பி. வி. கராந்த்

இந்திய திரைப்பட இயக்குநர்

பாபுகோடி வெங்கடரமண கராந்த் (Babukodi Venkataramana Karanth) (பிறப்பு:1929 செப்டம்பர் 19 - இறப்பு: 2002 செப்டம்பர் 1) இவர் இந்தியாவிவின் ஒரு பிரபலமான திரைப்பட மற்றும் நாடக ஆளுமையாவார். இவரது வாழ்நாள் முழுவதும் கன்னடத்திலும் இந்தி மொழியிலும் நவீன இந்திய நாடகத்தின் இயக்குனராகவும், நடிகராகவும் மற்றும் இசைக்கலைஞராகவும் இருந்தார். கன்னட மற்றும் இந்தியில் புதிய அலை சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான இவர் தெற்கு கன்னடத்தில் பிறந்தார்.

பி. வி. கராந்த்
பிறப்புபாபுகோடி வெங்கடரமண கராந்த்
செப்டம்பர் 19, 1929(1929-09-19)
மஞ்சிManchi, மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியா
இறப்பு1 செப்டம்பர் 2002(2002-09-01) (அகவை 72)
பெங்களூர், கருநாடகம், இந்தியா
தேசியம்இந்தியன்
பணிஇசையமைப்பாளர், திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர்
வாழ்க்கைத்
துணை
பிரேமா கராந்த் (1958−2002; இவரது மரணம் வரை)

இவர் தேசிய நாடகப் பள்ளியின் (1962) பழைய மாணவராகவும் பின்னர் அதன் இயக்குநராகவும் இருந்தார். பல வெற்றிகரமான நாடகங்களை இயக்கியுள்ள இவர், கன்னட சினிமாவில் விருது பெற்ற பல படைப்புகளை இயக்கியுள்ளார். இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

சுயசரிதைதொகு

1929 ஆம் ஆண்டில் தெற்கு கன்னட மாவட்டத்தின் பந்த்வால் வட்டத்தில் பாபுகோடிக்கு அருகிலுள்ள மஞ்சி என்ற கிராமத்தில் பிறந்த கராந்தின் நாடகத்துறையின் ஆர்வம் சிறு வயதிலேயே தொடங்கியது. இவர் மூன்றாம் பருவத்தில் படிக்கும்போதே நாடகத்துடனான இவரது முதல் முயற்சி - பி.கே.நாராயணன் இயக்கிய நன்னா கோபாலா என்ற நாடகத்தில் நடித்தார்.

பின்னர் இவர் வீட்டை விட்டு ஓடிவந்து புகழ்பெற்ற குப்பி வீரண்ணா நாடக நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு இவர் ராஜ்குமார் [1] உடன் பணிபுரிந்தார். அவர் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்.

குப்பி வீரண்ணா இவரை கலையில் முதுகலைப் பட்டம் முடிக்க வாரணாசிக்கு அனுப்பினார். அங்கு குரு ஓம்கார்நாத் தாக்கூரின் கீழ் இந்துஸ்தானி இசையில் பயிற்சியும் பெற்றார்.

அதன்பிறகு, கராந்த் தனது மனைவி பிரேமா கராந்துடன் பெங்களூருவின் பழமையான நாடகக் குழுக்களில் ஒன்றான "பெனக்கா" என்பதை அமைத்தார். இது பெங்களூரு நகர கலாவிடருவின் சுருக்கமாகும். பின்னர், பிரேமா டெல்லியில் கற்பித்தல் பணியை மேற்கொண்டார். தொடர்ந்து கராந்தை தேசிய நாடகப் பள்ளி மூலம் ஆதரித்தார். இவர் தேசிய நாடகப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு திரும்பினார். இறுதியில் அதன் இயக்குநரானார்.

பின்னர் அவர் 1962 இல் புது தில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் (என்.எஸ்.டி) பட்டம் பெற்றார். பின்னர் இப்ராஹிம் அல்காசி தலைமையில். 1969 மற்றும் 1972க்கும் இடையில், இவர் புது தில்லியிலுள்ள சர்தார் படேல் வித்யாலயாவில் நாடக பயிற்றுநராக பணியாற்றினார். பின்னர், இந்த இணை பெங்களூருக்கு திரும்பியது. இங்கே கராந்த் சில திரைப்படங்களில் நடிப்பது மற்றும் இசையமைப்பது போன்ற முயற்சிகளில் இடுபட்டார். இந்த முயற்சிகளில் கிரீஷ் கர்னாட் மற்றும் யு. ஆர். அனந்தமூர்த்தி போன்றவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்.

பின்னர் இவர் தேசிய நாடகப் பள்ளிக்கு திரும்பினார். இந்த முறை 1977 இல் அதன் இயக்குநராக இருந்தார். தேசிய நாடகப் பள்ளியின் இயக்குநராக, கராந்த் இந்தியாவின் தொலைதூர மூலைகளுக்கு அரங்குகளை அழைத்துச் சென்றார். தமிழ்நாட்டில் மதுரை போன்ற தொலைதூர இடங்களில் பல பட்டறைகளை நடத்தினார். தேசிய நாடகப் பள்ளியின் இயக்குநராக பணியாற்றிய பின்னர், மத்தியப் பிரதேச அரசு அவரை பாரத பவனின் உதவியுடன் இரங்கமண்டலம் தகவல் தொடர்பு அமைப்பிற்குத் தலைமை தாங்க அழைத்தது.

விருதுகள் மற்றும் கௌரவங்கள்தொகு

1981இல் இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது. 1976இல் மத்திய பிரதேச அரசு காளிதாஸ் சம்மன் விருது வழங்கியது. 1976இல் கர்நாடக அரசு குப்பி வீரண்ணா விருது வழங்கியது. 1976இல் சங்கீத நாடக் அகாடமி விருது வழங்கப்பட்டது

மேலும் காண்கதொகு

குறிப்புகள்தொகு

  1. "B V Karanth redefined Indian theater". 13 July 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 June 2007 அன்று பார்க்கப்பட்டது. He ran away from home when he was a young boy and joined the famous Gubbi professional theatre company, where he was a contemporary of superstar Dr Rajakumar.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வி._கராந்த்&oldid=3315089" இருந்து மீள்விக்கப்பட்டது