கலாட்டா கல்யாணம்

கலாட்டா கல்யாணம் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். சித்ராலயா கோபு எழுத்தில் சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படமானது 1965 இந்தியா பாக்கித்தான் போரின்போது போர் நிதி திரட்டும் விதமாக சித்ராலயா கோபு எழுதி சிவாஜி கணேசன் இயக்கி, தமிழ்த் திரையுலக பிரபலங்கள் நடித்த கலாட்டா கல்யாணம் என்ற நாடகத்தை அடிப்படையாக கொண்டு அதேபெயரில் சிவாஜி கணேசனின் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படமாகும்.[1]

கலாட்டா கல்யாணம்
இயக்கம்சி. வி. ராஜேந்திரன்
தயாரிப்புநாகசுப்பிரமணியம்
ராம்குமார் பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
ஜெயலலிதா
வெளியீடுஏப்ரல் 12, 1968
ஓட்டம்.
நீளம்4357 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்தொகு

நான்கு பெண்களைப் பெற்ற ஒரு தந்தை, தன் பெண்களுக்கு வரன் பார்க்கும் வேலையை அவரது இரண்டாவது பெண்ணின் காதலனிடம் ஒப்படைக்கிறார். முதல் பெண் ஆண்களை வெறுப்பவர். மூன்றாவது பெண் இசைப் பைத்தியமாகவும், நான்காவது பெண் சினிமா பைத்தியமாகவும் இருக்கின்றனர். வெவ்வேறு குணாம்சங்கள் கொண்ட இந்தப் பெண்களுக்கு மாப்பிள்ளை தேடும் வேளையில் இரண்டாவது பெண்ணின் காதலன் ஈடுபட்டு அதனால் ஏற்படும் சிரமங்களே படத்தின் கதை.

மேற்கோள்கள்தொகு

  1. டி.ஏ.நரசிம்மன் (2018 சூலை 5). "திருவல்லிக்கேணி எனும் திருத்தலம்`". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 7 சூலை 2018.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாட்டா_கல்யாணம்&oldid=3196595" இருந்து மீள்விக்கப்பட்டது