நெஞ்சத்தைக் கிள்ளாதே
நெஞ்சத்தைக் கிள்ளாதே (Nenjathai Killathe) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மகேந்திரன் இயக்கத்தில் [1][2][3] வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், சுஹாசினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
நெஞ்சத்தைக் கிள்ளாதே | |
---|---|
இயக்கம் | மகேந்திரன் |
தயாரிப்பு | நஞ்சப்ப செட்டியார் தேவி பிலிம்ஸ் பிரைவட் லிமிடட் |
இசை | இளையராஜா |
நடிப்பு | மோகன் சுஹாசினி |
ஒளிப்பதிவு | அசோக் குமார் |
வெளியீடு | திசம்பர் 12, 1980 |
நீளம் | 3894 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
தொகுஅண்ணனின் அரவணைப்பில் வாழும் இளம் பெண் விஜி (சுகாசினி). படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் வாகன பழுது பார்க்கும் வேலையில் ஈடுபடும் ராம். இந்த இருவரும் நண்பர்கள் ஆகின்றனர். காலை நேரங்களில் மெல்லோட்டம் ஓடும் விஜிக்கு வழித்துணையாக ராம் வருகிறான். விஜியின் உறவினரும் ஒளிப்படக் கலைஞருமான பிரதாப்புடன் விஜி பழகுவதைக் கண்டு அவனை விஜி காதலிக்கிறாள் என சந்தேகம் கொள்கிறான் ராம். இதுகுறித்து விஜியிடம் ராம் பேசும்போது அப்படி ஏதும் இல்லாததால் கோபமுற்று ராமிடம் இருந்து விஜி விலகுகிறாள். திரும்ப அவளை சமாதானப்படுத்தும் ராம் அவளிடம் தன் காதலைத் தெரிவிக்கிறான். இருவரும் காதலித்துவந்த நிலையில் ராம் அவளை மீட்டும் சந்தேகப்படுபடியாக பேசுகிறான். இதையடுத்து அவனிடம் இருந்து நிரந்தரமாக விஜி பிரிகிறாள். அண்ணனின் அறிவுரையால் விருப்பமில்லாமல் அரை மனதுடன் பிரதாப்பை விஜி மணம் முடிக்கிறாள். அவனுடன் ஒட்டமாலேயே வாழ்ந்து வருகிறாள். பிரதாப்பும் விஜி மனம்மாறுவாள் என காத்திருக்கிறான். பிறகு பிரதாப்பின் அன்பு வெல்கிறது.
நடிகர்கள்
தொகு- சுஹாசினி - விஜியாக
- சரத் பாபு- சந்திரசேகர்
- பிரதாப் போத்தன் - பிரதாப்
- மோகன் இராமன்
- வெண்ணிற ஆடை மூர்த்தி- மகிழுந்து பழுதுபார்க்கும் கடை உரிமையாளர்
- மனோகர்- கீச்சு
- குமரிமுத்து
- பி. சாந்தகுமாரி - மாலா
- வனிதா கிருஷ்ணசந்திரன் - ரம்யா
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.
தமிழ் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "ஹே தென்றலே" | கங்கை அமரன் | பி. சுசீலா | 4:33 | ||||||
2. | "பருவமே புதிய பாடல்" | பஞ்சு அருணாசலம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:16 | ||||||
3. | "உறவெனும்" | கங்கை அமரன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 5:31 | ||||||
4. | "மம்மி பேரு" | கங்கை அமரன் | எஸ். ஜானகி, வெண்ணிற ஆடை மூர்த்தி | 4:32 |
ஆதாரங்கள்
தொகு- ↑ "திரைப்பட இயக்குநர் மகேந்திரன் நேர்காணல் -நக்கீரன் 01-07-2010". Archived from the original on 2010-08-09. பார்க்கப்பட்ட நாள் 2016-06-17.
- ↑ மகேந்திரன் 25-சினிமா விகடன்-25/07/2014[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ மகேந்திரன் இயக்கிய படங்கள் - தினமணி 31 மே 2011