனந்து இதை தன் திரைப்பட வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத நுழைவாக ஆக்குகிறார்." [5]

கமல்ஹாசனுடனான பணிகள்தொகு

அனந்துவை கமல்ஹாசன் நெருங்கிய கூட்டாளியாகவும் வழிகாட்டியாகவும் கருதினார். [6] அனந்து மூலம், கமலால் கே. பாலசந்தருடன் நெருங்கிய தொடர்பைப் பேண முடிந்தது. [7]

1970 களின் முற்பகுதியில், கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் இருந்து வந்த சலிப்பூட்டும், முக்கியத்துவம் அற்ற வேடங்களால் மனமுடைந்து இருந்தார். மலையாளப் படங்களில் பணியாற்றுவதற்கான வாழ்ப்புகளை ஏற்றுக் கொண்டபின், அனந்துவுக்கு தனது திரைப்பட ஆர்வத்தை மீண்டும் ஊக்குவித்ததற்காக பாராட்டினார். [8] இந்த காலகட்டத்தில், அனந்து கமலஹாசனின் திரை நடிப்பை மதிப்பிடுவதன் மூலமும், உலக சினிமாவை அவருக்கு அறிமுகப்படுத்துவதன் மூலமும் அவரது திறமையை வளர்த்துக் கொள்ள உதவினார். [9] தனக்கு திரைக்கதை எழுத கற்றுக் கொடுத்ததற்காக அனந்துவை கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

1990 களில் கமலின் பல படங்களில் அனந்து பலவகையிலும் அவருடன் நெருக்கமாக பணியாற்றினார். அனந்து அவரின் நம்மவர் படத்தின் தலைப்புக்கு காரணமாக இருந்தார். இந்த சொல் பின்னர் கமல்ஹாசனால் அவரது அரசியல் நடவடிக்கைகளில் தழுவிக்கொள்ளப்பட்டது. [10]

1998 இல் அனந்து இறந்ததைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தமிழில் இயக்கிய முதல் படமான ஹே ராம் (2000) ஆனந்துவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. [11] 2016 இல் ஹென்றி லாங்லாயிஸ் விருதை பெற்ற பிறகு, கமல்ஹாசன் அந்த விருதை அனந்துக்கு அர்ப்பணித்தார். [12] கமலின் 60 வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஒரு பகுதியாக, 2019 ல் கமல்ஹாசனின் அலுவலகங்களில் அனந்துவின் அதிகாரப்பூர்வ உருவப்படம் திறக்கப்பட்டது. [13]

பகுதித் திரைப்படவியல்தொகு

ஆண்டு படம் பணி குறிப்பு Ref.
கதை திரைக்கதை உரையாடல் இயக்கம் நடிப்பு
1968 கலாட்டா கல்யாணம் ஆம்
1970 கல்யாண ஊர்வலம் ஆம்
1978 அவள் அப்படித்தான் ஆம் ஆம்
1980 கிராமத்து அத்தியாயம் ஆம் ஆம்
1981 மீண்டும் கோகிலா ஆம் [14]
1981 ராஜ பார்வை ஆம்
1984 புதியவன் ஆம் ஆம்
1987 கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஆம்
1988 சத்யா ஆம்
1988 என் தமிழ் என் மக்கள் ஆம்
1989 அபூர்வ சகோதரர்கள் ஆம்
1989 சிவா ஆம்
1990 உன்னைச் சொல்லி குற்றமில்லை ஆம்
1990 கேளடி கண்மணி ஆம் [15]
1990 மைக்கேல் மதன காமராஜன் ஆம்
1990 ராஜா கைய வைச்சா ஆம்
1990 ஒரு வீடு இரு வாசல் ஆம்
1990 அஞ்சலி ஆம்
1991 சிகரம் ஆம்
1991 குணா ஆம்
1995 சதி லீலாவதி ஆம்
1996 கல்லூரி வாசல் ஆம்
1996 காதல் பகடை ஆம் தொலைக்காட்சித் தொடர்
1997 ஆஹா ஆம்

குறிப்புகள்தொகு

 1. Kumar, Rajitha (8 November 2000). "Kamal, as we know him". Rediff.com. 11 March 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
 2. "'Kamal does not have money': Rajini at Chandrahasan memorial meet". Coastal Digest. 6 April 2017. 22 November 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
 3. Sundaram, Nandhu (18 November 2017). "'Aval Appadithan': Why this '70s drama was ahead of its time in telling women's stories". The News Minute. 26 February 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
 4. Muralidharan, Kavitha (3 November 2016). "SPB's masterly voice, a tonic for all seasons". dtNext.in. 23 October 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Sigaram". GeoCities. 19 January 2004. 22 November 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
 6. Nurullah, Abdullah (7 December 2017). "Kamal Haasan reveals names of writers who have inspired him". The Times of India. 7 May 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
 7. Gupta, Priya (22 June 2015). "I was possessive about K Balachander: Kamal Haasan". The Times of India. 20 October 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
 8. "When Kamal Haasan Skyped AR Rahman In Thalaivanirukkindraan". Film Companion. 13 June 2020. 24 August 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
 9. "Kamal Haasan's heart-to-heart with AISFM students!". AISFM Blog. 22 December 2015. 29 January 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
 10. Shoba, V (2 August 2018). "Kamal Haasan: A Star in Search of a Bigger Sky". Open. 22 November 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
 11. Rangan, Baradwaj (17 October 2014). "Master of Arts". Baradwaj Rangan. 11 February 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 November 2020 அன்று பார்க்கப்பட்டது.
 12. "Henri Langlois award for Kamal Haasan". Sify. 31 March 2016. 12 May 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
 13. "Kamal Haasan and Rajinikanth join hands to unveil their mentor K Balachander's statue". 8 November 2019. https://www.thehindu.com/entertainment/movies/kamal-and-rajinikanth-join-hands-to-unveil-their-mentor-k-balachanders-statue/article29918631.ece. 
 14. "37 வருடத்துக்குப் பிறகு 'மீண்டும் கோகிலா' : இயக்குனர் நெகிழ்ச்சி". Puthiya Thalaimurai. 8 January 2018. 24 March 2021 அன்று பார்க்கப்பட்டது.
 15. Vinoth Kumar, N (22 August 2020). "30 years of Keladi Kanmani, a film that established SPB as an actor". The Federal. 4 October 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 February 2021 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு