கல்பனா (மலையாள நடிகை)

இந்திய நடிகை.
(கல்பனா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கல்பனா ரஞ்சினி என்ற கல்பனா (அக்டோபர் 5, 1965 - சனவரி 25, 2016) திரைத்துறையில் அறிமுகமான நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனிச்சல்ல ஞான் என்ற திரைப்படத்திற்காக 60வது தேசியத் திரைப்பட விருதுகள் விழாவில், சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றுள்ளார்.[1]

கல்பனா
பிறப்புகல்பனா ரஞ்சினி
(1965-10-05)5 அக்டோபர் 1965
கேரளம், இந்தியா
இறப்பு25 சனவரி 2016(2016-01-25) (அகவை 50)
ஐதராபாது, இந்தியா
மற்ற பெயர்கள்கல்பனா ரஞ்சினி
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1983–2016
பெற்றோர்வி.பி.நாயர், விஜயலட்சிமி
வாழ்க்கைத்
துணை
அனில் குமார் (இயக்குநர்) (மணமுறிவு)
பிள்ளைகள்சிறீமயிலி

இவர் எம். டி. வாசுதேவன் நாயர் இயக்கிய மஞ்சு திரைப்படத்தில் 1983 இல் முதன் முதலாக நடித்தார். தமிழில் சின்ன வீடு திரைப்படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக நடித்தார். 1995இல் சதிலீலாவதி என்ற திரைப்படத்திலும், பம்மல் கே. சம்பந்தம், டும் டும் டும் ஆகியத் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றார்.

2016 ஜனவரி 25-ஆம் தேதி திங்கட்கிழமை காலை ஹைதராபாத்தில் மாரடைப்பால் காலமானார்.[2]

குடும்ப வாழ்க்கை

தொகு

திரைப்பட இயக்குனரான அனிலை திருமணம் செய்துகொண்டார். ஊர்வசி, கலாரஞ்சினி ஆகியோர் இவரது சகோதரிகள். இவர் ஞான் கல்பனா என்றொரு மலையாள நூலை எழுதியுள்ளார்.[3]

