பரணி (இசையமைப்பாளர்)

பரணி (Bharani,பிறப்பு:19 சூன் 1971) என்பவர் ஒரு இந்தியத் திரைப்படத்துறை இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படம் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு திரைப்படங்களிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். சொந்தக் குரலில் சில பாடல்களையும் பாடியுள்ளார்.

பரணி
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்குணசேகரன்
பிறப்பு19 சூன் 1971 (1971-06-19) (அகவை 53)[1]
அருந்தவபுரம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
தொழில்(கள்)இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர், பாடகர்
இசைத்துறையில்1993 – நடப்பு

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

பரணி தஞ்சாவூர் அருகில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். மூன்று சகோதரர்களுடன் இவரது குடும்பத்தில் மூத்த மகனாக பிறந்தார். இவர் பத்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். இவரது பள்ளி நாட்களில் பாடல்கள் இயற்றுவதில் தீவிரமாகச் செயற்பட்டார். 1989இல் வாய்ப்பு தேடிச் சென்னைக்கு வந்தார். இவரது இயற்பெயர் குணசேகரன்.

இவர் தொடக்கத்தில் பாடலாசிரியராக வாய்ப்பு கிடைத்ததும் விஜய் நடித்த நாளைய தீர்ப்பு (1992)[2] திரைப்படத்திற்கு பாடல் எழுதியுள்ளார். பரணி இசையமைப்பாளராக பெரியண்ணா (1999) படத்தில் எஸ். ஏ. சந்திரசேகரால் அறிமுகப்படுத்தப்பட்டார். பார்வை ஒன்றே போதுமே (2001), சார்லி சாப்ளின் (2002) போன்ற படங்களில் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். இவரது 25வது திரைப்படம் வெளுத்து கட்டு (2010)[3]

இசைத்தொகுப்பு

தொகு
ஆண்டு திரைப்படம் குறிப்பு
1999 பெரியண்ணா
2001 பார்வை ஒன்றே போதுமே
2002 சார்லி சாப்ளின்
2002 பேசாத கண்ணும் பேசுமே
2002 சுந்தரா டிராவல்ஸ்
2002 ஜெயா
2002 முத்தம்
2002 ஸ்டைல்
2003 எஸ் மேடம்
2003 சிந்தாமல் சிதறாமல்
2004 மீசை மாதவன்
2005 காற்று உள்ளவரை
2005 திருடிய இதயத்தை
2005 அலையாடிக்கூத்து
2006 ஒரு காதல் செய்வீர்
2008 தரகு
2009 ஒரு காதலன் ஒரு காதலி
2010 வெளுத்துக்கட்டு
2011 கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை
2011 வெங்காயம்
2014 சுற்றுலா
2015 வைரன்
2017 ஒண்டிக்கட்டை இயக்குநராகவும்

மேற்கோள்கள்

தொகு
  1. "Profile of Music Director Bharani - | Lakshman Sruthi - 100% Manual Orchestra |". www.lakshmansruthi.com. Archived from the original on 24 May 2012.
  2. http://www.behindwoods.com/features/Interviews/Interview4/bharani/tamil-cinema-interview-bharani.html
  3. http://www.thehindu.com/features/cinema/grill-mill-music-director-bharani/article505936.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரணி_(இசையமைப்பாளர்)&oldid=4089707" இலிருந்து மீள்விக்கப்பட்டது