மோகன் (நடிகர்)

தமிழ்த் திரைப்பட நடிகர்

மோகன் (Mohan, பிறப்பு: 10 மே 1956, இயற்பெயர்: மோகன் ராவ்) ஓர் புகழ்பெற்ற கோலிவுட் நடிகர். கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கன்னட, மலையாள, தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களினால் மிகவும் அறியப்பட்டார்.[1] தமிழில் எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கமலஹாசன் முதன்மை வேடத்தில் நடித்திருந்த கோகிலா என்ற திரைப்படத்தில் அறிமுகமானதால் கோகிலா மோகன் என அழைக்கப்பட்டார்.[2][3] தம்மை உருவாக்கிய பாலு மகேந்திராவை குருவாகக் கருதுகிறார்.[4]

மோகன்
பிறப்பு10 மே 1956 (1956-05-10) (அகவை 68)
பெங்களூர், இந்தியா இந்தியா
மற்ற பெயர்கள்கோகிலா மோகன்,
வெள்ளிவிழா நாயகன்,
மைக் மோகன்
பணிநடிகர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1977 - 1991
1998 - 2000
2008 - இன்றும்
வாழ்க்கைத்
துணை
கௌரி (தி. 1987 - நடப்பு)
பிள்ளைகள்ஆகாஷ் (பி.1989)

நடிகராக

தொகு

மோகன் உணவகம் ஒன்றில் சந்தித்த பி. வி. கராந்த் என்பவர் நாடக உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இவரின் முதல் நாடகத்தை தில்லியிலிருந்தும் விமர்சகர்கள் பாராட்டினர். இவர் கன்னடத் திரையுலகிற்கு பாலு மகேந்திராவின் கோகிலா திரைப்படத்தில் (1977) தமிழ் நடிகர் கமல்ஹாசனுடன் அறிமுகமானார் . 1980 இல் மூடுபனி வெளியானதிலிருந்து இவர் தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவரானார். 1980 களில் மோகன் 'வெள்ளி விழா நாயகன்' என்று அழைக்கப்பட்டார். இவர் நடித்த கிட்டத்தட்ட எல்லா திரைப்படங்களும் வெற்றி அடைந்தது.

கோகிலாவுக்குப் பிறகு, மடலசா (1978) என்ற மலையாளத் திரைப்படத்தில் மோகன் நடித்தார் . இப்படத்தின் வெற்றிக்கு பிறகு, மோகன் என்ற பெயருடன் கிழக்கே போகும் ரயில் (1979) என்ற தமிழ்த் திரைப்படத்தின் மறுஆக்கமான தூர்ப்பு வெள்ளே ரயில் என்ற தெலுங்கு படம் ஒன்றில் கையெழுத்திட்டார். தெலுங்கு பதிப்பை பாபு இயக்கியுள்ளார் . அதன்பிறகு இயக்குநர் மகேந்திரன் இவரை நெஞ்சத்தை கிள்ளாதே தமிழில் அறிமுகப்படுத்தினார். இந்த படம் ஓராண்டு ஓடியதுடன் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது .இவர் நடித்த திரைப்படங்கள் வெள்ளி விழா அல்லது 200 நாட்களுக்கு மேல் ஓட தொடங்கியது. இவர் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை பயணங்கள் முடிவதில்லை திரைப்படத்தில் (1982) பெற்றார். இதனால் தமிழில் பெரிய நடிகரானார்.

இவர் மேடைப் பாடகராக நடித்ததில் மிகவும் பிரபலமானவர். இவர் பல்துறை நடிகரில்லை என்று ஒரு பொதுவான கருத்து இருந்தது. இவரின் தொழில் வாழ்க்கையில் விதி (1984), நூறாவது நாள் (1984), ரெட்டை வால் குருவி (1987), சகாதேவன் மகாதேவன் (1988) போன்ற வெற்றிப் படங்களில் உச்சத்தை அடைந்தார்.

