கலைவாணன்

பி. புல்லையா இயக்கத்தில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கலைவாணன் (Kalaivaanan) 1959 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படமாகும். பி. புல்லையாவின் இயக்கத்தில் [1] உருவான இத் திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், அஞ்சலிதேவி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்.[2][3]

கலைவாணன்
இயக்கம்பி. புல்லையா
தயாரிப்புவாசிரெட்டி நாராயண ராவ்
கதைஆச்சார்ய ஆத்ரேயா
திரைக்கதைசி. வி. ஸ்ரீதர்
இசைபெண்டியாலா நாகேஸ்வர ராவ்
நடிப்புஏ. நாகேஸ்வர ராவ்
அஞ்சலிதேவி
சித்தூர் வி. நாகையா
கே. ஏ. தங்கவேலு
எஸ். வி. சகஸ்ரநாமம்
எஸ். வி. ரங்கா ராவ்
பி. சாந்தகுமாரி
கே. சாரங்கபாணி
ராஜசுலோச்சனா
சி. டி. ராஜகாந்தம்
ஒளிப்பதிவுபி. எல். ராய்
படத்தொகுப்புஆர். தேவராஜன்
கலையகம்வாஹினி
வெளியீடுஏப்ரல் 9, 1959 (1959-04-09)
நாடுஇந்தியாஇந்தியா
மொழிதமிழ்

திரைக்கதை

தொகு

விஸ்வநாதனும் அவர் மனைவி பார்வதியும் விஸ்வநாதனின் தம்பி காசிநாத்தை தங்கள் பிள்ளையாக வளர்த்து வருகின்றனர். காசிநாத் தனது குருவாகிய ஏகம்பவாணனிடம் இசை பயின்று சிறந்த இசைக் கலைஞன் ஆகிறான். அவர்களது ஊருக்கு ஒரு இசை நடனக் குழு வருகிறது. அக்குழுவில் மாலா என்ற பெண் ஆடுவதிலும் பாடுவதிலும் வல்லவள். அவளோடு காசிநாத் போட்டி போட்டு அவளை வெல்கிறான். ஆனால் குறைந்த ஜாதிப் பெண்ணோடு ஒரே மேடையில் பாடியதால் காசிநாத்தை அவனது குரு விலக்கி விடுகிறார். இசைக்கும் கலைகளுக்கும் எந்த பேதமும் கிடையாது என காசிநாத் வாதாடுகிறான். ஆனால் ஊர் தர்மாதிகாரி தீர்ப்புப்படி காசிநாத்தை அண்ணன் வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார். காசிநாத் மாலாவை திருமணம் செய்கிறான். இருவரும் பல இடங்களில் மக்களுக்கு இசை நடன விருந்தளிக்கின்றனர். அந்நாட்டு அரசன் தனது அரசவைக் கலைஞனாக காசிநாத்தை நியமிக்கிறான். இது தர்மாதிகாரிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. அரண்மனை நாட்டியக்காரியான அமிர்தத்துடன் சேர்ந்து ஒரு திட்டம் போடுகிறார். அமிர்தம் காசிநாத்தை குடிப்பழக்கத்துக்கு அடிமையாக்கி விடுகிறாள். அவன் குடிகாரனாகிவிட்டபடியால் அரண்மனையை விட்டு வெளியேற்றுமாறு மன்னனுக்கு அமிர்தம் சொல்கிறாள். காசிநாத்தின் தாய் போன்ற அண்ணி பார்வதி தன் கணவனின் கோபத்தையும் பொருட்படுத்தாமல் எவ்வாறு காசிநாத்தை பழைய நிலைக்குக் கொண்டு வருகிறாள் என்பதே மீதிக் கதையாகும்.

நடிகர்கள்

தொகு

தயாரிப்புக் குழு

தொகு
  • தயாரிப்பாளர்: வாசிரெட்டி நாராயண ராவ்
  • தயாரிப்பு நிறுவனம்: சாரதா புரொடக்சன்ஸ்
  • இயக்குநர்: பி. புல்லையா
  • கதை: ஆச்சார்ய ஆத்ரேயா
  • திரைக்கதை வசனம்: சி. வி. ஸ்ரீதர்
  • கலை: ஜி. வி. சுப்பா ராவ்
  • தொகுப்பு: ஆர். தேவராஜன்
  • நடனப்பயிற்சி: வேம்பட்டி சின்ன சத்யம்
  • ஒளிப்பதிவு: பி. எல். ராய்

