ஏ. எல். ராகவன்

திரைப்பட பாடகர்

ஏ. எல். இராகவன் (A. L. Ragavan; 1933 - சூன் 19, 2020), தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்பட நடிகரும், பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் 1950களில் இருந்து 1970கள் வரை தமிழ்த் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.[1] இவரது மனைவி பிரபல நடிகை எம். என். இராஜம் ஆவார்.[2] இந்த இணையருக்கு பிரம்மா என்ற மகனும், நளினா என்ற மகளும் உண்டு.

ஏ. எல். இராகவன்
பிறப்பு1933
இறப்புசூன் 19, 2020
இசை வடிவங்கள்திரையிசை
தொழில்(கள்)திரைப்படப் பின்னணிப் பாடகர்
இசைத்துறையில்1950கள் முதல் 1970கள் வரை

இவர் அ. லெட்சுமண பாகவதரின் மகனாக, 1933-இல் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டையில் பிறந்தார். ஏ. எல். இராகவன் 1947 ஆம் ஆண்டு கிருஷ்ண விஜயம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு சுதர்ஸன் படத்தில் கண்ணனாக நடித்தார். 1950 ஆம் ஆண்டு வெளியான விஜயகுமாரி திரைப்படத்தில் குமாரி கமலாவுக்காக பெண் குரலில் பாடி பாடகராக அறிமுகமானார். அதன்பிறகு எங்கிருந்தாலும் வாழ்க..., சீட்டுக்கட்டு ராஜா..., என்ன வேகம் நில்லு பாமா..., அங்கமுத்து தங்கமுத்து... உள்ளிட்ட பல பாடல்களால் நன்கு அறியப்பட்டவர். ஏ. எல். இராகவன் சௌராட்டிர சமூகத்தைச் சேர்ந்தவர்.[சான்று தேவை]. அன்பே வா திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். உடன் சேர்ந்து, 'நாடோடி நாடோடி...' என்ற திரைப்பாடலுக்கு நடனம் ஆடினார். பிற்காலத்தில் அலைகள், அகல்யா போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்ட இராகவன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில், இவருக்கு கொரோனா வைரசு தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில் 2020 சூன் 19 இறந்தார்.[3][4]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எல்._ராகவன்&oldid=3992062" இலிருந்து மீள்விக்கப்பட்டது