கோபுர வாசலிலே
கோபுர வாசலிலே (Gopura Vasalile) 1991 இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இப்படத்தை எழுதி இயக்கியவர் பிரியதர்சன். இது இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் தமிழ்மொழி படமாகும். இதை மு. க. தமிழரசு தயாரித்துள்ளார். இப்படத்தில் கார்த்திக், பானுப்ரியா, சுசித்ரா முரளி , நாசர், ஜனகராஜ் , சார்லி, ஜீனியர் பாலையா, வி. கே. ராமசாமி , சுகுமாரி மற்றும் பூர்ணம் விஸ்வநாதன் முதலியோர் நடித்துள்ளனர். மோகன்லால் ஒரு பாடல் காட்சியில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.[1], பி. சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இத்திரைப்படத்தின் சில காட்சிகள் மலையாள மொழியில் 1990ம் வருடம் வெளிவந்த "பாவம் பாவம் ராஜகுமாரன்" திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.[சான்று தேவை] இது தமிழ் மொழியில் சோகம் இழையோடிய நகைச்சுவை படங்களுக்கு உதாரணமாக உள்ளது.[சான்று தேவை] "கோபுர வாசலிலே" திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், தமிழ் நாட்டில் உள்ள திரையரங்குகளில் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.
கோபுர வாசலிலே | |
---|---|
இயக்கம் | பிரியதர்சன் |
தயாரிப்பு | மு. க. தமிழரசு |
திரைக்கதை | பிரியதர்ஷன் கோகுல கிருஷ்ணன் (வசனம்) |
இசை | இளையராஜா |
நடிப்பு | கார்த்திக் பானுப்பிரியா சுசித்ரா முரளி நாசர் ஜனகராஜ் சார்லி ஜீனியர் பாலையா மோகன்லால் |
ஒளிப்பதிவு | பி. சி. ஸ்ரீராம் |
படத்தொகுப்பு | என். கோபாலகிருஷ்ணன் |
கலையகம் | அருள் நிதி பிலிம்ஸ் |
விநியோகம் | அருள் நிதி பிலிம்ஸ் |
வெளியீடு | மார்ச்சு 22, 1991 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை சுருக்கம்
தொகுமனோகர் கார்த்திக் உள்ளூரில் ஆசிரியராக இருக்கிறான். அவன் தனது நண்பர்கள் (நாசர்), ஜீனியர் பாலையா,மற்றும் சார்லி ஆகியோருடன் வாழ்ந்து வருகிறான். மனோகர் தன் காதலி கஸ்தூரியை சுசித்ரா மகிழுந்து விபத்தில் பறிகொடுத்ததால் மிகுந்த சோகத்தில் இருக்கிறான். அவனது நண்பர்கள் ஊதாரித்தனமாக செலவு செய்துகொண்டு பிற பெண்களுடன் சுற்றித் திரிகின்றனர். அவ்வாறு களியாட்டங்களில் இருந்தபோது இராணுவ அதிகாரியின் (வி. கே. ராமசாமி ) மகளான கல்யாணியிடம் பானுப்ரியா தவறாக நடக்க முயற்சிக்கின்றனர். அதற்காக தண்டிக்கப்படுகின்றனர். மனோகர் நண்பர்களின் குணத்தைக் கண்டு அருவருப்படைந்து அவர்களைக் கண்டிக்கிறான்.
அதனால் நண்பர்கள் மனோகரை பழிவாங்க எண்ணுகிறார்கள். அவர்கள் வங்கியில் வேலை பார்க்கும் ஜனகராஜின் உதவியோடு பெயரில்லாமல் சில காதல் கடிதங்களை மனோகருக்கு அனுப்புகின்றனர். அதில் கல்யாணி மனோகர் மேல் காதல் கொண்டிருப்பதாக எழுதியிருந்தது. அக்கடிதங்களை உண்மை என்று மனோகர் நம்பியதனால் நண்பர்களது யுக்தி வெற்றியடைந்தது.
இதற்கிடையில், சில நிகழ்ச்சிகளின் வாயிலாக மனோகரின் குணங்களை அறிந்து, அவனை திருமணம் செய்துகொள்ள விரும்பி, கல்யாணி தன் தந்தையின் உதவியை நாடுகிறாள். ஆனால் மனோகரது நண்பர்கள் கல்யாணி ஒரு வேசி என்று பொய்யான ஆதாரங்களைக் காட்டி அவனைத் தடுக்கின்றனர். மனோகரும் அவர்களது மோசடியை உண்மை என்று நினைத்து திருமண ஏற்பாடுகளை நிறுத்துகிறான்.
