சுபலேகா சுதாகர்

இந்திய நடிகர்

சுபலேகா சுதாகர் (பிறப்பு சூரவாஜலா சுதாகர் ; 19 நவம்பர் 1960) என்பவர் ஒரு இந்திய திரைப்பட, தொலைக்காட்சி நடிகராவார். இவர் குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துவருகிறார். இவர் வெற்றிகரமான தொலைக்காட்சித் தொடர்களான சித்தி, "அண்ணி", கோலங்கள், தென்றல் போன்றவற்றில் நடித்துள்ளார்.[1][2] இவர் மமதல கோவிலா தொடரில் நடித்ததற்காக நந்தி விருதைப் பெற்றார்.[3] மேலும் தென்றல் தொடரில் துளசியின் தந்தையும், ஊணமுற்றவருமான முத்துமாணிக்கமாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதினைப் வென்றார்.[4][5]

'சுபலேகா' சுதாகர்
பிறப்பு19 நவம்பர் 1960 (1960-11-19) (அகவை 63)
விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்திய ஒன்றியம்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1982–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
எஸ். பி. சைலஜா
(தி. 1989–தற்போது வரை)
பிள்ளைகள்சிறீகர் (பி. 1991)

தொழில் தொகு

சுபலேகா சுதாகர் ஒரு சில தமிழ் படங்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கே. விஸ்வநாத்தின் "சுபலேகா" படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் அறிமுகமானதால் இவருக்கு "சுபலேகா" சுதாகர் என்ற திரைப் பெயர் கிடைத்தது. இவர் நகைச்சுவை மற்றும் துணை நடிகர் பாத்திரங்களுக்காக புகழ்பெற்றவர்.[6]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

இவர் 1989இல் திரைப்பட பின்னணி பாடகரான எஸ். பி. சைலஜாவை[7] திருமணம் செய்து கொண்டார். இந்த இணையருக்கு சிறீகர் என்ற மகன் 1991இல் பிறந்தார்.

தொலைக்காட்சி தொகு

ஆண்டு பெயர் பாத்திரம் மொழி அலைவரிசை
1997–1998 மர்மதேசம் - இரகசியம் அக்னிராசு தமிழ் சன் தொலைக்காட்சி
1998–1999 மர்மதேசம் - இயந்திரப் பறவை குமாரசாமி
1999–2001 சித்தி கிருஷ்ணா / கண்ணன்
1999 இதி கத காது தெலுங்கு ஈ.டி.வி தெலுங்கு
1999–2002 அனந்தராமனின் திருமணம் தமிழ் சன் தொலைக்காட்சி
2000-2001 மர்மதேசம் - எதுவும் நடக்கும் இரங்காச்சாரி தமிழ் ராஜ் தொலைக்காட்சி
2001-2003 அன்னை இராமநாதன் தமிழ் ஜெயா தொலைக்காட்சி
2002-2003 பெண் தமிழ் சன் தொலைக்காட்சி
2002–2004 அலை ஓசை தமிழ் சன் தொலைக்காட்சி
2002–2005 அம்மாயி காப்புரம் தெலுங்கு ஜெமினி தொலைக்காட்சி
2003–2006 கோலங்கள் நாராயணன் தமிழ் சன் தொலைக்காட்சி
2006 பெண் முத்துக்குமார் சன் தொலைக்காட்சி
2006 இராஜராஜேஸ்வரி அய்யா
2006-2007 அஞ்சலி சுந்தரம் சன் தொலைக்காட்சி
2008 சிம்ரன் திரை ஜெயா தொலைக்காட்சி
2008–2009 ஆனந்தம் விளையாடும் வீடு கலைஞர் தொலைக்காட்சி
2009–2015 தென்றல் முத்துமாணிக்கம் சன் தொலைக்காட்சி
2009–2011 மாதவி கிருஷ்ணமூர்த்தி
2009–2010 பவானி கலைஞர் தொலைக்காட்சி
2012–2014 இளவரசி மோகன் சர்மா சன் தொலைக்காட்சி
மமதல கோவிலா தெலுங்கு ஜெமினி தொலைக்காட்சி
2011–2013 மனசு மமதா கோட்டீஸ்வர ராவ் தெலுங்கு ஈ.டி.வி. தெலுங்கு
2012 அனுபந்தாலு தெலுங்கு ஜெமினி தொலைக்காட்சி
2013–2014 மாமியார் தேவை தமிழ் ஜீ தமிழ்
2015–2017 நந்தினி விசஸ் நந்தினி தெலுங்கு ஈ.டி.வி. பிளஸ்
2015–2019 பிரியமானவள் கிருஷ்ணன் தமிழ் சன் தொலைக்காட்சி
2019 கண்ணுலு மூசினா நீவே கைலாசனந்தா செட்டி தெலுங்கு ஸ்டார் மா
2020 சிட்டி தல்லி போஸ்ட்மாஸ்டர் ஸ்டார் மா
2020–தற்போது அம்மா சூர்யநாராயணா ஈ.டி.வி

திரைப்படவியல் தொகு

தமிழ் தொகு

இந்தி தொகு

குறிப்புகள் தொகு

 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபலேகா_சுதாகர்&oldid=3586993" இருந்து மீள்விக்கப்பட்டது