வி. கே. ராமசாமி

தமிழ் நடிகர்

விருதுநகா் கந்தன் இராமசாமி (V. K. Ramasamy, 1 சனவரி 1926 – 24 திசம்பர் 2002) ஓர் பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். 1950 மற்றும் 1990 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நடிப்புலகில் இவர் உச்சத்தில் இருந்தார்[1]

வி. கே. இராமசாமி
பிறப்புவிருதுநகா் கந்தன் இராமசாமி
1 சனவாி 1926
விருதுநகர், மதராஸ் மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு24 திசம்பர் 2002(76)
சென்னை, தமிழ்நாடு, இந்தியன்
பணிநடிகர், திரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1947 - 2002
பெற்றோர்தந்தை : கந்தன் செட்டியார்
தாயார் : அங்கம்மாள்

1940களில் பாய்ஸ் கம்பெனி என்று அறியப்பட்ட நாடக உலகிலிருந்து திரையுலகிற்கு வந்தடைந்தவர்களில் இவரும் ஒருவர். 1947ஆம் ஆண்டு வெளிவந்த நாம் இருவர் என்ற திரைப்படத்தில் தமது 21ஆம் அகவையில் 60 அகவை கிழவராக நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். விகேஆர் என பரவலாக அறியப்பட்டார். புகழடைந்தாலும் முதுமை வேடங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஐம்பது ஆண்டு திரைவாழ்வில் 500இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளார்.

1960களிலும் 1970களிலும் முன்னணியில் இருந்த டி. ஆர். மகாலிங்கம், எம்.ஜி.யார், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், இரவிச்சந்திரன், முத்துராமன்,கமலஹாசன், இரஜனிகாந்த் ஆகியோருடன் நடித்துள்ளார். இவருடைய வாக்குநடை, இவரை நகைச்சுவை வேடத்திலோ எதிர்மறை வேடத்திலோ சிறப்பாக நடிக்க வழி செய்தது. நகைச்சுவை நடிகை மனோரமாவுடன் இணைந்து இவர் பணி புரிந்த திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. பின்னாட்களில் 15 திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

இவர் நடித்த கடைசிப் திரைப்படம் டும் டும் டும் ஆகும்.

குடும்பம்

தொகு

இவருக்கு நான்கு மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர்.

விருதுகள்

தொகு

தமிழக அரசின் கலைமாமணி விருது, 1970

நடித்த திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் மொழி கதாபாத்திரம் குறிப்பு
2001 டும் டும் டும் தமிழ் கங்காவின் தாத்தா
1997 அருணாச்சலம் தமிழ் கலியபெருமாள்
1997 மின்சார கனவு தமிழ்
1992 மன்னன் தமிழ் குஷ்புவின் தந்தை
1991 கோபுர வாசலிலே தமிழ்
1990 அதிசயப் பிறவி தமிழ் சித்ர குப்தா
1990 அஞ்சலி தமிழ்
1990 அரங்கேற்ற வேளை தமிழ் நம்பி அண்ணா
1989 புதிய பாதை தமிழ்
1989 என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் தமிழ்
1989 வருஷம் 16 தமிழ் சின்ன தாத்தா
1988 தர்மத்தின் தலைவன் தமிழ்
1988 உன்னால் முடியும் தம்பி தமிழ்
1988 அக்னி நட்சத்திரம் தமிழ்
1987 வேலைக்காரன் தமிழ் வளையபதி
1987 ரெட்டை வால் குருவி தமிழ் மார்க்க பந்து
1987 அய்தம் மலையாளம்
1986 மௌன ராகம் தமிழ் சந்திரகுமாரின் பாஸ்
1985 ஆண்பாவம் தமிழ் ராமசாமி அண்ணன்
1985 பூவே பூச்சூடவா தமிழ் விஸ்வநாதன்
1985 உயர்ந்த உள்ளம் தமிழ் நாகபிள்ளை
1984 எனக்குள் ஒருவன் தமிழ் உலகநாத்
1984 ஜப்பானில் கல்யாண ராமன் தமிழ் சாமிக்கண்ணு
1982 ஆட்டோ ராஜா தமிழ்
1981 டிக் டிக் டிக் தமிழ் சாரதாவின் தந்தை
1979 அலாவுதீனும் அற்புத விளக்கும் தமிழ்
1979 கல்யாணராமன் தமிழ் கல்யாணம்
1978 ருத்ர தாண்டவம் தமிழ் கடவுள் சிவா
1977 மீனவ நண்பன் தமிழ் நாகராஜ்
1974 உரிமைக்குரல் தமிழ்
1974 ஜீசஸ் மலையாளம்
1972 பிள்ளையோ பிள்ளை தமிழ்
1972 சங்கே முழங்கு தமிழ் வரகசாமி
1972 வசந்த மாளிகை தமிழ்
1972 ராமன் தேடிய சீதை தமிழ் சிவசங்கர்
1972 திக்குதெரியாத காட்டில் தமிழ் காவலர்
1971 சபதம் தமிழ் ரங்கயா
1971 குமரிக்கோட்டம் தமிழ் சோமு
1970 மாட்டுக்கார வேலன் தமிழ்
1968 டில்லி மாப்பிள்ளை தமிழ் கடவுள் சிவா
1968 குடியிருந்த கோயில் தமிழ் ஜெயாவின் தந்தை ராவ் பாகவதர் சிங்காரம்
1967 ஊட்டி வரை உறவு தமிழ் சுந்தரத்தின் தந்தை
1967 பட்டணத்தில் பூதம் தமிழ் தங்கவேல்
1967 காவல்காரன் தமிழ் வைத்தியலிங்கம்
1964 புதிய பறவை தமிழ் ராமதுரை
1959 கூடி வாழ்ந்தால் கோடி நன்மை தமிழ்
1959 வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழ் ௭ட்டயப்பன்
1959 நல்ல இடத்து சம்பந்தம்
1959 வாழவைத்த தெய்வம் தமிழ்
1958 பெரிய கோவில் தமிழ்
1958 தேடி வந்த செல்வம் தமிழ்
1956 வாழ்விலே ஒரு நாள் தமிழ்
1956 பாசவலை தமிழ்
1955 நல்லவன் தமிழ்
1952 மாப்பிள்ளை தமிழ்
1952 பணம் தமிழ் ௭ன் ௭ஸ் கிருஷ்ணன்
1952 பராசக்தி தமிழ் நாராயணன் பிள்ளை
1952 சின்னதுரை தமிழ்
1951 சர்வாதிகாரி தமிழ்
1951 சிங்காரி தமிழ்
1950 திகம்பர சாமியார் தமிழ் வேலாயுத பிள்ளை
1949 நல்லதம்பி தமிழ்
1947 நாம் இருவர் தமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. Matrimony, Kalyanamalai - KM. "Kalyanamalai Magazine - Serial story, Thiraichuvai - Potpourri of titbits about Tamil cinema, Actor V. K. Ramasamy". www.kalyanamalaimagazine.com. பார்க்கப்பட்ட நாள் 2016-11-27.

உசாத்துணை

தொகு

வி. கே. இராமசாமி மறைவு பரணிடப்பட்டது 2009-04-20 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கே._ராமசாமி&oldid=3852607" இலிருந்து மீள்விக்கப்பட்டது