வி. எஸ். ராகவன்

தமிழ்த் திரைப்பட நடிகர்

வி. எஸ். ராகவன் (V. S. Raghavan, 1 சனவரி 1925 - 24 சனவரி 2015) பழம்பெரும் தமிழ் நாடக மற்றும் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர். 1954 ஆம் ஆண்டில் வைரமாலை எனும் திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமாகி, 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். சில திரைப்படங்களையும் இவர் இயக்கினார்.[1][2]

வி. எஸ். ராகவன்
பிறப்பு(1925-01-01)சனவரி 1, 1925
வெம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்
இறப்புசனவரி 24, 2015(2015-01-24) (அகவை 90)
சென்னை, இந்தியா
பணிதிரைப்பட இயக்குனர், நாடக, திரைப்பட, தொலைக்காட்சி தொடர் நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1954 - 2015

ஆரம்ப வாழ்க்கை

தொகு

தமிழ்நாடு காஞ்சிபுரம் அருகேயுள்ள வெம்பாக்கம் என்ற ஊரில் பிறந்த இராகவன், பி. எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், செங்கல்பட்டு புனித கொலம்பசு பள்ளியிலும் கல்வி கற்று, சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் இரண்டாண்டுகள் கற்றார். கல்லூரிப் படிப்பை முடிக்கும் போது, தந்தை இறந்து விடவே, இராகவன் தாயாருடன் புரசைவாக்கத்தில் உள்ள சகோதரியுடன் சென்று வசித்து வந்தார்.[2]

நாடகத்துறையில்

தொகு

வி. எஸ். ராகவன், துவக்கத்தில் கே. பாலசந்தர் இயக்கிய பல மேடை நாடகங்களில் நடித்தார். நகையே உனக்கு நமஸ்காரம் என்ற பெயரில் நடித்த நாடகம் அந்த நாட்களில் மிகவும் பிரபலமானது

குடும்பம்

தொகு

இவரின் மனைவி தங்கம் என்பவராவார். கே.ஆர்.சீனிவாசன், கே.ஆர்.கிருஷ்ணன் ஆகியோர் இவர்களின் மகன்கள் ஆவர். [3]

இயக்கிய மற்றும் நடித்த திரைப்படங்களில் சில

தொகு

நடித்த தொலைக்காட்சித் தொடர்கள்

தொகு
  • ரேகா ஐபிஎஸ் {2008 - 2009}
  • பைரவி (2012)
  • வள்ளி _ சுவாமி நாதன்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._எஸ்._ராகவன்&oldid=4094161" இலிருந்து மீள்விக்கப்பட்டது