பி. புல்லையா

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

பி. புல்லையா (P. Pullaiah, 1911–1985) (Telugu: పి.పుల్లయ్య) தெலுங்கு, தமிழ்த் திரைப்பட இயக்குநராவார். தெலுங்குத் திரைப்படத்துறைக்கான இவரின் பங்களிப்பினைப் பாராட்டி இவருக்கு இரகுபதி வெங்கையா விருது எனும் விருது வழங்கப்பட்டது. இவரை Daddy என திரைத்துறையினர் அழைத்தனர்.[1]

பி. புல்லையா
பிறப்பு2 மே 1911
நெல்லூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு1985
பணிதிரைப்பட இயக்குநர்
திரைப்படத் தயாரிப்பாளர்
வாழ்க்கைத்
துணை
பி. சாந்தகுமாரி

சொந்த வாழ்க்கை

தொகு

தெலுங்கு, தமிழ்த் திரைப்பட நடிகையான பி. சாந்தகுமாரி இவரின் மனைவியாவார்.

திரைத்துறைக்கான பங்களிப்புகள்

தொகு

இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்

தொகு
  1. விஜயலட்சுமி (1946)
  2. பக்த ஜனா (1948)
  3. மனம்போல் மாங்கல்யம் (1953)
  4. பெண்ணின் பெருமை (1956)
  5. வணங்காமுடி (1957)[2]
  6. அதிசய திருடன் (1958)[3]
  7. இல்லறமே நல்லறம் (1958)
  8. கலைவாணன் (1959)[1]
  9. ஆசை முகம் (1964)

பின்னாளில் புகழீட்டிய யு. விஸ்வேசுவர ராவ், கே. இராகவேந்திர ராவ் ஆகிய இயக்குநர்கள் இவரிடம் துணை இயக்குநராகப் பணியாற்றியவர்கள் ஆவர்.[1]

தமது மகள் பத்மாவின் பெயரினை உள்ளடக்கி பத்மசிறீ எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி, புல்லையா - சாந்த குமாரி தம்பதியினர் திரைப்படங்களைத் தயாரித்தனர்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._புல்லையா&oldid=4165481" இலிருந்து மீள்விக்கப்பட்டது