கோவைதம்பியின் மதர்லேண்ட் பிக்சர்சு தயாரிப்பு நிறுவனத்திற்காக அதிக திரைப்படங்களில் நடித்தார். 1986 ஆம் ஆண்டில் மௌன ராகம் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வழங்கினார். தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும் வென்றதோடு இயக்குநர் மணிரத்னத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது.[5]

இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்களில் 25 ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவில் இருக்கும் இளையராஜாவின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவர் 80களின் திரைப்படங்களுக்காகவும், இளையராஜாவின் பாடல்களுக்காகவும் பேசப்படுகிறார்.

குடும்ப வாழ்க்கை

தொகு

மோகன் 1987 இல் கௌரியை மணந்தார். தம்பதியருக்கு ஆகாஷ் என்ற மகன் 1989 இல் பிறந்தார்.

நடித்த திரைப்படங்கள்

தொகு
ஆண்டு வ.எண் திரைப்படம் மொழி குறிப்புகள்
1977 1 கோகிலா கன்னடம்
1978 2 அபரிசித்றா கன்னடம்
1979 3 மதாலசா மலையாளம்
4 தூர்ப்பு வெள்ளே ரயிலு தெலுங்கு
1980 5 மூடுபனி தமிழ்
6 நெஞ்சத்தை கிள்ளாதே தமிழ்
7 ஹென்னின சேடு கன்னடம்
8 முனியன்னா மாதரி கன்னடம்
1981 9 காளி முத்து கன்னடம்
10 கிளிஞ்சல்கள் தமிழ்
11 நிஜமொன்னு பரையட்டே மலையாளம்
1982 12 பொன்முடி மலையாளம்
13 காதோடுதான் நான் பேசுவேன் தமிழ்
14 கடவுளுக்கு ஓர் கடிதம் தமிழ்
15 இதோ வருகிறேன் தமிழ்
16 காதலித்துப் பார் தமிழ்
17 தீராத விளையாட்டுப் பிள்ளை தமிழ்
18 பயணங்கள் முடிவதில்லை தமிழ் சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
19 லாட்டரி டிக்கெட் தமிழ்
20 சின்னஞ்சிறுசுகள் தமிழ்
21 கோபுரங்கள் சாய்வதில்லை தமிழ்
22 இனியவளே வா தமிழ்
1983 23 ஜோதி தமிழ்
24 நெஞ்சமெல்லாம் நீயே தமிழ்
25 அந்த சில நாட்கள் தமிழ்
26 மனைவி சொல்லே மந்திரம் தமிழ்
27 நாலு பேருக்கு நன்றி தமிழ்
28 சரணாலயம் தமிழ்
29 தூங்காத கண்ணொன்று ஒன்று தமிழ்
30 இளமை காலங்கள் தமிழ்
1984 31 ஓ மானே மானே தமிழ்
32 அன்பே ஓடி வா தமிழ்
33 நிரபராதி தமிழ்
34 நெஞ்சத்தை அள்ளித்தா தமிழ்
35 நலம் நலமறிய ஆவல் தமிழ்
36 மகுடி தமிழ்
37 விதி தமிழ்
38 வாய்ப்பந்தல் தமிழ்
38 அம்பிகை நேரில் வந்தாள் தமிழ்
40 24 மணி நேரம் தமிழ்
41 சாந்தி முகூர்த்தம் தமிழ்
42 ஓசை தமிழ்
43 ருசி தமிழ்
44 சட்டத்தை திருத்துங்கள் தமிழ்
45 நான் பாடும் பாடல் தமிழ் சிறப்புத் தோற்றம்
46 நூறாவது நாள் தமிழ்
47 குவா குவா வாத்துகள் தமிழ்
48 வேங்கையின் மைந்தன் தமிழ்
49 பணம் பத்தும் செய்யும் தமிழ்
1985 50 அன்பின் முகவரி தமிழ்