தயாரிப்பு விபரம்

தொகு

1947 ஆம் ஆண்டு வி. சாந்தாராம் மராத்தி மொழியில் லோக்சாஹிர் ராம் ஜோஷி என்ற தலைப்பிலும் இந்தி மொழியில் மத்வாலா ஷயர் ராம் ஜோஷி என்ற தலைப்பிலும் உருவாக்கிய திரைப்படங்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு தயாரானது இத் திரைப்படம். முதலில் ஜெயபேரி என்ற பெயரில் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட பின்னர் தமிழிலும் தயாரானது. தமிழ்ப் படத்தை விற்பனை செய்ய முடியாத நிலையில் தயாரிப்புக்கு முதலீடு செய்த டி. வி. எஸ். பிரதிபா சாஸ்திரி தனது நண்பரான எம். ஜி. ராமச்சந்திரனை அணுகினார். தெலுங்குப் படத்தை எம். ஜி. ஆர். பார்த்தார். ஜாதி பேதமற்ற சமூகத்தை உருவாக்க விருப்பம் கொண்டிருந்த அவருக்கு படம் பிடித்துவிட்டது. தன்னை வைத்து இப்படத்தைத் தமிழில் தயாரிக்குமாறு கேட்டாராம் எம். ஜி. ஆர். ஆனால் ஏற்கெனவே ஏ. நாகேஸ்வர ராவை வைத்து தமிழ்ப் படம் தயாரிக்கப்பட்டிருப்பது தெரிய வந்ததும் தனக்குத் தெரிந்த விநியோகஸ்தர்களை அழைத்து 'ஒரு சகோதரர் ஒரு படம் தயாரித்திருக்கிறார். அதைப் பார்த்து வாங்குங்கள்' என்று சொன்னாராம். கலைவாணன் நன்றாக ஓடவில்லை; என்றாலும் எம். ஜி. ஆரின் தலையீட்டால் தயாரிப்பாளர்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படவில்லை.

பாடல்கள்

தொகு

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் பெண்டியாலா நாகேஸ்வர ராவ். பாடல்களை இயற்றியோர்: தஞ்சை ராமையாதாஸ், ஏ. மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கம்பதாசன், பழனிச்சாமி ஆகியோர். பின்னணி பாடியோர்: டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், கண்டசாலா, எஸ். சி. கிருஷ்ணன், பி. பி. ஸ்ரீநிவாஸ், ரகுநாத் பானிக்கிரஹி, எம். எல். வசந்தகுமாரி, ஜிக்கி, பி. சுசீலா, எஸ். ஜானகி ஆகியோர்.

வரிசை எண். பாடல் பாடகர்/கள் பாடலாசிரியர் கால அளவு (நி:செ)
1 ஆளும் அரசே .. தர்மசீலா கலைவாணருக்குள்ளே சீர்காழி கோவிந்தராஜன் ஏ. மருதகாசி 06:12
2 சிக்காத மீனும் வந்து சிக்க வேணும் டி. எம். சௌந்தரராஜன், திருச்சி லோகநாதன் & பி. சுசீலா ஏ. மருதகாசி 07:08
3 காதல் சிலை ஆடுதே எம். எல். வசந்தகுமாரி தஞ்சை ராமையாதாஸ் 04:47
4 என் கண்ணில் அம்பு உண்டு சீர்காழி கோவிந்தராஜன் & பி. சுசீலா ஏ. மருதகாசி 03:43
5 கலை சாரதா தேவி என் தாயே கண்டசாலா, பி. பி. ஸ்ரீநிவாஸ் & ரகுநாத் பானிக்கிரஹி தஞ்சை ராமையாதாஸ் 04:25
6 இருக்காரா இங்கிருக்காரா பி. சுசீலா தஞ்சை ராமையாதாஸ் 04:11
7 சவால் சவாலென்று சதிராடும் பெண்ணாளே டி. எம். சௌந்தரராஜன் & ஜிக்கி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 08:02
8 ஆயகலைகள் திருச்சி லோகநாதன் (அம்பிகாபதி கோவை) 00:41
9 வெண்ணெயைத் திருடித் தின்று எஸ். சி. கிருஷ்ணன் & எஸ். ஜானகி பழனிச்சாமி 04:24
10 ஆண்டவன் படைப்பிலே .. நந்தனின் சரித்திரம் டி. எம். சௌந்தரராஜன் ஏ. மருதகாசி 06:47
11 மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே கண்டசாலா & பி. சுசீலா ஏ. மருதகாசி 04:37
12 தெய்வம் நீ தானா தர்மம் நீ தானா டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா ஏ. மருதகாசி 02:15
13 ஆடும் மயில் நீ வா கண்டசாலா கம்பதாசன்

மேற்கோள்கள்

தொகு
  1. காந்தன் (21 June 1959). "கலைவாணன்". கல்கி. pp. 16–17. பார்க்கப்பட்ட நாள் 21 July 2022.
  2. Randor Guy (18 October 2014). "Blast from the past: Kalaivaanan 1959". தி இந்து இம் மூலத்தில் இருந்து 21 September 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160921104603/http://www.thehindu.com/features/cinema/cinema-columns/blast-from-the-past-kalaivaanan-1959/article6514826.ece. 
  3. Narasimham, M. L. (19 November 2015). "Jayabheri (1959)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 25 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210825040419/https://www.thehindu.com/features/friday-review/jayabheri-1959/article7895558.ece. 

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலைவாணன்&oldid=4154762" இலிருந்து மீள்விக்கப்பட்டது