திரைப்படங்கள்

தொகு
திரைப்படம் ஆண்டு வேடம்
தனிச்சல்ல ஞான் 2012 ரசியா பீவி
முல்லைச்சேரி மாதவன்குட்டி நேமம் பி.ஒ. 2012
இந்தியன் ரு 2011 மேரி
சீனியர் மாண்ட்ரெக் 2010
டுவன்டி20 2008 சுவர்ணம்மா
அஞ்சில் ஒராள் அர்ஜுனன் 2007 சாந்தா
கிருத்யம் 2005 விக்டோரியா
அற்புதத்தீவு 2005 மல்லிக
பங்களாவில் ஔதா 2005
பைவ் பிங்கர்ஸ்‌ 2005 மேரிக்குட்டி
இதயத் திருடன் (தமிழ்) 2005
மாம்பழக்காலம் 2004 நீலிமா
விஸ்மயத்தும்பத்து 2004 மாயா
தாளமேளம் 2004 கனகவல்லி
வரும் வருன்னு வன்னு 2003 வேலைக்காரி
மிழி ரண்டிலும் 2003 சாரதா
மேல்விலாசம் சரியாணு 2003 சரசம்மா பி. வர்க்கீஸ்‌
வெள்ளித்திரை 2003 புஷ்பம்
பம்மல் கே. சம்பந்தம் (தமிழ்) 2002
சிரிக்குடுக்க 2002 சீமந்தினி
காக்கே காக்கே கூடெவிடெ 2002
கண்ணகி 2002 கனகம்மா
காசில்லாதெயும் ஜீவிக்காம் 2002
கிருஷ்ண கோபாலகிருஷ்ணா 2002 சுஜாதா
ஊமைப்பெண்ணின்‌ உரியாடாப்பய்யன் 2002 கன்யகா
இஷ்டம் 2001 மரியாம்மா தோமஸ்
டும் டும் டும் (தமிழ்) 2001
அமேரிக்கன் அம்மாயி 1999
சந்தாமாமா 1999 கொச்சம்மிணி
சார்ளி சாப்லின் 1999
சுவஸ்தம் கிருஹபரணம் 1999 சரளா
அலிபாபாவும் ஆறரைக்கள்ளன்மாரும் 1998 தங்கி
கிராம பஞ்சாயத்து 1998 பங்கஜாட்சி
ஜூனியர் மான்ட்ரேக் 1997
கல்யாண உண்ணிகள் 1997 லூசி
கோட்டப்புறத்தெ கூட்டுகுடும்பம் 1997 சந்திரிகா
மன்னாடியார் பெண்ணின் செங்கோட்ட்டை செக்கன் 1997
நியூஸ்பேப்பர் பாய்‌ 1997
உல்லாசப்பூங்காற்று 1997
எஸ்க்யூஸ் மீ ஏது கோளேஜிலா 1996
காதில் ஒரு கின்னாரம் 1996 மணிக்குட்டி
களிவீடு 1996 மேரி
குடும்பக்கோடதி 1996 குண்டூர் பார்வதி
மலையாள மாசம் சிங்கம் ஒன்னு 1996
காட்டிலெ தடி தேவருடெ ஆனை 1995 கனகா
களமசேரியில் கல்யாண யோகம் 1995 செம்பகச்சேரி சகுந்தளா
பை பிரதர்ஸ் 1995 கோமளம்
புன்னாரம் 1995
சதிலீலாவதி 1995 லீலாவதி
திரீமென் ஆர்மி 1995 இந்திர தேவி
சி.ஐ.டி. உண்ணிக்ருஷ்ணன் பி.ஏ., பி.எட்.]] 1994 கிளாரா
குடும்பவிசேஷம் 1994 ஏலிக்குட்டி
பிடக்கோழி கூவுன்ன நூற்றாண்டு 1994 பொன்னம்மா
பூச்சய்க்காரு மணி கேட்டும் 1994 கார்த்திகா
பட்டர்பிளைஸ் 1993
காந்தர்வம் 1993 கொட்டாரக்கரை கோமளம்
இஞ்சக்காடன் மத்தாயி & சண்ஸ் 1993 அன்னக்குட்டி
காபூளிவாலா 1993 சந்த்ரிக
காவடியாட்டம் 1993
பொன்னுச்சாமி 1993
உப்புகண்டம் பிரதர்ஸ் 1993 ஏலம்மா
என்னோடிஷ்டம் கூடாமோ 1992 பாக்கியம்
இன்ஸ்பெக்டர் பல்ராம் 1991 தாட்சாயணி
இன்னத்தெ புரோக்ராம் 1991 மினிகுட்டி
பூக்காலம் வரவாயி 1991 டியூஷன் டீச்சர்
சவுஹ்ரதம் 1991 அன்னம்மா
டாக்டர் பசுபதி 1990 யூ டி சி குமாரி
கௌதுகவார்த்தைகள் 1990 கமலூ
மாலையோகம் 1990 சுபத்ரா
ஒருக்கம் 1990 ஆலீஸ்‌
சாந்திரம் 1990 அன்னா
ஒரு சாயாஹ்னத்தின்றெ சுவப்னம் 1989 தங்கமணி
பெருவண்ணாபுறத்தெ விசேஷங்கள் 1989 மோகினி
சின்ன வீடு 1985 பாக்கியலட்சுமி
இது நல்ல தமாஷ் 1985 சுந்தரி
மஞ்ஞு 1983 ரஸ்மி

ஆதாரங்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-25. பார்க்கப்பட்ட நாள் 2015-02-07.
  2. நடிகை கல்பனா காலமானார்
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-12-09. பார்க்கப்பட்ட நாள் 2015-02-07.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பனா_(மலையாள_நடிகை)&oldid=4162485" இலிருந்து மீள்விக்கப்பட்டது