உள்ளே வெளியே (திரைப்படம்)

ரா. பார்த்திபன் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

உள்ளே வெளியே (ullee veliye) 1993 இல் வெளிவந்த குற்றவியல் சார்ந்த தமிழ்த் திரைப்படமாகும். பார்த்தீபன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். பார்த்தீபன், ஐஸ்வர்யா, செண்பகம் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சீதா இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இசைஞானி இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் ஏப்ரல் 16, 1993இல் இது வெளியிடப்பட்டுள்ளது.[1][2][3][4]

உள்ளே வெளியே
இயக்கம்பார்த்தீபன்
தயாரிப்புசீதா
கதைபார்த்தீபன்
இசைஇளையராஜா
நடிப்பு
  • பார்த்தீபன்
  • ஐஸ்வர்யா
  • செண்பகம்
ஒளிப்பதிவுஎம். வி. பன்னீர்செல்வம்
படத்தொகுப்புகணேஷ்
கலையகம்ஏசி அபி. கிரியேஷன்ஸ்
விநியோகம்ஐஸ்வர்யம் பிக்சர்ஸ்
வெளியீடு16 ஏப்ரல் 1993
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்3 கோடி

கதைச்சுருக்கம்

தொகு

கஜேந்திரன் (பார்த்தீபன்) குப்பம் ஒன்றில் வசித்து வந்தான். சிலகாலங்களிற்கு முன்பு கஜேந்திரனின் தந்தை கூலி வேலை செய்பவராகவும் பொதுவுடமை வாதச்செயற்பாடுகளிற்கு ஆதரவாகவும் செயற்பட்டு வந்தார். அவனுடைய தந்தை அவருடைய ஒருவரால் கொல்லப்பட்டதுடன் அக்கொலையை அவருடைய எதுவுமறியாத தாய் ராஜலட்சுமி (சபிதா ஆனந்த்) செய்தாரென சிறைச்சாலைக்கு அனுப்பபட்டும் இருந்தார். கஜேந்திரன் சிறைச்சாலையிலேயே பிறந்தான்.

அதன்பிறகு கஜேந்திரன் காவல் அதிகாரி மீனாவை (ஐஸ்வர்யா) காதலித்தான். பிறகு எம்எல்ஏ முத்துலிங்கம் (ராஜீவ்) அவனுடைய குப்பத்து குடிசைகளை கொழுத்திவிட்டு சில வாக்குகளை பெற்றுகொண்டான். கஜேந்திரன் அப்பாவி ஏழைகளுக்கு ஏற்படும் அநியாயங்களுக்கு எதிராக செயற்பட்டதுடன். இந்தியக் காவல் பணி தேர்வில் வெற்றி பெற்று காவல் அதிகாரி ஆகிறான். ஆனால் அவன் ஏழைகள் உட்பட அனைவரிடமும் இலஞ்சம் வாங்கினான். ஒருநாள் இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கஜேந்திரனின் வீட்டை சோதனை செய்தபோது அதிகளவு பணம் சிக்கியது. ஆனால் நீதிமன்றில் கஜேந்திரனை காதலித்த செண்பகம் (செண்பகம்) அப்பணம் முழுவதும் தான் விபச்சாரம் செய்து பெற்ற பணம் என பொய் கூறி கஜேந்திரனை காப்பாற்றினாள். பின்னர் இதனால் ஏற்பட்ட அவமானத்தால் தற்கொலை செய்துகொண்டாள். கஜேந்திரன் பின்னர் மீனாவை திருமணம் செய்ததுடன் ஊழலுக்கு எதிராக செயற்படுவதே மீதிக்கதையாகும்.

நடிகர்கள்

தொகு
  • பார்த்தீபன் - கஜேந்திரன் (கஜா)
  • ஐஸ்வர்யா - மீனா
  • செண்பகம் - செண்பகம்
  • ராஜீவ் - முத்துலிங்கம்
  • ஆர். என். சுதர்சன் - ராஜரத்தினம்
  • தளபதி தினேஷ்
  • கப்டன் ராஜு
  • சபிதா ஆனந்த்- ராஜலட்சுமி
  • வெண்ணிற ஆடை மூர்த்தி - கான்ஸ்டபிள்
  • சில்க் ஸ்மிதா
  • தக்சாயினி - செல்வி
  • எம்ஆர்கே
  • ஒரு விரல் கிருஷ்ணா ராவோ - கான்ஸ்டபிள்
  • மண்ணாங்கட்டி சுப்ரமணியம்- பொலிஸ் கான்ஸ்டபிள்
  • ஜோக்கர் துளசி
  • கறுப்பு சுப்பையா
  • திடிர் கண்ணையா
  • அழகு

இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். அத்தோடு 1993 ல் இசை வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்வரிகளை வாலி, கங்கை அமரன் மற்றும் புலமைப்பித்தன் ஆகியோர் எழுதியுள்ளனர்.[5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. "filmography of ulley veliye". cinesouth.com. பார்க்கப்பட்ட நாள் 2012-05-27.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "IndiaGlitz - Parthiban takes guard again". indiaglitz.com. 2004-10-16. பார்க்கப்பட்ட நாள் 2012-05-27.
  3. "IndiaGlitz - Parthiban is steadfast". indiaglitz.com. 2006-05-15. பார்க்கப்பட்ட நாள் 2012-05-27.
  4. "Tamil movies : Pachha Kudhira slips. Namitha furious with Parthiban!!". behindwoods.com. 2006-04-18. பார்க்கப்பட்ட நாள் 2012-05-27.
  5. "Ulley Veliye Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2012-05-27.
  6. "Ulle Velliye - Illayaraja". thiraipaadal.com. பார்க்கப்பட்ட நாள் 2012-05-27.