எம். டி. வாசுதேவன் நாயர்

சாகித்திய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர்

மாடத்து தெக்கேகாட்டு வாசுதேவன் நாயர். (பி. ஆகஸ்ட் 9, 1933) மலையாளத்தின் முக்கியமான எழுத்தாளர். ஞானபீட பரிசு பெற்றவர்.[1] திரைக்கதையாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

எம். டி. வாசுதேவன் நாயர்

வாழ்க்கை

தொகு

எம்.டி.வாசுதேவன் நாயர் கேரளத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒற்றப்பாலம் வட்டத்திற்கு உட்பட்ட கூடல்லூர் என்ற ஊரில் 1933 ஆக்ஸ்டில் பிறந்தார். தந்தை பெயர் டி.நாராயணன் நாயர். தாய் அம்மாளு அம்மா.[2]

திரிச்சூரில் உள்ள புன்னையூர்க்குளம் என்ற ஊரில் இளம்பருவத்தை செலவிட்டார். பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் 1953ல் ரசாயனத்தில் பட்டம்பெற்றார். சிறுவயதிலேயே மாத்ருபூமி வார இதழில் எழுத ஆரம்பித்த எம்.டி.வாசுதேவன் நாயர் கல்லூரி காலத்திலேயே ரத்தம் புரண்ட மாத்ருககள் என்ற சிறுகதை தொகுதியை வெளியிட்டார்.

உலக சிறுகதை வருடத்தை ஒட்டி மாத்ருபூமி நடத்திய போட்டியில் அவரது "வளர்த்துமிருகங்ஙள்" என்ற சிறுகதை பரிசு பெற்றதும் அவர் பிரபலமானார். 1958ல் எம்டி மாத்ருபூமியின் உதவியாசிரியரானார். எம்.டிவாசுதேவன் நாயரின் முதல் நாவல் பாதிராவும் பகல்வெளிச்சமும். இது தொடராக வெளிவந்தது. முதலில் நூலாக வெளிவந்தது ‘நாலுகெட்டு’ அதற்கு கேரள சாகித்ய அக்காதமி விருது கிடைத்தது. வாசுதேவன் நாயர் எழுதிய முறப்பெண்ணு என்ற சிறுகதையை 1963ல் அவரே திரைக்கதையாக எழுதினார். அது வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைக்கதைகளை எழுதி மலையாள சினிமா உலகத்தின் போக்கையே மாற்றியமைத்தார். நான்குமுறை சிறந்த திரைக்கதைக்கான ஜனாதிபதி விருது பெற்றிருக்கிறார்.

1973ல் அவர் தன் முதல் படத்தை இயக்கினார். நிர்மாலியம் என்ற அந்தப்படம் ஜனாதிபதி விருது பெற்றது. நாயர் சிறுகதைக்கும் நாவலுக்கும் திரைக்கதைக்குமான விருதுகள் பலவற்றை பெற்றுள்ளார். 1970ல் கேந்திர சாகித்ய அக்காதமி விருது பெற்றார். 1995ல் ஞானபீட விருதும் 2005ல் பத்ம விபூஷன் விருதும் கிடைத்தன.

அவருக்கு இருமுறை மணமானது. முதல் மனைவியை விவாகரத்து செய்ய நேர்ந்தது. முதல் மனைவி மூலம் அவருக்கு ஒரு மகள் உண்டு. மீண்டும் கலாமண்டலம் சரஸ்வதியம்மா என்ற நடனமணியை மணம் புரிந்தார். இரு பெண்குழந்தைகள் பிறந்தன. வாசுதேவன் நாயரின் சொந்த வாழ்க்கைச் சிக்கல்களை சினிமாக்கள் காட்டுகின்றன. அக்‌ஷரங்ங்கள் என்ற சினிமா அவரது சொந்த வாழ்க்கையின் சித்திரம் என்று சொல்லப்படுகிறது. அதில் பணக்கார மனைவியால் கைவிடப்பட்டு நடனமணியை மணக்கும் எழுத்தாளனின் வாழ்க்கை உள்ளது.

படைப்புகள்

தொகு

உணர்ச்சிப்பூர்வமான யதார்த்தவாதத்தை எழுதியவர் எம்.டி.வாசுதேவன் நாயர். அவரது நடை மிக அழகானது. அழிந்துகொண்டிருக்கும் கூட்டுக்குடும்ப முறையையும் அங்கே விடுதலைக்காக தவிக்கும் அடுத்த தலைமுறையின் சோகத்தையும் கதையாக்கினார்.

வாசுதேவன் நாயர் எழுதிய பல நாவல்கள் தமிழில் வெளிவந்துள்ளன. காலம், இரண்டாமிடம் ஆகியவை அவற்றில் முக்கியமானவை. அவரது திரைக்கதைகள் நிர்மால்யம், மீரா ஆகியவற்றை கதிரவன் மொழ்பெயர்த்தார்.

