முதன்மை பட்டியைத் திறக்கவும்

நெல்லூர் இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள மாநகராட்சியாகும். இது சிறி பொட்டி சிறி ராமுலு நெல்லூர் மாவட்டத்தின் தலைநகராகும். மக்கள்தொகை அடிப்படையில் இது ஆந்திரப்பிரதேசத்தின் 6வது பெரிய நகராகும்[1]. பெண்ணாற்றின் (வடபெண்ணை) கரையில் அமைந்துள்ள இந்நகரின் பழைய பெயர் விக்ரம சிம்மபுரி.

நெல்லூர் ஐதராபாத்திலிருந்து தென்கிழக்கில் 453 கிமீ தொலைவிலும் சென்னையிலிருந்து வடக்கில் 173 கிமீ தொலைவிலும் உள்ளது. சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை இதன் வழியாக செல்லுகிறது.

மைக்கா உற்பத்தி, எழுமிச்சை, வேளாண் பொருட்களான அரிசி போன்றவற்றிற்கு நெல்லூர் புகழ் பெற்றது. ..

2011ம் ஆண்டு கணக்கெடுக்கின் படி இந்நகரின் மக்கள்தொகை 505,258 ஆகும். நகரை ஒட்டிய பகுதிகளையும் சேர்த்தால் இதன் மக்கள் தொகை 564,168 ஆகும்.

மேற்கோள்கள்தொகு

  1. http://www.worldlistmania.com/list-largest-cities-andhra-pradesh/"https://ta.wikipedia.org/w/index.php?title=நெல்லூர்&oldid=2740286" இருந்து மீள்விக்கப்பட்டது