மோகன் (நடிகர்)
மோகன் (Mohan, பிறப்பு: 10 மே 1956, இயற்பெயர்: மோகன் ராவ்) ஓர் புகழ்பெற்ற கோலிவுட் நடிகர். கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கன்னட, மலையாள, தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களினால் மிகவும் அறியப்பட்டார்.[1] தமிழில் எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கமலஹாசன் முதன்மை வேடத்தில் நடித்திருந்த கோகிலா என்றத் திரைப்படத்தில் அறிமுகமானதால் கோகிலா மோகன் என அழைக்கப்பட்டார்.[2][3] தம்மை உருவாக்கிய பாலு மகேந்திராவை குருவாகக் கருதுகிறார்.[4]
மோகன் | |
---|---|
பிறப்பு | 10 மே 1956 பெங்களூர், இந்தியா |
மற்ற பெயர்கள் | கோகிலா மோகன், வெள்ளிவிழா நாயகன், மைக் மோகன் |
பணி | நடிகர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1977 - 1991 1998 - 2000 2008 - இன்றும் |
வாழ்க்கைத் துணை | கௌரி (தி. 1987 - நடப்பு) |
பிள்ளைகள் | ஆகாஷ் (பி.1989) |
நடிகராக
தொகுமோகன் உணவகம் ஒன்றில் சந்தித்த பி. வி. கராந்த் என்பவர் நாடக உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இவரின் முதல் நாடகத்தை தில்லியிலிருந்தும் விமர்சகர்கள் பாராட்டினர். இவர் கன்னடத் திரையுலகிற்கு பாலு மகேந்திராவின் கோகிலா திரைப்படத்தில் (1977) தமிழ் நடிகர் கமல்ஹாசனுடன் அறிமுகமானார் . 1980 இல் மூடுபனி வெளியானதிலிருந்து இவர் தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவரானார். 1980 களில் மோகன் 'வெள்ளி விழா நாயகன்' என்று அழைக்கப்பட்டார். இவர் நடித்த கிட்டத்தட்ட எல்லா திரைப்படங்களும் வெற்றி அடைந்தது.
கோகிலாவுக்குப் பிறகு, மடலசா (1978) என்ற மலையாளத் திரைப்படத்தில் மோகன் நடித்தார் . இப்படத்தின் வெற்றிக்கு பிறகு, மோகன் என்ற பெயருடன் கிழக்கே போகும் ரயில் (1979) என்ற தமிழ்த் திரைப்படத்தின் மறுஆக்கமான தூர்ப்பு வெள்ளே ரயில் என்ற தெலுங்கு படம் ஒன்றில் கையெழுத்திட்டார். தெலுங்கு பதிப்பை பாபு இயக்கியுள்ளார் . அதன்பிறகு இயக்குநர் மகேந்திரன் இவரை நெஞ்சத்தை கிள்ளாதே தமிழில் அறிமுகப்படுத்தினார். இந்த படம் ஓராண்டு ஓடியதுடன் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது .இவர் நடித்த திரைப்படங்கள் வெள்ளி விழா அல்லது 200 நாட்களுக்கு மேல் ஓட தொடங்கியது. இவர் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை பயணங்கள் முடிவதில்லை திரைப்படத்தில் (1982) பெற்றார். இதனால் தமிழில் பெரிய நடிகரானார்.
இவர் மேடைப் பாடகராக நடித்ததில் மிகவும் பிரபலமானவர். இவர் பல்துறை நடிகரில்லை என்று ஒரு பொதுவான கருத்து இருந்தது. இவரின் தொழில் வாழ்க்கையில் விதி (1984), நூறாவது நாள் (1984), ரெட்டை வால் குருவி (1987), சகாதேவன் மகாதேவன் (1988) போன்ற வெற்றிப் படங்களில் உச்சத்தை அடைந்தார்.
கோவைதம்பியின் மதர்லேண்ட் பிக்சர்சு தயாரிப்பு நிறுவனத்திற்காக அதிக திரைப்படங்களில் நடித்தார். 1986 ஆம் ஆண்டில் மௌன ராகம் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வழங்கினார். தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும் வென்றதோடு இயக்குநர் மணிரத்னத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது.[5]
இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்களில் 25 ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவில் இருக்கும் இளையராஜாவின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவர் 80களின் திரைப்படங்களுக்காகவும், இளையராஜாவின் பாடல்களுக்காகவும் பேசப்படுகிறார்.
