எஸ். என். சுரேந்தர்
௭ஸ். ௭ன் சுரேந்தர் (S. N. Surendar) தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகரும், பின்னணிக் குரல் கலைஞருமாவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் 500-இற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இவர் ஒரு தொழில்முறை பின்னணிக்குரல் கலைஞராகவும் உள்ளார். ஏறத்தாழ 600 திரைப்படங்களுக்கு பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.[2][3][4] அவற்றில் 75-இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிகர் மோகனுக்கு பின்னணி பேசியுள்ளார். சுரேந்தர் யாகசாலை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
௭ஸ். ௭ன். சுரேந்தர் | |
---|---|
பிறப்பு | ௭ஸ். ௭ன். சுரேந்தர் 17 பெப்ரவரி 1953 சென்னை, தமிழ் நாடு இந்தியா |
இருப்பிடம் | சென்னை |
பணி | பின்னணிப் பாடகர் பின்னணி பேசுபவர் நடிகர் |
பெற்றோர் | ௭ஸ். ௭ஸ். நீலகண்டன் (தந்தை) |
பிள்ளைகள் | பல்லவி, ஹரி பிரசாந்த்[1] |
உறவினர்கள் | விஜய் (அக்கா மகன்) |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசுரேந்தரின் மூத்த மகள் பல்லவி சுரேந்தர் ஒரு பின்னணிப் பாடகராவார். அவர் துபாயில் குடியேறியுள்ளார். சுரேந்தரின் மகன் ஹரி பிரசாந்த் அந்நியன் திரைப்படத்தில் இளம் விக்ரம் கதாபாத்திரத்தில் நடித்தார்.[1] சுரேந்தர் ஷோபா சந்திரசேகரின் சகோதரர், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மைத்துனர், விஜயின் தாய்மாமா.[5]
திரைப்படப் பட்டியல்
தொகுநடித்த திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | இயக்குநர் | குறிப்புகள் |
---|---|---|---|
1980 | யாகசாலை | ||
1992 | நாளைய தீர்ப்பு | ||
1998 | உரிமைப் போர் | விருந்தினர் தோற்றம் | |
1998 | பிரியமுடன் | ||
1999 | நெஞ்சினிலே | எஸ். ஏ. சந்திரசேகர் | |
2007 | சென்னை 600028 | வெங்கட் பிரபு | |
2008 | அய்யா வழி | ||
2015 | திரைப்பட நகரம் | ||
2016 | சென்னை 600028 II | வெங்கட் பிரபு |
பின்னணிக்குரல் கலைஞராக
தொகுநடிகர்கள் | திரைப்படங்கள் | குறிப்புகள் |
---|---|---|
பிரதாப் போத்தன் | நெஞ்சத்தைக் கிள்ளாதே (1980) அம்மா (1982) புதுமைப் பெண் (1984) மனைவி ரெடி (1987) |
|
எஸ். பி. பாலசுப்பிரமணியம் | பிரியமானவளே | திரைப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளுக்கு மட்டுமே பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். |
ராஜ்குமார் சேதுபதி | சூலம் (1980) | |
அனந்த் நாக் | வீரன் | |
மோகன் சர்மா | சலங்கை ஒலி (1983) | |
ஸ்ரீநாத் | இரயில் பயணங்களில் (1981) | |
மோகன் | கிளிஞ்சல்கள் (1981) திரைப்படம் முதற்கொண்டு கிருஷ்ணன் வந்தான் திரைப்படம் வரை (1987) | 1981 முதல் 1987 வரை |
கார்த்திக் | அலைகள் ஓய்வதில்லை (1981) பாடும் பறவைகள் (1985) |
|
விஜயகாந்த் | சட்டம் ஒரு இருட்டறை (1981) சாட்சி (1983) வெற்றி (1984) |
|
கண்ணன் | காதல் ஓவியம் (1982) | |
ரகுவரன் | ஒரு ஓடை நதியாகிறது (1983) | |
ஆனந்த் பாபு | தங்கைக்கோர் கீதம் (1983) | |
மகேஷ் | கொக்கரக்கோ (1983) | |
சிவன்குமார் | வைதேகி காத்திருந்தாள் (1984) | |
அருண் | தங்க மாமா 3டி (1985) | |
இராஜசேகர் | புதிய தீர்ப்பு (1985) | |
