மர்மதேசம் (தொலைக்காட்சித் தொடர்)

மர்மதேசம் என்பது தமிழ் தொலைக்காட்சிகளில் வெளியான தொடராகும்.[2] I இதனை இயக்குநர் நாகா மற்றும் சி. ஜெ. பாஸ்கர் இயக்கியிருந்தனர். இத்தொடருக்கு இந்திரா சௌந்தரராஜன் கதை எழுதியிருந்தார். இந்த தொலைக்காட்சி தொடர் 1995 லிருந்து 1998 வரை சன் தொலைக்காட்சியில் இரவு 08:30 ஒளிப்பரப்பானது. பின்பு ராஜ் தொலைக்காட்சி 1998லிருந்து 2001 வரை ஒளிபரப்பியது. தற்போது இத்தொடரை வசந்த் தொலைக்காட்சி 3 ஆகஸ்ட் 2015 லிருந்து ஒளிப்பரப்பு செய்தது. அதனை தொடந்து மீண்டும் சன் தொலைக்காட்சியில் 2020 ஆண்டு ஜூலை 27 ஆம் தேதியிலிருந்து ஓளிபரப்பட்டது.[3][4]

மர்மதேசம்
உருவாக்கம்மின்பிம்பங்கள்[1]
இயக்கம்நாகா
(ரகசியம், விடாது கருப்பு, எதுவும் நடக்கும்)
சி. ஜெ. பாஸ்கர்
(சொர்ண ரேகை, இயந்திர பறவை)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
அத்தியாயங்கள்453
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்கைலாசம் பாலசந்தர்
ஓட்டம்30 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைராஜ் தொலைக்காட்சி
மறுஒளிபரப்பு சன் தொலைக்காட்சி
வசந்த் தொலைக்காட்சி
படவடிவம்576i (SDTV)
ஒளிபரப்பான காலம்1997 –
2001
வெளியிணைப்புகள்
இணையதளம்

2019 முதல், திங்கள் முதல் சனி வரை யூடியூப்பில் கவிதாலயா ஒளிபரப்பத் தொடங்கியது.[2][5]

மர்மதேசத்தின் முதல் தொடரான ​​“ரகசியம்” இந்தியில் ஸ்டார் பாரத் தொலைக்காட்சியில் கால பைரவ் ரகசியம் என்ற பெயரில் கதைக்களத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் மறு ஆக்கம் ஒளிபரப்பப்பட்டது.[6]

மீயியற்கை நிகழ்வுகளால் நடப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் மக்களுக்கு, அதன் மர்மத்தினை உடைத்து சொல்லுகின்ற வகையில் திரைகதை அமைக்கப்பட்டிருந்து.

  • ரகசியம் - இத்தொடரில் நவபாசான லிங்கத்தினைப் பற்றிய கதையினை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது..
  • விடாது கருப்பு - கருப்புசாமி எனும் நாட்டார் தெய்வத்தினைப் பற்றிய கதையினை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது.
  • சொர்ண ரேகை - கைரேகை சாத்திரத்தினைப் பற்றிய கதையினை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது.
  • இயந்திர பறவை - வர்மக்கலைப் பற்றிய கதையினை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது.
  • எதுவும் நடக்கும் - கற்பக விருட்சம் எனும் தேவலோகத்து மரத்தினைப் பற்றிய கதையினை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது.

நடிகர்கள்

தொகு

ரகசியம்

தொகு

விடாது கருப்பு

தொகு
  • சேத்தன் - ராஜேந்திரன்
  • தேவதர்சினி - ரீனா
  • மாஸ்டர் லோகேஷ் - சிறுவயது ராஜேந்திரன்
  • சி. டி. ராஜகாந்தம் - பேச்சி
  • மீனாக்குமாரி - ரத்னா (ராஜேந்திரன் சகோதரி)
  • மோகன் ராமன் - டாக்டர் நந்தா
  • சதாசிவம் - ஆமைமுடி தேவர் (எ)ஆனைமுடித்தேவர் , பேச்சியின் மூத்த மகன்
  • ராமச்சந்திரன் - பேச்சியின் இளைய மகன்
  • பூவிலங்கு மோகன் - ஆசிரியர் வரதராஜன்
  • சிவக்கவிதா - ஆனைமுடியாரின் சகோதரி
  • பொன்வண்ணன் - பரமன் (ஆனைமுடியாரின் மைத்துனன்)
  • விஜய் சாரதி - அரவிந்த்
  • ராம்ஜி - சண்முகம்
  • அஜய் ரத்னம் - நாட்டார் தெய்வம் கருப்புசாமி (சில பகுதிகளிலும் தலைப்பு பாடலிலும்)

சொர்ண ரேகை

தொகு

இயந்திர பறவை

தொகு

எதுவும் நடக்கும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The master of mystery - An exclusive interview with Naga, the creator of Marmadesam". Cinema Express. June 30, 2019. Archived from the original on 26 October 2019.
  2. 2.0 2.1 Krishnakumar, Ranjani (1 Aug 2019). "Marmadesam: Tamil's truly captivating nostalgia TV is coming episode-by-episode to YouTube". First Post. Archived from the original on 26 October 2019.
  3. "Marmadesam retelecast on Vasanth TV". cinema.dinamalar.com. 10 Aug 2015. Archived from the original on 26 October 2019.
  4. "நாகாவின் மர்மதேசம், பாலச்சந்தரின் பிரேமி : வசந்த் டிவியில் பாருங்க" [Marmadesam and Premi serial on Vasanth TV]. tamil.filmibeat.com. 8 Aug 2015. Archived from the original on 26 October 2019.
  5. "Cult series Marmadesam released on youtube". The News Minute. 22 June 2019.
  6. "'Kaal Bhairav Rahsya' shoots climax at Maheshwar". The Pioneer.

மேலும் படிக்க

தொகு
  1. Making of Marmadesam - An Interview with Director Naaga
  2. Marmadesam - Vidaathu Karuppu - யாரும் அறியா திகில் ரகசியங்கள்...
  3. கிட்ஸை மனசில் வெச்சுதான் 'விடாது கருப்பு’ எடுத்தோம்..! - நாகா

வெளி இணைப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு