நெஞ்சில் ஓர் ஆலயம்

நெஞ்சில் ஓர் ஆலயம் 1962-ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான வெற்றித்திரைப்படமாகும். இதில் முத்துராமன், கல்யாண்குமார், தேவிகா, வி. எஸ். ராகவன் ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். குழந்தை நட்சத்திரமான குட்டி பத்மினிக்கு மிகுந்த புகழை ஈட்டித்தந்த படமுமாகும் இது.

நெஞ்சில் ஓர் ஆலயம்
நெஞ்சில் ஓர் ஆலயம்
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புஸ்ரீதர்
கதைஸ்ரீதர்
'சித்ராலயா' கோபு[1]
இசைவிஸ்வநாதன், ராமமூர்த்தி
நடிப்புமுத்துராமன்
கல்யாண்குமார்
தேவிகா
குட்டி பத்மினி
வி. எஸ். ராகவன்
ஒளிப்பதிவுவின்செண்ட்
கலையகம்சித்ராலயா பிக்சர்ஸ்
வெளியீடு1962
ஓட்டம்152 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைக்கருதொகு

காதலர்களான கல்யாண்குமாரும் தேவிகாவும் விதிவசத்தால் பிரிந்து, தேவிகா தான் மணந்து கொண்ட முத்துராமனின் புற்று நோயைக் குணப்படுத்த மருத்துவரிடம் செல்கையில், அவர் முன்னாள் காதலர் கல்யாண் குமாராகவே இருக்கக்கண்டு திகைப்பும் அதிர்ச்சியும் கொள்வதில் துவங்கும் இத்திரைப்படம், பெண்மை, கற்பு, கடமை, பெருந்தன்மை ஆகிய பல பெரும் நற்குணங்களைச் சிறப்புற எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது.

அந்நாட்களில் மிகவும் பேசப்பட்ட பரிசோதனை முயற்சியாக, திரைப்படம் முழுவதுமே ஒரு மருத்துவமனை அரங்கமைப்பில் ஒரு மாதத்திற்கும் குறைவான காலகட்டத்தில் எடுக்கப்பட்டது. இது பாடல்கள், காட்சியமைப்புகள், கோணங்கள் ஆகியவற்றிற்கு மிகுந்த அளவில் பாராட்டுப் பெற்றது.கல்யாணப் பரிசு திரைப்படத்தை அடுத்து முக்கோணக் காதல் கதை இயக்குநர் என்ற பெயரை ஸ்ரீதருக்கு இது நிலை நாட்டியது.

இத்திரைப்படத்திற்காக ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது.

நடிப்புதொகு

பாடல்கள்தொகு

Untitled

பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார், விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.

பாடல்கள்[4]
எண் தலைப்புபாடியவர்(கள்) நீளம்
1. "எங்கிருந்தாலும் வாழ்க"  ஏ. எல். ராகவன் 03:16
2. "என்ன நினைத்து என்னை"  பி. சுசீலா 03:30
3. "முத்தான முத்தல்லவோ"  பி. சுசீலா 03:35
4. "நினைப்பதெல்லாம்"  பி. பி. ஸ்ரீநிவாஸ் 03:28
5. "ஒருவர் வாழும் ஆலயம்"  எல். ஆர். ஈஸ்வரி, டி. எம். சௌந்தரராஜன் 03:43
6. "சொன்னது நீதானா"  பி. சுசீலா 03:35

மறுவாக்கம்தொகு

ராஜேந்திர குமார், ராஜ்குமார், மீனாகுமாரி ஆகியோரின் நடிப்பில் தில் ஏக் மந்திர் (1963) என்னும் பெயரில் இயக்குனர் ஸ்ரீதர் இந்தியில் இயக்கினார்.[5] குட்டி பத்மினி ஹிந்தி மறுவாக்கத்திலும் நடித்திருந்தார். இத்திரைப்படம் மானசி மந்திரம் (1966) என்னும் பெயரில் தெலுங்கிலும் வெளிவந்தது. கன்னடத்தில் குங்கும ரக்சி என்னும் பெயரில் வெளியானது.

குறிப்புகளும் மேற்கோள்களும்தொகு

  1. Malathi Rangarajan (20 February 2009). "Saga of success". The Hindu. http://hindu.com/thehindu/fr/2009/02/20/stories/2009022050710400.htm. பார்த்த நாள்: 11 ஏப்ரல் 2014. 
  2. Malathi Rangarajan (8 October 2010). "A virtuoso recalls". The Hindu. http://www.hindu.com/fr/2010/10/08/stories/2010100850460100.htm. பார்த்த நாள்: 10 ஏப்ரல் 2014. 
  3. M.L. Narasimham (20 October 2000). "Unforgettable screen mother". The Hindu. http://www.hindu.com/2000/10/20/stories/09200226.htm. பார்த்த நாள்: 10 ஏப்ரல் 2014. 
  4. "Nenjil Oru Aalayam — Tracklist". raaga.com.
  5. Deepak Mahaan (29 January 2010). "Blast from the Past: Dil Ek Mandir (1963)". The Hindu. http://www.hindu.com/fr/2010/01/29/stories/2010012950180400.htm. பார்த்த நாள்: 10 ஏப்ரல் 2014. 

உசாத்துணைதொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெஞ்சில்_ஓர்_ஆலயம்&oldid=2705972" இருந்து மீள்விக்கப்பட்டது