அர்ஜுன் | வேசம் (1985) | |
விஜய் பாபு | படிக்காதவன் (1985) | |
ரகுமான் | நிலவே மலரே (1986) வசந்த ராகம் (1986) மீண்டும் மகான் (1987) |
|
நாகார்ஜுனா | என் பாடல் உனக்காக (1987) | |
இராஜா | இனி ஒரு சுதந்திரம் (1987) வளையல் சத்தம் (1987 |
|
வி. இரவிச்சந்திரன் | பருவ ராகம் (1987) | |
நிழல்கள் ரவி | தென்றல் புயலானது (1989) | |
வெங்கடேஷ் | ஜெயித்துக் காட்டுவேன் (1989) | |
பிரபு ராஜ் | ஒரு புதிய கதை (1990) | |
ஹரிஷ்குமார் | நீ சிரித்தால் தீபாவளி (1991) | |
சுபலேகா சுதாகர் | அபூர்வ சக்தி 369 (1991) | |
ராஜசேகர் | செம்பருத்தி (1991) | |
நீரஜ் | இன்னிசை மழை (1992) | |
சக்தி | மனசு (2000) | |
நெடுமுடி வேணு | அந்நியன் (2005) | |
சந்திர மோகன் | ரனம் (2006) மனமந்தா |
|
விந்து தாரா சிங் | ஸ்ரீ ராம ராஜ்யம் (2011) | தமிழ்ப் பதிப்பில் மட்டும் |
பாடிய பாடல்களில் சில
தொகுஆண்டு | திரைப்படம் | பாடல் | இசையமைப்பாளர் | உடன் பாடியவர்கள் |
---|---|---|---|---|
1966 | சாது மிரண்டால் | ஏ பார் ஆப்பிள் | டி. கே. ராமமூர்த்தி | ஏ. எல். ராகவன், எல். ஆர். ஈஸ்வரி & எஸ். என். சுந்தர் |
1967 | பாமா விஜயம் | வரவு எட்டணா செலவு பத்தணா | எம். எஸ். விஸ்வநாதன் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி & எஸ். என். சுந்தர் |
1968 | தாமரை நெஞ்சம் | ஆலயம் என்பது வீடாகும் | எம். எஸ். விஸ்வநாதன் | பி. சுசீலா & எஸ். என். சுந்தர் |
1978 | அவள் ஒரு பச்சைக் குழந்தை | மாலை இளம் மனதில் | இளையராஜா | ஷோபா சந்திரசேகர் |
1981 | பன்னீர் புஷ்பங்கள் | வெங்காய சாம்பாரும் வேகாத | இளையராஜா | தீபன் சக்ரவர்த்தி & டி. கே. எஸ். கலைவாணன் |
1981 | சட்டம் ஒரு இருட்டறை | தனிமையிலே ஒரு ராகம் | சங்கர் கணேஷ் | எஸ். ஜானகி |
1983 | சாட்சி | மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள் | சங்கர்-கணேஷ் | வாணி ஜெயராம் |
1984 | எழுதாத சட்டங்கள் | கண்ணுக்கு அழகான மாப்பிள்ளை | இளையராஜா | மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகி |
1984 | குடும்பம் | நீலகிரி பூவே | கங்கை அமரன் | எஸ். ஜானகி |
1984 | நான் பாடும் பாடல் | தேவன் கோவில் | இளையராஜா | எஸ். ஜானகி |
1984 | வெற்றி | ஆத்தி ஆத்தி ராசாத்தியே | சங்கர் கணேஷ் | |
ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள் | வாணி ஜெயராம் | |||
காவல் புரிந்தவன் காதல் அறிந்தவன் | வாணி ஜெய்ராம் | |||
1985 | கீதாஞ்சலி | ஒத்த ரூபா | இளையராஜா | மலேசியா வாசுதேவன் |
1985 | நீதியின் மறுபக்கம் | குளிரெடுக்குதுங்க ஜகன மகன | இளையராஜா | எஸ். ஜானகி |
1985 | புது யுகம் | தெய்வம் வந்தது | கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன் & பி. சுசீலாபி. சுசீலா |
அழகே நீ அழலாமா | ஷோபா சந்திரசேகர் | |||
1985 | புதிய சகாப்தம் | புயல் வீசியதோ | கங்கை அமரன் | |
1986 | நம்ம ஊரு நல்ல ஊரு | அழகான சின்ன பயலே | கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன் & செந்தில் |
1986 | ஊமை விழிகள் | கண்மணி நில்லு | மனோஜ்-கியான் | பி. எஸ். சசிரேகா |
மாமரத்து பூவெடுத்து | பி. எஸ். சசிரேகா | |||
குடுகுடுத்த கிழவனுக்கு | ஆபாவாணன் | |||
