பி. சாந்தகுமாரி

பி. சாந்தகுமாரி என அழைக்கப்படும் பூவுலதாசு சாந்தகுமாரி[1] (P. Santhakumari, 17 மே 1920 – 16 சனவரி 2006) தெலுங்கு, தமிழ், இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்த தென்னிந்திய நடிகையாவார். ஏறத்தாழ 50 ஆண்டு காலத்திற்கு திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கு, தமிழ்த் திரைப்பட இயக்குனரான பி. புல்லையா சாந்தகுமாரியின் கணவராவார்.[2]

பி. சாந்தகுமாரி
P.Shanthakumari.jpg
பி. சாந்தகுமாரி (1949)
பிறப்புவெல்லால சுப்பம்மா
மே 17, 1920(1920-05-17)
புரொதுட்டூர், கடப்பா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்புசனவரி 16, 2006(2006-01-16) (அகவை 85)
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1936-1979
வாழ்க்கைத்
துணை
பி. புல்லையா

பிறப்பும் தொடக்க வாழ்வும்தொகு

சுப்பம்மா எனும் இயற்பெயரைக் கொண்ட சாந்தகுமாரி, கடப்பா எனும் மாவட்டத்தில் நடுத்தரக் குடும்பம் ஒன்றில் சீனிவாசராவ், பெட்ட நரசம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். தந்தை ஒரு நடிகர், தாயார் கருநாடக இசைப் பாடகி. சிறு வயதிலேயே சாந்தகுமாரிக்கு இசைப் பயிற்சி வழங்கப்பட்டது. கடப்பையில் நான்காம் பாரம் வரை தனது பள்ளிப் படிப்பை முடித்தார். கருநாடக இசையில் மேலும் பயிற்சி பெறுவதற்காக 1934 இல் சென்னை வந்தார்.[1] பேராசிரியர் சாம்பமூர்த்தியிடம் மாணவியாகச் சேர்ந்து வாய்ப்பாட்டும் வயலின் வாசிப்பும் கற்றார். அப்போது சக மாணவியாக இருந்தவர் டி. கே. பட்டம்மாள் ஆவார்.[2]

தனது 13ஆவது வயதில் கருநாடக இசையில் வாய்ப்பாட்டு, வயலின் வாசிப்பில் தேர்ச்சி பெற்றார். தனது 15ஆவது வயதில், தென்னிந்தியா முழுவதும் இசைக் கச்சேரிகளை செய்ய ஆரம்பித்தார். 16-வது அகவையில் அனைத்திந்திய வானொலியில் பாடகியானார். சென்னையில் வித்தியோதயா பள்ளியில் இசையாசிரியராக சேர்ந்தார். வானொலியில் இசையமைப்பாளர் எஸ். இராஜேசுவரராவ் உடன் இணைந்து பாடினார். கச்சேரி ஒன்றில் சாந்தகுமாரியை சந்தித்த பி. வி. தாஸ் எனும் இயக்குநர், மாயா பஜார் அல்லது சசிரேகா பரிணயம் (1936) என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடிக்க வைத்தார்[2] அடுத்த ஆண்டில் பி. புல்லையா தயாரித்த சாரங்கதாரா திரைப்படத்தில் நடித்தார். அதே ஆண்டில் புல்லையாவைத் திருமணம் செய்து கொண்டார்.

திரைத்துறைக்கான பங்களிப்புகள்தொகு

திரைப்படங்களில் தாய் வேடமேற்று நடிப்பதில் புகழ் பெற்றிருந்தார். திரைப்படங்களில் சாந்தகுமாரியின் மகனாக நடித்த நடிகர்கள், திரைப்படத்திற்கு வெளியே இயல்வாழ்விலும் 'மம்மி' (அம்மா) என இவரை அழைத்தனர்.[2]

இருவரும் இணைந்து பத்மசிறீ பிக்சர்சு என்ற நிறுவனத்தை ஆரம்பித்து (பத்மா என்பது இவர்களின் மகளின் பெயர்) பல வெற்றிப் படங்களைத் தயாரித்தனர். சாந்தகுமாரி கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் ஏறத்தாழ 250 திரைப்படங்களில் நடித்தார்.[3] அவற்றுள் 60 தமிழ்த் திரைப்படங்கள் அடங்கும்.

பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும்தொகு

திரைப்பட நடிப்பிலிருந்து விலகிய பிறகு, பக்திப் பாடல்களை எழுதுவதிலும், அவற்றிற்கு இசையமைப்பதிலும் ஈடுபட்டார். இப்பாடல்களை பாலமுரளிகிருஷ்ணா பாடினார்.[2]

பெற்ற விருதுகளும், சிறப்புகளும்தொகு

 • தெலுங்குத் திரைப்படத்துறைக்கான சிறப்பான பங்களிப்பிற்காக, இரகுபதி வெங்கையா விருது (1999); வழங்கியது: ஆந்திர அரசாங்கம்[2]

நடித்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்தொகு

 1. பக்த ஜனா (1948)
 2. அம்மா (1952)
 3. பொன்னி (1953)
 4. மனம்போல் மாங்கல்யம் (1953)
 5. பெண்ணின் பெருமை (1956)
 6. பொம்மை கல்யாணம் (1958)
 7. சாரங்கதாரா (1958)
 8. கலைவாணன் (1959)
 9. நெஞ்சில் ஓர் ஆலயம் (1962)
 10. சிவந்த மண் (1969)
 11. வசந்த மாளிகை (1972)
 12. பிரியாவிடை (1975)

மேற்கோள்கள்தொகு

 1. 1.0 1.1 "ஸாந்தகுமாரி வாழ்க்கைச் சித்திரம்". பேசும் படம்: பக்: 18-31. சூன் 1949. 
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Unforgettable screen mother". தி இந்து. 9 நவம்பர் 2016 அன்று பார்க்கப்பட்டது.
 3. Find Tamil Actress P. Santha Kumari Videos, P. Santha Kumari Movies, P. Santha Kumari Pictures and Filmography | Jointscene.com

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சாந்தகுமாரி&oldid=2791197" இருந்து மீள்விக்கப்பட்டது