குடும்ப வாழ்க்கை
தொகுமோகன் 1987 இல் கௌரியை மணந்தார். தம்பதியருக்கு ஆகாஷ் என்ற மகன் 1989 இல் பிறந்தார்.
நடித்த திரைப்படங்கள்
தொகுஆண்டு | வ.எண் | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1977 | 1 | கோகிலா | கன்னடம் | |
1978 | 2 | அபரிசித்றா | கன்னடம் | |
1979 | 3 | மதாலசா | மலையாளம் | |
4 | தூர்ப்பு வெள்ளே ரயிலு | தெலுங்கு | ||
1980 | 5 | மூடுபனி | தமிழ் | |
6 | நெஞ்சத்தை கிள்ளாதே | தமிழ் | ||
7 | ஹென்னின சேடு | கன்னடம் | ||
8 | முனியன்னா மாதரி | கன்னடம் | ||
1981 | 9 | காளி முத்து | கன்னடம் | |
10 | கிளிஞ்சல்கள் | தமிழ் | ||
11 | நிஜமொன்னு பரையட்டே | மலையாளம் | ||
1982 | 12 | பொன்முடி | மலையாளம் | |
13 | காதோடுதான் நான் பேசுவேன் | தமிழ் | ||
14 | கடவுளுக்கு ஓர் கடிதம் | தமிழ் | ||
15 | இதோ வருகிறேன் | தமிழ் | ||
16 | காதலித்துப் பார் | தமிழ் | ||
17 | தீராத விளையாட்டுப் பிள்ளை | தமிழ் | ||
18 | பயணங்கள் முடிவதில்லை | தமிழ் | சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது | |
19 | லாட்டரி டிக்கெட் | தமிழ் | ||
20 | சின்னஞ்சிறுசுகள் | தமிழ் | ||
21 | கோபுரங்கள் சாய்வதில்லை | தமிழ் | ||
22 | இனியவளே வா | தமிழ் | ||
1983 | 23 | ஜோதி | தமிழ் | |
24 | நெஞ்சமெல்லாம் நீயே | தமிழ் | ||
25 | அந்த சில நாட்கள் | தமிழ் | ||
26 | மனைவி சொல்லே மந்திரம் | தமிழ் | ||
27 | நாலு பேருக்கு நன்றி | தமிழ் | ||
28 | சரணாலயம் | தமிழ் | ||
29 | தூங்காத கண்ணொன்று ஒன்று | தமிழ் | ||
30 | இளமை காலங்கள் | தமிழ் | ||
1984 | 31 | ஓ மானே மானே | தமிழ் | |
32 | அன்பே ஓடி வா | தமிழ் | ||
33 | நிரபராதி | தமிழ் | ||
34 | நெஞ்சத்தை அள்ளித்தா | தமிழ் | ||
35 | நலம் நலமறிய ஆவல் | தமிழ் | ||
36 | மகுடி | தமிழ் | ||
37 | விதி | தமிழ் | ||
38 | வாய்ப்பந்தல் | தமிழ் | ||
38 | அம்பிகை நேரில் வந்தாள் | தமிழ் | ||
40 | 24 மணி நேரம் | தமிழ் | ||
41 | சாந்தி முகூர்த்தம் | தமிழ் | ||
42 | ஓசை | தமிழ் | ||
43 | ருசி | தமிழ் | ||
44 | சட்டத்தை திருத்துங்கள் | தமிழ் | ||
45 | நான் பாடும் பாடல் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
46 | நூறாவது நாள் | தமிழ் | ||
47 | குவா குவா வாத்துகள் | தமிழ் | ||
48 | வேங்கையின் மைந்தன் | தமிழ் | ||
49 | பணம் பத்தும் செய்யும் | தமிழ் | ||
1985 | 50 | அன்பின் முகவரி | தமிழ் | |
51 | அண்ணி | தமிழ் | ||
52 | தெய்வப் பிறவி | தமிழ் | ||
53 | நான் உங்கள் ரசிகன் | தமிழ் | ||
54 | உனக்காக ஒரு ரோஜா | தமிழ் | ||
55 | தென்றலே என்னைத் தொடு | தமிழ் | ||
56 | குங்குமச்சிமிழ் | தமிழ் | ||
57 | ஸ்ரீ ராகவேந்திரா | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