51 அண்ணி தமிழ்
52 தெய்வப் பிறவி தமிழ்
53 நான் உங்கள் ரசிகன் தமிழ்
54 உனக்காக ஒரு ரோஜா தமிழ்
55 தென்றலே என்னைத் தொடு தமிழ்
56 குங்குமச்சிமிழ் தமிழ்
57 ஸ்ரீ ராகவேந்திரா தமிழ் சிறப்புத் தோற்றம்
58 இதய கோவில் தமிழ்
59 உதயகீதம் தமிழ்
60 பிள்ளைநிலா தமிழ்
1986 61 டிசம்பர் பூக்கள் தமிழ்
62 பாரு பாரு பட்டணம் பாரு தமிழ்
63 உயிரே உனக்காக தமிழ்
64 உன்னை ஒன்று கேட்பேன் தமிழ்
65 மௌன ராகம் தமிழ்
66 மெல்லத் திறந்தது கதவு தமிழ்
67 ஆயிரம் பூக்கள் மலரட்டும் தமிழ்
68 சங்கலயில் ஒரு சங்கீதம் தமிழ்
69 அலப்பனா தெலுங்கு
1987 70 பாடு நிலாவே தமிழ்
71 ஒரே ரத்தம் தமிழ்
72 நேரம் நல்லாருக்கு தமிழ் சிறப்புத் தோற்றம்
73 தீர்த்த கரையினிலே தமிழ்
74 நினைக்க தெரிந்த மனமே தமிழ்
75 ரெட்டை வால் குருவி தமிழ்
76 ஆனந்த ஆராதனை தமிழ்
77 கிருஷ்ணன் வந்தான் தமிழ்
78 இது ஒரு தொடர்கதை தமிழ்
1988 79 சகாதேவன் மகாதேவன் தமிழ்
80 வசந்தி தமிழ்
81 சூப்புலு கலசின சுபவேள தெலுங்கு
82 பாசப் பறவைகள் தமிழ்
83 குங்குமக்கோடு தமிழ்
84 போலீஸ் ரிப்போர்ட் தெலுங்கு
1989 85 நாளை மனிதன் தமிழ் சிறப்புத் தோற்றம்
86 பாச மழை தமிழ்
87 மனிதன் மாறிவிட்டான் தமிழ்
88 மாப்பிள்ளை சார் தமிழ்
89 தலைவனுக்கோர் தலைவி தமிழ்
90 இதய தீபம் தமிழ்
91 சொந்தம் 16 தமிழ்
92 ஒரு பொண்ணு நினைச்சா தமிழ்
1990 93 வாலிப விளையாட்டு தமிழ்
94 ஜெகதால பிரதாபன் தமிழ்
1991 95 உருவம் தமிழ்
96 அன்புள்ள காதலுக்கு தமிழ்
2008 97 சுட்ட பழம் தமிழ்
2009 98 கௌதம் கன்னடம்
2012 99 சிக்காரி கன்னடம்
2015 100 அசோகவனா கன்னடம் வெளியீட்டில் தாமதம்

விருதுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. https://m.tamil.samayam.com/photogallery/kollywood/actors/actor-mohan-60th-birthday-celebration-gallery/photoshow/53827677.cms
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-09-23. பார்க்கப்பட்ட நாள் 2012-08-03.
  3. "Mohan's loss". Archived from the original on 2006-04-04. பார்க்கப்பட்ட நாள் 2012-08-03.
  4. "Back to acting, again!". The Hindu (Chennai, India). 28 December 2007 இம் மூலத்தில் இருந்து 15 ஏப்ரல் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160415074655/https://www.youtube.com/watch?v=747-C1rHALI&feature=relmfu. 
  5. "30 years since 'Mouna Ragam': The Mani Ratnam we miss". 31 August 2016.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகன்_(நடிகர்)&oldid=4173590" இலிருந்து மீள்விக்கப்பட்டது