அய்யம்பேட்டை (தஞ்சாவூர்)
அய்யம்பேட்டை (ஆங்கிலம்:Ayyampettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தின் பாபநாசம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு அதிகம் சௌராட்டிர மக்களும், இசுலாமியர்களும் வாழ்கிறார்கள். இங்கு இரயில் நிலையம் ஒன்றும், பழமையான பள்ளியும் உள்ளன.
அய்யம்பேட்டை | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | 10°54′N 79°11′E / 10.9°N 79.18°Eஆள்கூறுகள்: 10°54′N 79°11′E / 10.9°N 79.18°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
வட்டம் | பாபநாசம் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | |
தலைவர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
16,263 (2011[update]) • 2,104/km2 (5,449/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
7.73 சதுர கிலோமீட்டர்கள் (2.98 sq mi) • 28 மீட்டர்கள் (92 ft) |
குறியீடுகள்
| |
இணையதளம் | www.townpanchayat.in/ayyampettai |
அய்யம்பேட்டை பேரூராட்சியில் பிரசன்ன ராஜகோபாலசாமி திருக்கோவிலில் ஆண்டு தோறும் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. . மேலும் ஸ்ரீ சக்கரவாக்கீஸ்வரர் சுவாமி கண்ணாடி பல்லக்கில் ஏழு ஊர் சுற்றி வலம்வரும் சப்தஸ்தான திருவிழாவில் அய்யம்பேட்டை நகரில் பூச்சொரிதல் விழா ஆண்டு தோறும் நடைபெறுகிறது.
அமைவிடம்தொகு
அய்யம்பேட்டை பேரூராட்சிக்கு கிழக்கே கும்பகோணம் 24 கிமீ; மேற்கே தஞ்சாவூர் 15 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்புதொகு
7.73 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 186 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்தொகு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,106 வீடுகளும், 16,263 மக்கள்தொகையும் கொண்டது. [4][5]
புவியியல்தொகு
இவ்வூரின் அமைவிடம் 10°54′N 79°11′E / 10.9°N 79.18°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 28 மீட்டர் (91 அடி) உயரத்தில் இருக்கின்றது.
வெளி இணைப்புகள்தொகு
ஆதாரங்கள்தொகு
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ அய்யம்பேட்டை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Ayyampettai Population Census 2011
- ↑ Ayyampettai Town Panchayat
- ↑ "Ayyampettai". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.