விருதுகளும் பதக்கங்களும்

தொகு

பொது

தொகு
  • 1996 டி லிட், கோழிக்கோடு பல்கலைக்கழகம்
  • 2005: பத்ம பூஷண்
  • 1995: ரண்டாமூழம் நாவலுக்காக பாரதீய ஞானபீடம்
  • 1970: காலம் (நாவல்) - கேந்திர சாகித்ய அக்காதமி விருது
  • 1958: நாலுகெட்டு (நாவல்) - கேரள சாகித்ய அக்காதமி
  • 1982: கோபுர நடையில் (நாடகம்) - சங்கீத நாடக அக்காதமி விருது
  • 1986: சுவர்க்கம் (சிறுகதை) - மீண்டும் கேரள சாகித்ய அக்காதமி

சினிமா

தொகு
  • 1967: திரைக்கதை - இருட்டின்றே ஆத்மாவு
  • 1974: சிறந்த படத்திற்கான தேசிய விருது - நிர்மால்யம்
  • 1981: சிறந்த இரண்டாவது படத்திற்கான தேசிய விருது - ஓப்போள்
  • 1983: நர்கீஸ் தத் விருது - ஆரூடம்
  • 2001: சிறந்த சூழியல் படத்திற்கான தேசிய விருது - ஒரு செறு புஞ்சிரி
  • 1990: திரைக்கதைக்கான தேசிய விருது - ஒரு வடக்கன் வீரகதை
  • 1992: திரைக்கதைக்கான தேசிய விருது - கடவு
  • 1993: திரைக்கதைக்கான தேசிய விருது - சதயம்
  • 1995: திரைக்கதைக்கான தேசிய விருது - பரிணயம்

கேரள அரசின் விருதுகள்

தொகு
  • 1970: ஓளவும் தீரவும்
  • 1973: நிர்மாலியம்
  • 1978: பந்தனம்
  • 1980: ஓப்போள்
  • 1981: திருஷ்ணா, வளார்த்து மிருகங்கள்
  • 1983: ஆரூடம்
  • 1985: அனுபந்தனம்
  • 1986: பஞ்சாக்னி
  • 1987: அமிர்தம் கமய
  • 1989: ஒரு வடக்கன் வீரகத
  • 1990: பெருந்தச்சன்
  • 1991: கடவு
  • 1994: பரிணயம்
  • 1994: சுகிருதம்
  • 1998: தயா
  • 2000: ஒரு செறு புஞ்சிரி
  • 2010: பழசி ராஜா

படைப்புகள்

தொகு

நாவல்கள்

தொகு
  • மஞ்சு
  • காலம்
  • நாலுகெட்டு
  • அசுரவித்து
  • விலாப யாத்ர
  • பாதிராவும் பகல்வெளிச்சமும்
  • அரபிப்பொன்னு
  • ரண்டாமூழம்
  • வாரணாசி
  • வெயிலும நிழவும

கதைகள்

தொகு
  • இருட்டினெறே ஆத்மாவு
  • ஓளவும் தீரவும்
  • குட்டியேடத்தி
  • வாரிக்குழி
  • பதனம்
  • பந்தனம்
  • சுவர்க்க வாதில் துறக்குந்ந சமயம்
  • நின்றே ஓர்மைக்கு
  • வானப்பிரஸ்தம்
  • டார் எஸ் சலாம்
  • ரக்தம் புரண்ட மண்தரிகள்
  • வெயிலும் நிலாவும்
  • களிவீடு
  • வேதனயுடே பூக்கள்
  • ஷெர்லக்
  • நீலத்தாமர
  • கண்ணாந்தளிப்பூக்களுடே காலம்இ

திரைக்கதைகள்

தொகு
  • ஓளவும் தீரவும்
  • முறப்பெண்ணு
  • நகரமே நந்நி
  • அசுரவித்து
  • பகல்கினாவு
  • இருட்டின்றே ஆத்மாவு
  • குட்டியேடத்தி
  • நீலத்தாமர
  • ஒப்போள்
  • வில்கானுண்டு ஸ்வப்னங்னள்
  • வாரிக்குழி
  • பந்தனம்
  • வளார்த்துமிருகங்ஙள்
  • இடவழியிலே பூச்ச மிண்டாப்பூச்ச
  • எவிடேயோ ஒரு சத்ரு
  • வெள்ளம்
  • பஞ்சாக்னி
  • நகஷதங்ஙள்
  • அமிர்தம் கமய
  • அபயம் தேடி
  • அரூடம்
  • அக்‌ஷ்ரங்ஙள்
  • ரங்கம்
  • இடநிலங்ஙள்
  • ஆள்கூட்டத்தில் தனியே
  • அடியொழுக்குகள்
  • உயரங்களில்
  • ருதுபேதம்
  • வைசாலி
  • தாழ்வாரம்
  • ஒரு வடக்கன் வீரகதா
  • வேனல்கினாவுகள்
  • ஆரண்யகம்
  • அனுபந்தனம்
  • மித்யா
  • திருஷ்ணா
  • கடவு
  • உத்தரம்
  • சதயம்
  • பெருந்தச்சன்
  • சுகிர்தம்
  • நாலுகெட்டு
  • ஒரு செறு புஞ்சிரி
  • தய
  • எந்நு ஸ்வந்தம் ஜானகிக்குட்டி
  • தீர்த்தாடனம்
  • பழசிராஜா
  • வானபிரஸ்தம்

மேற்கோள்கள்

தொகு
  1. "jnanpith-laureates". Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2014-08-08.
  2. "എം.ടി .വാസുദേവന്നായര്" (in Malayalam). Mathrubhumi (கோழிக்கோடு, இந்தியா). 29 August 2010 இம் மூலத்தில் இருந்து 21 ஜூலை 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150721001802/http://www.mathrubhumi.com/static/about/award/story.php?id=122679. 

இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._டி._வாசுதேவன்_நாயர்&oldid=3545847" இலிருந்து மீள்விக்கப்பட்டது