1986 | வசந்த ராகம் | நான் உள்ளதைச் சொல்லட்டுமா | எம். எஸ். விஸ்வநாதன் | கே. ஜே. யேசுதாஸ் & பி. சுசீலா |
1987 | இவர்கள் இந்தியர்கள் | மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி | மனோஜ் கியான் | வாணி ஜெயராம் |
1987 | மானசா வீனே (கன்னடம்) | ஈ கெலுவே | எம். ரங்கா ராவ் | ராஜ்குமார் பாரதி & பெங்களூர் இலதா |
1987 | சட்டம் ஒரு விளையாட்டு | ஒரு குள்ள நரி | எம். எஸ். விஸ்வநாதன் | கே. ஜே. யேசுதாஸ் & ஷோபா சந்திரசேகர் |
1988 | ஜீவா | சங்கீதம் கேளு நீ கைதாளம் போடு | கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன் & கே. எஸ். சித்ரா |
1988 | ரெண்டும் ரெண்டும் அஞ்சு | கானக் கருங்குயிலே காதல் பரிச்சையிலே | கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன் & கே. எஸ். சித்ரா |
பன்னீர் பூவின் காதலே | கே. எஸ். சித்ரா | |||
1990 | பாலைவன பறவைகள் | நான் இராக்காலம் | இளைய கங்கை | சுந்தர்ராஜன் & பி. எஸ். சசிரேகா |
நாங்க மட்டும் | மலேசியா வாசுதேவன் | |||
1991 | ஈரமான ரோஜாவே | கல்யாண தரகரே | இளையராஜா | மலேசியா வாசுதேவன், மனோ & தீபன் சக்ரவர்த்தி |
1991 | என் ராசாவின் மனசிலே | பாரிஜாத பூவே | இளையராஜா | கே. எஸ். சித்ரா |
1991 | கோபுர வாசலிலே | தேவதை போல் ஒரு | இளையராஜா | மலேசியா வாசுதேவன், மனோ & தீபன் சக்ரவர்த்தி |
1991 | இதயம் | ஏப்ரல் மேயிலே | இளையராஜா | இளையராஜா & தீபன் சக்ரவர்த்தி |
1991 | சிகரம் | முத்தம்மா என்னை | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | எஸ். பி. சைலஜா |
1991 | தாயம்மா | எங்க பாட்டுக்கு | இளையராஜா | மலேசியா வாசுதேவன் & மனோ |
1992 | பிரம்மச்சாரி | வைகை நதி | தேவா | கே. எஸ். சித்ரா |
1992 | இன்னிசை மழை | மங்கை நீ மாங்கனி | இளையராஜா | இளையராஜா |
1992 | நாளைய தீர்ப்பு | மாப்பிள்ளை நான் | மணிமேகலை | மின்மினி & மணிமேகலை |
1993 | மாமியார் வீடு | தெரியாமல் மாட்டி | இளையராஜா | மனோ, தீபன் சக்கரவர்த்தி & சுனந்தா |
1993 | செந்தூரப் பாண்டி | மானே நானே | தேவா | சுவர்ணலதா |
1993 | தாலாட்டு | வண்ணப்புறா | இளையராஜா | |
என்னோடு போட்டி | மனோ & மின்மினி | |||
1993 | வள்ளி | சந்தனம் ஜவ்வாது | இளையராஜா | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
1994 | அமைதிப்படை | வெற்றி வருது வெற்றி வருது | இளையராஜா | மனோ & தீபன் சக்ரவர்த்தி |
1994 | அத்த மக ரத்தினமே | மாம்பூவே | கங்கை அமரன் | கே. எஸ். சித்ரா |
1994 | பதவிப் பிரமாணம் | பூ முடித்து பொட்டு வச்சு | தேவா | |
1994 | பெரிய மருது | ஆலமர வேரு | இளையராஜா | டி. எல். மகராஜன் |
பூந்தேரில் ஏறி | டி. எல். மகராஜன் | |||
1994 | இரசிகன் | சில்லென சில்லென நீர்த் துளி பட்டு | தேவா | சுவர்ணலதா |
1995 | தேவா | சின்ன பையன் சின்ன பொண்ண | தேவா | கே. எஸ். சித்ரா |
1995 | நந்தவன தேரு | அடிச்சு புடிச்சு | இளையராஜா | மனோ & அருண்மொழி |
1995 | விஷ்ணு | ஹம்மா ஹம்மா | தேவா | அனுராதா ஸ்ரீராம் |
1996 | மாண்புமிகு மாணவன் | மாதவரம் | தேவா | தேவா |
டிசம்பர் மாதத்து | சுஜா | |||
1996 | மகாபிரபு | பாவா வா | தேவா | எஸ். ஜானகி |
1999 | பெரியண்ணா | பொள்ளாச்சி மலை ரோட்டுல | பரணி | மலேசியா வாசுதேவன் & சுவர்ணலதா |