தனது வாழ்க்கையில் இரு முறை காதல் தோல்வி ஏற்பட்டதால் மனோகர் ஒரு உணவு விடுதியில் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறான். இதை அறிந்த அவனது நண்பர்கள் அவன் இறந்துவிட்டதாக நினைத்து போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காக அந்த ஊரை விட்டு வெளியேறுகின்றனர். இறுதியில் மனோகர் காவல் துறையினரால் காப்பற்றப்பட்டு, கல்யாணியுடன் சேர்கிறான். பிறகு, தன் நண்பர்களை மன்னித்து, மலை மேல் கட்டியிருக்கும் தன் வீட்டிற்கு விருந்துண்ண அழைக்கிறான்.
நடிகர்கள்
தொகு- கார்த்திக் - மனோகர்
- பானுப்பிரியா - கல்யாணி
- சுசித்ரா முரளி - கஸ்தூரி
- நாசர் - மனோகர் நண்பர்
- சனகராஜ் - வங்கி எழுத்தர்
- சார்லி - மனோகர் நண்பர்
- ஜூனியர் பாலையா - மனோகர் நண்பர்
- வி. கே. ராமசாமி - கல்யாணி தந்தை
- நாகேஷ்
- சுகுமாரி - மனோகர் அம்மா
- பூர்ணம் விஸ்வநாதன்
- மோகன்லால் - கௌரவத்தோற்றம்
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[2][3] "காதல் கவிதைகள்" என்ற பாடல் மாயாமாளவகௌளை இராகத்திலும்,[4][5] "நாதம் எழுந்ததடி" என்ற பாடல் சிறீரஞ்சனி இராகத்திலும்,[6][4] "தாலாட்டும் பூங்காற்று" என்ற பாடல் சிம்மேந்திரமத்திமம் இராகத்திலும் அமைக்கப்பட்டது.[7][4]
பாடல் | பாடகர்(கள்) | வரிகள் |
---|---|---|
"காதல் கவிதைகள்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | பிறைசூடன் |
"கேளடி என் பாவையே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | பிறைசூடன் |
"நாதம் எழுந்ததடி" | எஸ். ஜானகி, கே. ஜே. யேசுதாஸ் | பிறைசூடன் |
"பிரியசகி ஓ" | மனோ, எஸ். ஜானகி | வாலி |
"தேவதை போல் ஒரு" | தீபன் சக்ரவர்த்தி, மனோ, மலேசியா வாசுதேவன், எஸ். என். சுரேந்தர் | வாலி |
"தாலாட்டும் பூங்காற்று" | எஸ். ஜானகி | வாலி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-03-07. பார்க்கப்பட்ட நாள் 2018-12-25.
- ↑ "Gopura Vaasalile Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 12 August 2022. பார்க்கப்பட்ட நாள் 12 August 2022.
- ↑ "Gopura Vasalile (1991)". Raaga.com. Archived from the original on 8 August 2022. பார்க்கப்பட்ட நாள் 12 August 2022.
- ↑ 4.0 4.1 4.2 [[#CITEREF|]].
- ↑ Charulatha Mani (11 November 2011). "A Raga's Journey — The magic of Mayamalavagowla" (in en). தி இந்து இம் மூலத்தில் இருந்து 11 September 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190911095504/https://www.thehindu.com/features/friday-review/music/a-ragas-journey-the-magic-of-mayamalavagowla/article2618199.ece.
- ↑ Charulatha Mani (26 October 2012). "Six-note splendour". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141129094848/http://www.thehindu.com/features/friday-review/music/sixnote-splendour/article4034523.ece.
- ↑ Charulatha Mani (20 January 2012). "A Raga's Journey — The passionate appeal of Simhendramadhyamam". தி இந்து இம் மூலத்தில் இருந்து 1 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180201141513/http://www.thehindu.com/features/metroplus/a-ragas-journey-the-passionate-appeal-of-simhendramadhyamam/article2817296.ece.
வெளியிணைப்புகள்
தொகு- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் கோபுர வாசலிலே
- [1] பரணிடப்பட்டது 2013-06-26 at Archive.today
- [2] பரணிடப்பட்டது 2013-02-24 at the வந்தவழி இயந்திரம்