குறத்தி மகன்

குறத்தி மகன் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா, வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

குறத்தி மகன்
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புகலைஞானம், பாலு
ரவி புரொடக்ஷன்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெமினி கணேசன்
கே. ஆர். விஜயா
வி. எஸ். ராகவன்
வெளியீடுஏப்ரல் 29, 1972
நீளம்4412 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படம் மூலம் நடிகை ஜெயசித்ரா அவர்கள் அறிமுகமானார்.[1][2] கல்வியின் பெருமையை ஆணித்தரமாகச் சொன்ன படம் என்பதால் சிறந்த படத்திற்கான மாநில அரசின் விருதை இப்படம் பெற்றது.[3]

நடிகர்கள் தொகு

உருவாக்கம் தொகு

இப்படத்தில் நடிகை பத்மினி குறத்தியாக நடிக்க ஒப்பந்தமானார், குறத்தி மகனாக முதலில் நடிகர் சிவகுமார் ஒப்பந்தமாகி 2 நாள் படப்பிடிப்பும் நடந்தது. பத்மினி திருமணமாகி அமெரிக்கா போய் விட்டதால் குறத்தி வேஷத்தில் பத்மினிக்குப் பதில் கே. ஆர். விஜயா நடிக்க ஒப்பந்தமானார். குறத்தி மகனாக மாஸ்டர் ஷீதர் நடித்தார்.[6]

பாடல்கள் தொகு

கே. வி. மகாதேவன் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து பாடல்களும் உடுமலை நாராயணகவி, கண்ணதாசன் மற்றும் அ. மருதகாசி அவர்களால் எழுதப்பட்டது.

எண். பாடல் பாடகர்கள் நீளம் (நி:வி)
1 "அஞ்சாதே நீ" டி. எம். சௌந்தரராஜன்,
பி. சுசீலா
06:15
2 "ஜீனா ஜெகுனா" எஸ். சி. கிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, 'திருச்சி'லோகநாதன், தங்கப்பன்,
எம். ஆர். விஜயா
03:19
3 "ஜாதிகள் இல்லையடி" பி. சுசீலா 05:46
4 "குரத்தி வாடி" டி. எம். சௌந்தரராஜன்,
பி. சுசீலா
03:15
5 "நாட்டுக்குள்ளே" சீர்காழி கோவிந்தராஜன், எல். ஆர். ஈஸ்வரி 03:13

மேற்கோள்கள் தொகு

  1. "துடுக்குத்தனம்; குறும்புத்தனம்; மெச்சூரிட்டி; பழிவாங்கும் சவால்; தனி ஸ்டைலில் அசத்திய நடிகை ஜெயசித்ரா... - நடிகை ஜெயசித்ரா பிறந்தநாள் இன்று". இந்து தமிழ். 9 செப்டம்பர் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/576520-jayachitra-birthday.html. பார்த்த நாள்: 9 செப்டம்பர் 2020. 
  2. "குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜெயசித்ரா - கதாநாயகியாக 200 படங்களில் நடித்தார்". மாலை மலர். 6 மே 2021. https://cinema.maalaimalar.com/cinema/cinehistory/2021/05/06024934/2610806/cinima-history-jayachitra.vpf. பார்த்த நாள்: 6 மே 2021. 
  3. "திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 38- பிஜிஎஸ் மணியன் எழுதும் தொடர்". andhimazhai.com. 12 சனவரி 2015. http://andhimazhai.com/news/view/kvm-38.html. பார்த்த நாள்: 13 செப்டம்பர் 2020. 
  4. 4.0 4.1 4.2 "தண்ணி கருத்திருச்சு...". தினமலர். 26 டிசம்பர் 2014. http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23290&ncat=19&Print=1. பார்த்த நாள்: 18 மே 2021. 
  5. "மந்திரி குமாரியின் அரச குமாரி ஜி.சகுந்தலா". தினகரன். 9 செப்டம்பர் 2019 இம் மூலத்தில் இருந்து 2020-10-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201030052145/https://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6891. பார்த்த நாள்: 8 செப்டம்பர் 2020. 
  6. "திரைப்படச்சோலை 8: கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்". இந்து தமிழ். 22 பிப்ரவரி 2021. https://www.hindutamil.in/news/blogs/636747-thiraippada-solai.html. பார்த்த நாள்: 4 மே 2021. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறத்தி_மகன்&oldid=3726132" இருந்து மீள்விக்கப்பட்டது