நிலவே நிலவே (சோகம்) | ||||
1997 | காதலுக்கு மரியாதை | ஆனந்தக் குயிலின் பாட்டு | இளையராஜா | மலேசியா வாசுதேவன், அருண்மொழி, கே. எஸ். சித்ரா & தேவி |
1997 | ஒன்ஸ்மோர் | பூவே பூவே பெண்பூவே | தேவா | கே. எஸ். சித்ரா |
1998 | சேரன் சோழன் பாண்டியன் | காதலிச்ச பொண்ணு | சௌந்தர்யன் | அருண்மொழி & சாகுல் ஹமீது |
1998 | கவலைப் படாதே சகோதரா | சின்ன சின்ன மலரொன்று | இளையராஜா | பி. உன்னிகிருஷ்ணன், அருண்மொழி & தீபிகா |
1998 | நிலாவே வா | அக்குதே அக்குதே | வித்தியாசாகர் | வித்தியாசாகர் & கோபால் ராவ் |
1999 | என்றென்றும் காதல் | ஜலக்கு ஜலக்கு | மனோஜ் கியான் | சுஜாதா மோகன் |
1999 | நெஞ்சினிலே | பிரைம் மினிஸ்டர் பதவி வேண்டாம் | தேவா | ஹரிணி |
1999 | சேது | மாலை என் வேதனை | இளையராஜா | பி. உன்னி கிருஷ்ணன் & அருண்மொழி |
சேதுவுக்கு சேதுவுக்கு | இளையராஜா | அருண்மொழி | ||
1999 | திருப்பதி ஏழுமலை வெங்கடேசா | திருப்பதி ஏழுமலை வெங்கடேசா | எஸ். ஏ. ராஜ்குமார் | மனோ & வடிவேலு |
2000 | குட்லக் | கடிக்கும் ஜோக்கு ஒன்னு சொல்லு | மனோஜ் கியான் | கே. பிரபாகரன், சுபா & புவனா |
2000 | கண்ணுக்குள் நிலவு | அடிடா மேளத்த | இளையராஜா | எஸ். பி. பாலசுப்பிரமணியம் & அருண்மொழி |
2003 | மனசெல்லாம் | ஹைவேயிசிலே லே லே | இளையராஜா | திப்பு & கார்த்திக் |
2004 | விருமாண்டி | அந்த காண்டாமணி | இளையராஜா | இளையராஜா, கமல்ஹாசன், கார்த்திக் ராஜா, திப்பு |
கர்பகிரகம் விட்டு சாமி வெளியேறுது | இளையராஜா | இளையராஜா, கமல்ஹாசன், கார்த்திக் ராஜா, திப்பு | ||
2011 | சொல்லித்தரவா | அழகிய சேலை அழைக்குது ஆளை | ஈ. கே. பாபி |
விருதுகள்
தொகு- சுரேந்தர் 1999 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றார்.
- 2005 இல் தமிழ்நாடு அரசின் சிறந்த பின்னணிக் குரல் கலைஞருக்கான விருதைப் பெற்றார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "The Hindu : Entertainment Chennai / Interview : Junior with potential". www.thehindu.com. Archived from the original on 16 September 2015. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
- ↑ 2.0 2.1 Kumar, S. R. Ashok (22 சூலை 2010). "Grill Mill: S. N. Surendar". The Hindu (thehindu) இம் மூலத்தில் இருந்து 6 ஆகத்து 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170806060614/http://www.thehindu.com/features/cinema/Grill-Mill-S.-N.-Surendar/article16206174.ece. பார்த்த நாள்: 2015-01-28.
- ↑ "பின்னணிக் குரலால் முன்னணிக்கு வந்த சுரேந்தர்" [Surendar made it big as a dubbing artist]. Thinakaran. 5 October 2019. Archived from the original on 19 August 2020. பார்க்கப்பட்ட நாள் 19 August 2020.
- ↑ ஆனந்த், பாரதி (30 November 2018). "மோகனுக்காக பேசியிருக்கேன்... ஆனா மோகன் எங்கிட்ட பேசினதே இல்ல! – எஸ்.என்.சுரேந்தர்" [I speak for Mohan... But Mohan has never spoken with me! – S. N. Surendar]. Kamadenu. Archived from the original on 7 March 2019. பார்க்கப்பட்ட நாள் 7 March 2019.
- ↑ "kollytalk.com". ww38.kollytalk.com. பார்க்கப்பட்ட நாள் 2020-01-01.