58 | இதய கோவில் | தமிழ் | ||
59 | உதயகீதம் | தமிழ் | ||
60 | பிள்ளைநிலா | தமிழ் | ||
1986 | 61 | டிசம்பர் பூக்கள் | தமிழ் | |
62 | பாரு பாரு பட்டணம் பாரு | தமிழ் | ||
63 | உயிரே உனக்காக | தமிழ் | ||
64 | உன்னை ஒன்று கேட்பேன் | தமிழ் | ||
65 | மௌன ராகம் | தமிழ் | ||
66 | மெல்லத் திறந்தது கதவு | தமிழ் | ||
67 | ஆயிரம் பூக்கள் மலரட்டும் | தமிழ் | ||
68 | சங்கலயில் ஒரு சங்கீதம் | தமிழ் | ||
69 | அலப்பனா | தெலுங்கு | ||
1987 | 70 | பாடு நிலாவே | தமிழ் | |
71 | ஒரே ரத்தம் | தமிழ் | ||
72 | நேரம் நல்லாருக்கு | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
73 | தீர்த்த கரையினிலே | தமிழ் | ||
74 | நினைக்க தெரிந்த மனமே | தமிழ் | ||
75 | ரெட்டை வால் குருவி | தமிழ் | ||
76 | ஆனந்த ஆராதனை | தமிழ் | ||
77 | கிருஷ்ணன் வந்தான் | தமிழ் | ||
78 | இது ஒரு தொடர்கதை | தமிழ் | ||
1988 | 79 | சகாதேவன் மகாதேவன் | தமிழ் | |
80 | வசந்தி | தமிழ் | ||
81 | சூப்புலு கலசின சுபவேள | தெலுங்கு | ||
82 | பாசப் பறவைகள் | தமிழ் | ||
83 | குங்குமக்கோடு | தமிழ் | ||
84 | போலீஸ் ரிப்போர்ட் | தெலுங்கு | ||
1989 | 85 | நாளை மனிதன் | தமிழ் | சிறப்புத் தோற்றம் |
86 | பாச மழை | தமிழ் | ||
87 | மனிதன் மாறிவிட்டான் | தமிழ் | ||
88 | மாப்பிள்ளை சார் | தமிழ் | ||
89 | தலைவனுக்கோர் தலைவி | தமிழ் | ||
90 | இதய தீபம் | தமிழ் | ||
91 | சொந்தம் 16 | தமிழ் | ||
92 | ஒரு பொண்ணு நினைச்சா | தமிழ் | ||
1990 | 93 | வாலிப விளையாட்டு | தமிழ் | |
94 | ஜெகதால பிரதாபன் | தமிழ் | ||
1991 | 95 | உருவம் | தமிழ் | |
96 | அன்புள்ள காதலுக்கு | தமிழ் | ||
2008 | 97 | சுட்ட பழம் | தமிழ் | |
2009 | 98 | கௌதம் | கன்னடம் | |
2012 | 99 | சிக்காரி | கன்னடம் | |
2015 | 100 | அசோகவனா | கன்னடம் | வெளியீட்டில் தாமதம் |
விருதுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ https://m.tamil.samayam.com/photogallery/kollywood/actors/actor-mohan-60th-birthday-celebration-gallery/photoshow/53827677.cms
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-09-23. பார்க்கப்பட்ட நாள் 2012-08-03.
- ↑ "Mohan's loss". Archived from the original on 2006-04-04. பார்க்கப்பட்ட நாள் 2012-08-03.
- ↑ "Back to acting, again!". The Hindu (Chennai, India). 28 December 2007 இம் மூலத்தில் இருந்து 15 ஏப்ரல் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160415074655/https://www.youtube.com/watch?v=747-C1rHALI&feature=relmfu.
- ↑ "30 years since 'Mouna Ragam': The Mani Ratnam we miss". 31 August 2016.