ஆர். என். சுதர்சன்

இந்திய திரைப்பட நடிகர் (1939-2017)

ரட்டிஹள்ளி நாகேந்திர சுதர்சன் (2 மே 1939 - 8 செப்டம்பர் 2017) என்பவர் ஓர் இந்திய நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் முதன்மையாக கன்னடத் திரைப்படங்களில் பணியாற்றினார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[1] ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த இவரது திரைப்பட வாழ்க்கையில், இவர் 250 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[2]

ஆர். என். சுதர்சன்
பிறப்புரட்டிஹள்ளி நாகேந்திர சுதர்சன்
(1939-05-02)2 மே 1939
கருநாடகம், பிரித்தானிய இந்தியா
இறப்பு8 செப்டம்பர் 2017(2017-09-08) (அகவை 78)
பெங்களூர், கர்நாடகம், இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநடிகர், பாடகர், திரைப்பட தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1961–2017
பெற்றோர்ஆர். நாகேந்திர ராவ்
ரத்னாபாய்
வாழ்க்கைத்
துணை
ஷைலஸ்ரீ
பிள்ளைகள்இல்லை

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

ஆர்.என்.சுதர்சன் மூத்த நடிகரான ஆர். நாகேந்திர ராவின் மகன் ஆவார். இவரது அண்ணன் ஆர். என். ஜெயகோபால் (இறப்பு 2008) பிரபல பாடலாசிரியர் இன்னொரு அண்ணனான ஆர். என். கே. பிரசாத் (இறப்பு 2012) பிரபல ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் நடிகை ஷைலஸ்ரீயை திருமணம் செய்து கொண்டார்.[3]

தொழில்

தொகு

1961 ஆம் ஆண்டில், விஜயநகரத வீரபுத்ரா என்ற படத்தில் தன் 21 வயதில் கன்னடத் திரைப்படத் துறையில் முன்னணி நடிகராக சுதர்சன் நுழைந்தார். 60 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த இவர் பின்னர் எதிர்மறை பாத்திரங்களில் நடித்தார்.[4]

சுதர்சன் 2009-10 ஆம் ஆண்டின் மதிப்புமிக்க டாக்டர் ராஜ்குமார் வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கபட்டு கௌரவிக்கப்பட்டார்.

இறப்பு

தொகு

இவர் 8 செப்டம்பர் 2017 அன்று தன் 78வது வயதில் சிறுநீரக நோயால் இறந்தார் [5]

திரைப்படவியல்

தொகு

திரைப்படங்கள்

தொகு

 

தமிழ்

தொகு

தொலைக்காட்சி

தொகு
  • மர்மதேசம் ரகசியம் - ருங்கராஜனாக
  • மாயா மச்சிந்திரா
  • வேலன் பிரம்மராக்சனாக
  • மரகத வீணை
  • அக்னிசாட்சி
  • மை டியர் பூதம் லி ஸ்வானாக (முக்கிய எதிரி)

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. "Kannada actor RN Sudarshan dies at 78 in Bengaluru". பார்க்கப்பட்ட நாள் 5 October 2017.
  2. "Committed to acting".
  3. "Veteran Sandalwood actor, producer RN Sudarshan passes away at 78 in Bengaluru". Bangalore Mirror. http://bangaloremirror.indiatimes.com/bangalore/others/veteran-sandalwood-actor-producer-rn-sudarshan-passes-away-at-78-in-bengaluru/articleshow/60423079.cms. 
  4. "Actor and producer RN Sudarshan dies at 78". 8 September 2017. பார்க்கப்பட்ட நாள் 5 October 2017.
  5. "Veteran actor R.N. Sudarshan no more". பார்க்கப்பட்ட நாள் 5 October 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._என்._சுதர்சன்&oldid=4083818" இலிருந்து மீள்விக்கப்பட்டது