ஹே ராம்

கமல்ஹாசன் இயக்கத்தில் 2000 இல் வெளியான திரைப்படம்

ஹே ராம், 2000ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான கமலஹாசன், ஷாருக்கான், ராணி முகர்ஜி மற்றும் பலர் நடித்துள்ளனர். கமலஹாசனே இப்படத்தை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்தார். இத்திரைப்படம் இந்தியாவின் சார்பில் அந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது பெறுவதற்கான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஹே ராம்
இயக்கம்கமலஹாசன்
தயாரிப்புகமலஹாசன்
கதைகமலஹாசன்
மனோகர் ஷியாம் ஜோஷி
(இந்தி வசனங்கள்)
இசைஇளையராஜா
நடிப்புகமலஹாசன்
ஷாருக் கான்
ஹேமா மாலினி
ராணி முகர்ஜி
கிரிஷ் கர்னாட்
நசுரூதீன் ஷா
வசுந்தரா தாஸ்
வி. எஸ். ராகவன்
ஒளிப்பதிவுதிரு
படத்தொகுப்புரேணு சலுஜா
விநியோகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்
வெளியீடுபெப்ரவரி 18, 2000
ஓட்டம்202 நிமிடம். (தமிழ்)
199 நிமிடம். (இந்தி)
மொழிதமிழ், ஹிந்தி

வகைதொகு

நாடகப்படம்

கதைதொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

சாக்கேத் ராம் (கமலஹாசன்)ஒரு பிராமணராவார், மற்றும் அவரின் நண்பரான அம்ஜத் அலி கான் (சாருக் கான்) ஒரு இஸ்லாமியர் இருவரும் அகழ்வாராய்ச்சியாளர்கள். 1940 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் நடத்தப்படும் அகழ்வாராய்ச்சியில் இருவரும் மிக முக்கிய பங்கைவகிக்கின்றனர். அங்கிருந்து பிரியும் இவர்கள் பின்னர் கலவரங்களின் மத்தியில் சந்திப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பாக்கித்தான் பிரிவினையின்போது கொல்கத்தாவில் ஏற்பட்ட வன்முறைக்கு தன் மனைவி (ராணி முகர்ஜி) கொல்லப்படுகிறார். இசுலாமியர்களுக்கு அளவுக்கு அதிகமாக இடம் கொடுத்த மகாத்மா காந்தியே இதற்கு காரணம் என்று இந்துத்துவ குழுக்களால் சாக்கேத் ராம் மூளைச் சலவை செய்யப்படுகிறார். மனைவியை இழந்த துயரமும், பழிவாங்கும் உணர்வும், மூளை சலவையும் சேர்ந்து இசுலாமியர்களையும், காந்தியையும் வெறுக்கத்தொடங்குகிறார். மேலும் நண்பர் லால்வானியின் (சௌரப் சுக்லா) குடும்பம் வன்முறையால் சிதறுண்டதை அறிந்தபின், அந்த வெறுப்பு வளுவடைகிறது. மகாத்மா காந்தியை கொல்வதற்காக இந்துத்வா அமைப்பினால் இவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

காந்தியைக் கொல்வதற்காக தன் இரண்டாம் தாரத்தையும் விடுத்து தில்லிக்கு செல்லும் முன்பாக வாரணாசிக்குச் சென்று கங்கையில் புனித நீராடி துறவறம் ஏற்கிறார் சாகேத் ராம். தனது குறிக்கோளை அடைய டெல்லிக்குச் செல்கின்றார். அங்கு தனது கையடக்கத் துப்பாக்கியுடன் ஒரு விடுதியில் தங்கியிருக்கும் பட்சத்தில் காவல்துறையினரால் தேடப்பட்ட போது கையடக்கத் துப்பாக்கியை ஒரு ஊர்தி மேல் போட்டு விட்டார். அவ்வூர்தியும் இஸ்லாமியர்கள் இருக்கும் பகுதிக்குச் செல்லவே அங்கு செல்கின்றார் சாக்கேத் ராம் அங்கு தனது பழைய நண்பரும் காந்தியை பின்பற்றுபவருமான அம்ஜத்தை சந்திக்கின்றார். அங்கு தனது துப்பாக்கியைப் பெற்றுக் கொள்ளுகிறார் சாக்கேத் ராம். அப்போது சாகேத் ராமின் நோக்கத்தை அறிந்த அம்ஜத் காந்தியின் உயிருக்கு பதிலாக தனது உயிரை எடுத்துக் கொள்ளுமாறு சாகேத் ராமை கோருகிறார். அங்கு நடந்த சம்பவங்களில் அம்ஜத்தின் நெருங்கிய உறவினர்கள் சிலரின் மரணத்திற்கு சாகேத் ராம் தன்னை அறியாமல் காரணமாகிறார். இருந்தாலும் சாகேத் ராமை காட்டிக் கொடுக்காமல் அம்ஜத் உயிர் இழக்கிறார். அம்ஜத்தின் மரணம் சாகேத் ராமை உலுக்குகிறது. மதவெறியால் ஏற்படும் இழப்புகளை உணர்ந்து காந்தியிடம் மன்னிப்பு கேட்கச் செல்லும் பொழுது கோட்சேயின் துப்பாக்கிக் குண்டுகள் காந்தி மீது பாய்கின்றது. பின்னாட்களின் காந்தியின் அகிம்சைக் கொள்களின் மகிமைகளை அறிந்து அவரது காலணிகளை சாகேத் ராம் பாதுகாத்து வந்தது குறிப்பிடத்தகுந்தது.

விருதுகள்தொகு

2000 தேசிய திரைப்பட விருது (இந்தியா)

  • வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த துணை நடிகர்- அதுல் குல்கர்னி
  • வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது - சிறந்த உடை அலங்காரம்- சரிகா
  • வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த தந்திரக் காட்சிகள்- மந்த்ரா

இசைதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹே_ராம்&oldid=2914202" இருந்து மீள்விக்கப்பட்டது