படிக்காதவன் (1985 திரைப்படம்)

படிக்காதவன் இயக்குனர் ராஜசேகர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 11-நவம்பர்-1985.

படிக்காதவன்
இயக்கம்ராஜசேகர்
தயாரிப்புஎன். வீராசாமி
வி. ரவிச்சந்திரன்
இசைஇளையராஜா
நடிப்புசிவாஜி கணேசன்
ரஜினிகாந்த்
அம்பிகா
ஜெய்சங்கர்
ரம்யா கிருஷ்ணன்
வடிவுக்கரசி
இந்திரா
டிஸ்கோ சாந்தி
தேவிகாராணி
மாஸ்டர் சுரேஷ்
மாஸ்டர் பிஜு
பேபி ப்ரியா
சூர்யகலா
குண்டு கல்யாணம்
நாகேஷ்
விஜய்பாபு
ஜனகராஜ்
தேங்காய் சீனிவாசன்
பூர்ணம் விஸ்வநாதன்
செந்தாமரை
கிருஷ்ணமூர்த்தி
குள்ளகாந்தி
ஒளிப்பதிவுஏ. ராமசாமி
படத்தொகுப்புஆர். விட்டல்
எஸ். பி. மோகன்
வெளியீடுநவம்பர் 11, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குடும்பப்படம்

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

விதிவசத்தால் தங்கள் அண்ணனை விட்டுப் பிரிகின்றனர் இரு தம்பிகள். ஒரு பெரியவரால் தத்து எடுக்கப்படும் அச்சிறுவர்கள் அவரின் பாதுகாப்பில் வளர்கின்றனர். இளைய அண்ணண் டாக்ஸி ஓட்டுனர் ஆகிறார். அவரின் கடின உழைப்பில் தம்பியைப் படிக்க வைக்கிறார். அண்ணனின் உழைப்பை மறந்து ஊதாரியாகவும் படிப்பில் அக்கறை இல்லாமலும் இருக்கிறார் தம்பி. அவரின் சதியால் ஒரு கொலை வழக்கில் சிக்குகிறார் இளைய அண்ணன். அந்த கொலை வழக்கை விசாரிக்கும் நீதிபதி தான் மூத்த அண்ணன். வழக்கின் முடிவு என்ன, பிரிந்த அண்ணன் தம்பிகள் இணைந்தார்களா என்பதே படத்தின் கதை. இத்திரைப்படம் அண்ணன் தம்பியின் பாசப் பிணைப்பைக் காட்டும் குடும்பச் சித்திரம் ஆகும்.

நடிகர்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. http://en.600024.com/movie/padikathavan/ பரணிடப்பட்டது 2011-12-27 at the வந்தவழி இயந்திரம்