உ. இரா. அனந்தமூர்த்தி

கன்னடக் கவிஞர், எழுத்தாளர், ஞானபீட விருது பெற்றவர்.

யூ. ஆர். அனந்தமூர்த்தி என அழைக்கப்படும் உடுப்பி இராஜகோபாலாச்சாரிய அனந்தமூர்த்தி (Udupi Rajagopalacharya Ananthamurthy, கன்னடம்: ಉಡುಪಿ ರಾಜಗೋಪಾಲಾಚಾರ್ಯ ಅನಂತಮೂರ್ತಿ; 21 டிசம்பர் 1932 - 22 ஆகஸ்ட் 2014) கன்னட எழுத்தாளரும் இலக்கியவாதியும் ஆவார். கன்னட இலக்கியத் துறையின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியவர். இந்திய அளவில் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர்.[1] 1994 இல் இந்திய அளவில் இலக்கியத் துறைக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருதைப் பெற்றவர். இந்த விருது இதுவரையிலும் எட்டு கன்னட எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.[2][3] 1998 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்ம பூசன் விருது வழங்கிச் சிறப்பித்தது[4].

உ. ரா. அனந்தமூர்த்தி

பிறப்பு உடுப்பி இராஜகோபாலாச்சாரிய அனந்தமூர்த்தி
திசம்பர் 21, 1932(1932-12-21)
மெலிகே, தீர்த்தஹள்ளி, சிமோகா மாவட்டம், மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியா
இறப்பு ஆகத்து 22, 2014(2014-08-22) (அகவை 81)
பெங்களூர்
தொழில் பேராசிரியர், எழுத்தாளர், கர்நாடக மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தர்
நாடு இந்தியர்
இலக்கிய வகை கதை, இலக்கியம்
இயக்கம் கன்னட இலக்கியம்

புதினங்கள்தொகு

 • சம்ஸ்காரா
 • பாரதிபுரா
 • அவஸ்தே
 • பவா
 • திவ்யா

திரைத்துறைதொகு

இவரது நாவல்களைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்களும் உண்டு.

மொழிபெயர்ப்புதொகு

அவருடைய சம்ஸ்காரா, அவஸ்தை உள்ளிட்ட சில புதினங்கள் தமிழில் வெளிவந்துள்ளன. 1993இல் சாகித்ய அகாதெமியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5].

விமர்சனம்தொகு

இந்தியாவில் சாதி முறைகளை விவரிக்கும் வர்ணாஸ்ரமங்களை எதிர்த்த இவர் 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத்தேர்தலின்போது இந்தியாவின் பிரதமராக மோடி வந்தால் நாட்டைவிட்டுச் சென்றுவிடுவேன் என்று கருத்துக்கூறியதால் பல இன்னல்களுக்கு உள்ளானார்.[6]

மறைவுதொகு

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அனந்தமூர்த்தி, ஆகஸ்ட் 22, 2014 அன்று பெங்களூரில் காலமானார்[7].

சான்றுகள்தொகு

 1. "U.R. Ananthamurthy". International literature festival Berlin. Foundation for Art and Politics and the Berliner Festspiele, German UNESCO committee. பார்த்த நாள் 2007-06-28.
 2. http://win2vin.wordpress.com/2009/09/02/list-of-jnanpith-award-winners-indias-highest-literary-award/
 3. "Jnanapeeth Awards". Ekavi foundation. Ekavi. பார்த்த நாள் 2007-06-28.
 4. "Bharat Ratna given to CS". Online webpage of Indian Express. Indian Express. பார்த்த நாள் 2007-06-29.
 5. சா.கந்தசாமி, அனந்தமூர்த்தி என்னும் அருங்கலைஞன், தினமணி, 29.8.2014
 6. கர்நாடக எழுத்தாளர் அனந்தமூர்த்தி மறைவு
 7. "Jnanpith Award winner U.R. Ananthamurthy passes away". Online webpage of The Hindu. The Hindu. பார்த்த நாள் 2014-08-22.

இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உ._இரா._அனந்தமூர்த்தி&oldid=2715011" இருந்து மீள்விக்கப்பட்டது