சாது மிரண்டால்
சாது மிரண்டால் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] திருமலை மகாலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், நாகேஷ், கல்பனா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
சாது மிரண்டால் | |
---|---|
இயக்கம் | திருமலை மகாலிங்கம் |
தயாரிப்பு | ஏ. பீம்சிங் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிடோன் |
இசை | டி. கே. ராமமூர்த்தி |
நடிப்பு | டி. ஆர். ராமச்சந்திரன் நாகேஷ் கல்பனா |
வெளியீடு | ஏப்ரல் 14, 1966 |
நீளம் | 3996 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்தொகு
முக்கிய நடிகர்கள்தொகு
- கற்பகமாக மனோரமா
- டி.ஆர். ராமச்சந்திரன் பசுபதியாக
- குட்டி பத்மினி
- பிரபாகர்
சிறப்பு தோற்றங்கள்தொகு
- எஸ்.வி. சசுரணம்
- பகவதராக டி.எஸ்.பாலையா
தயாரிப்புதொகு
நவம்பர் 13, 1958 சென்னையில் வங்கி அதிகாரியான சூர்யநாராயணா,அவரது நண்பர் நாராயண சுவாமி மற்றும் ஜோகிந்தர் ஆகியோரால் பணத்திற்காக கொலை செய்யப்பட்டர்.இந்த சம்பவம் " சூரியநாராயண கொலை வழக்கு" என்று கூறப்பட்டது.மேலும் பீம்சிங்கை திரைகதை எழுத தூண்டியது.இதனை அவர் வெங்கடேசுவர சினிடோன் என்ற நிறுவனத்தின் கீழ் தயாரித்தார்,இவரது உதவியாளர்களான திருமலை மற்றும் மகாலிங்கம் அகியோர் இந்த திரைப்படத்தை இயக்கினர்.வசனங்களை சோமநாதன் எழுதியுள்ளார்.படத்தின் இறுதி நீளம் 3,996 மீட்டர்.
ஒலிப்பதிவுதொகு
இந்த திரைப்படத்தின் ஒலிபதிவை டி.கே.ராமமூர்த்தி இசையமைத்தார், பாடல் வரிகளை ஆலங்குடி சோமு மற்றும் தஞ்சை வனன் எழுதியுள்ளார்.ராம முர்த்தி முன்னதாக ம.சு.விஸ்வநாதனுடன் இசையமைத்தார்.இது அவர் தனிச்சையாக இசையமைத்த முதல் திரைப்படமாகும்.
வெளியீடு மற்றும் வரவேற்புதொகு
சாது மிராண்டல் 14 ஏப்ரல் 1966 இல் வெளியிடபட்டது.இந்த திரைப்படத்தை சன் பீம் நிறுவனம் விநியோகித்தது. இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியான பாராட்டையும் பெற்றது.
வெளியிணைப்புதொகு
- சாது மிரண்டால் at "Complete Index to World Film
சான்றுகள்தொகு
- ↑ "ஸ்பைசி ஆனியன் தளத்தில் சாது மிரண்டால்". 7 திசம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.